நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?

கேள்வி பதில்

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?

ஹெல்மெட் போடாமல் வண்டியோட்டி விபத்தில் சிக்கினால், விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பணம் கிடைக்காது என்று சொல்லப்படுவது உண்மையா?

ஆர்.எல்.ராஜேஷ், நெல்லை.

என்.ரமேஷ், வழக்கறிஞர்

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?



‘‘உண்மை இல்லை. ஹெல்மெட் போடாமல் வண்டியோட்டுவது ஒரு சிறு குற்றம். விபத்து நடந்து பாதிப்பு ஏற்படுவதற்கு ஹெல்மெட் போடாததும் ஒரு காரணம் என நிரூபிக்கப்படும் போது, இழப்பீட்டுத் தொகை குறைக்கப்படலாம்.’’

என் மனைவியின் நகையை விற்று, சென்னையில் என் பெயரில் 2002-ல் 15 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஃபிளாட் வாங்கினேன். அந்த ஃபிளாட்டை ஒரு கோடி ரூபாய்க்குச் சமீபத்தில் விற்பனை செய்து, முழுப்பணத்தையும் அவளுக்குத் திருப்பித் தந்துவிட்டேன். இது பரிசுத் தொகையா, அல்லது கடனா எப்படி எடுத்துக்கொள்வது, இதற்கான வரிகள் என்ன?

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?

செல்வராஜ், ஈரோடு,

கே.ஆர்.சத்திய நாரயணன், ஆடிட்டர்.

‘‘2002-ல் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சொத்தை, 2017-ல் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளீர்கள். இது ஒரு நீண்ட கால மூலதன ஆதாயமாகும். வீட்டின் செலவுக் குறியீட்டின்படி, ஆதாயத்துக்கு நீங்கள் 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.

இந்த வரி கட்டுவதைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் புதிய வீட்டை வாங்கலாம். அல்லது, மூலதன ஆதாயப் பத்திரமான ஆர்.இ.சி (REC) அல்லது என்.ஹெச்.ஏ.ஐ (NHAI) பத்திரத்தில் மூன்று வருட காலத்துக்கு முதலீடு செய்தால், வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இப்படி 50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும். அதேசமயம், உங்களுடைய மனைவிக்குப் பரிசு அல்லது கடன் எனப் பணமாகக் கொடுக்க விரும்பினாலும், மூலதன ஆதாய வரி அவசியம் செலுத்த வேண்டும்.’’

என் தந்தையின் வயது 60. தாயின் வயது 55. இருவருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என நினைக்கிறேன். சிறந்த பாலிசியைப் பரிந்துரைக்க முடியுமா?

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?



சுரேஷ், கோவை

எஸ். ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர் 

“உங்கள் தந்தைக்கு 60 வயதாகி விட்டதால், அவருக்கு மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பாலிசி எடுக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பாலிசியில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு 2-3 வருடங்கள் வரைக் காத்திருப்பு, மருத்துவச் சோதனை மற்றும் இணை கட்டணம் (கோ பேமென்ட்) 10 முதல் 30% ஆகியவை தவிர்க்க முடியாததாகும்.

ஆகவே, மேலே கூறிய அனைத்து நிபந்தனைகளையும் கண்டறிந்து, அதில் சிறந்த பாலிசியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக பாலிசிகளை அப்போலோ முனீச், ஸ்டார், ரெலிகேர் மற்றும் ராயல் சுந்தரம் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மேலும், உங்களின் தாயாருக்கு 55 வயது என்பதால், அவருக்குத் தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.” 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பங்குச் சந்தையில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். சமீபத்தில் என்னிடமிருந்த பங்குகள் முழுவதையும் 5.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டேன். நான் 30 சதவிகித வரி வரம்பில் உள்ளேன். இப்போது 75 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைத்துள்ள நிலையில், நான் 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டுமா அல்லது மூலதன ஆதாய வரி 15 சதவிகிதம் செலுத்தினால் போதுமா?

ஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா?

முத்து, சேலம்

எஸ்.பிரபு, ஆடிட்டர்

“பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி, 12 மாதங்களுக்குள் விற்பனை செய்தால், அதிலிருந்து கிடைக்கும் லாபம், குறுகிய கால மூலதன ஆதாயமாகும். இதற்கு நீங்கள் 30 சதவிகித வரி வரம்பில் இருந்தாலும், 15 சதவிகித வரி செலுத்தினாலே போதுமானது.

இதுவே, பங்குகளை வாங்கி 12 மாதங்களுக்குப் பிறகு அந்தப் பங்குகளை விற்பனை செய்தால், அதிலிருந்து கிடைக்கும் லாபம், நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும். இதற்கு வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை.”

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.