நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நோபல் வென்ற ரிச்சர்டு தாலர்!

நோபல் வென்ற ரிச்சர்டு தாலர்!
பிரீமியம் ஸ்டோரி
News
நோபல் வென்ற ரிச்சர்டு தாலர்!

நோபல் வென்ற ரிச்சர்டு தாலர்!

ந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் விருதை யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில நாள்களாக பரபரப்பாகவே மாறி யிருந்தது. இந்தப் பட்டியலில் நமது ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராஜனின் பெயரும் அடிபட்டது. இறுதியில் பொருளா தாரத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றவர் அமெரிக்கப் பொருளாதார மேதை ரிச்சர்டு தாலர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவருக்கு, பொருளாதார நடத்தைப் (Behavioral Economics) பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.  

நோபல் வென்ற ரிச்சர்டு தாலர்!

தாலர், நியூ ஜெர்ஸியில் பிறந்தவர். 1967-ம் ஆண்டு கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், யுனிவர்சிட்டி ஆஃப் ரோசெஸ்டரில் 1970-ல் முதுகலைப் பட்டமும், 1974-ல் டாக்டர் பட்டமும் பெற்றார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர், 1995-க்குப் பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் இணைந்தார். மேலும், தேசியப் பொருளாதார ஆராய்ச்சி கழகத்தின் துணை இயக்குநராக 1991 முதல் பணியாற்றி வருகிறார். 

நோபல் வென்ற ரிச்சர்டு தாலர்!



தனது நட்ஜ் தியரி (Nudge Theory) மூலம், பொருளாதாரத்தை மக்களின் மனநிலையோடு ஒப்பீடு செய்ததற்கு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுய கட்டுப்பாடும், அதனை இழந்து செயல்படுதலும் நமது பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது,  திடீரென்று முடிவெடுக்கும் மக்களின் மனநிலை, அவர்களின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி யமைக்கிறது என்பதை விளக்குகிறார் தாலர்.

‘Nudge: Improving Decisions about Health, Wealth, and Happiness’ என்ற அவருடைய புத்தகத்தில், சேமிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் மக்களை எப்படி மேற்கத்திய அரசியல்வாதிகள் ஊக்குவிக் கிறார்கள் என்பது குறித்து விளக்கியுள்ளார். இவர் எழுதிய இந்தப் புத்தகம் நடத்தைப் பொருளா தாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

- ச.ஸ்ரீராம்