நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?

ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

டந்த ஓர் ஆண்டு காலமாகவே ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் மிகச் சிறப்பான லாபத்தைத் தந்திருக்கிறது.  எனினும் இன்றைய நிலையில், இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன, உலக அளவில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு எப்படி இருக்கப்போகிறது, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என  எல்லாவற்றையும் விரிவாக அலசுவோம்.  

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் என்றால் என்ன?  உற்பத்தி செய்யப்படும் ஒரு சில பொருள்களானது   முழுமையடைவதற்குத் தேவைப்படும் கடைசிகட்ட வேதிப்பொருள்தான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாம் அன்றாடும் பயன்படுத்தும் சலவை சோப் துவங்கி, அலங்காரப் பொருள்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள், பெயின்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த வேதிப்பொருள்கள் போன்றவற்றில்  இந்த வேதிப்பொருள்கள் அதிகளவில்  பயன்படுகின்றன. மேலும், செராமிக் துறை, நீர் மேலாண்மை, உணவுப்பொருள்கள் போன்ற வற்றிலும் இதன் தேவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

குணாதியங்கள்

சில இடங்களில் இந்த வேதிப்பொருள்கள் நீர் கசிவுத் தடுப்பானாகவும், வினையூக்கியாகவும், அரிப்பினைத் தாமதப்படுத்துவதிலும், பக்க விளைவுகளைத் தடுக்கக்கூடியதாகவும், தீயினைத் தடுக்கக்கூடியதாகவும் பயன்படுகிறது. 

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?



உலகளவில் ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’  துறையானது சராசரியாக ஆண்டொன்றுக்கு    5% என்றளவுக்கு வளர்ந்துவரும் நிலையில், நம் நாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவு குறைந்து காணப்படுவது, உலக நாடுகள்  இந்தியாவை நோக்கி வருவது, இந்திய நிறுவனங் களும் இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி உலகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விரிவாக்கம் செய்துவருவது என அடுத்த கட்டத்துக்கு  நிறுவனங்கள் நகர்ந்து வருகின்றன. உலக நிறுவனங்கள் ‘அவுட்சோர்சிங்’ என்று சொல்லக்கூடிய வகையில் இந்தியாவில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகின்றன.

இந்தத் துறையில் உள்ள இந்திய சந்தை மதிப்பு  25 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு  இருக்கிறது. உலகச் சந்தையில் இந்திய  பங்களிப்பு 3% மட்டுமே இருக்கும் நிலையில், 2023-ம் ஆண்டு வாக்கில் 6% - 7% வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக கச்சா எண்ணையாக இருப்பதால், இந்த நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல லாபத்தை ஈட்டு வருகின்றன.

இது மட்டுமல்லாமல், சீன அரசாங்கம் மாசுக் கட்டுப்பாட்டுகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள் உற்பத்தி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது இங்குள்ள நிறுவனங்களுக்கு மற்றொரு சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. இதனால், இத்தகைய நிறுவனங்களின் நிதி நிலைமை மேம்பட்டு வருகிறது.  

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?
ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?
ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?

மேலும், இந்தத் துறை நிறுவனங்கள், தங்களின் கடன் சுமைகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  சீனாவின்  பங்களிப்புக் குறைந்துள்ளதால், உலக அளவில் போட்டி குறைந்து காணப்படுகிறது.

உள்நாட்டைப் பொறுத்தவரை, வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதும், நுகர்வோர் பொருள் களின்  தேவைகள் அதிகரிப்பதும்  நிறுவனங்களின் செயல்பாடுகளில் பிரதிபலித்து வருகின்றன.

சவால்கள்

இந்த நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1)  ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முக்கியச் சவாலாக இருப்பது, இந்த நிறுவனங்களைப் பசுமை மண்டலத்திற்குள் கொண்டுவருவது அதாவது, சுற்றுப்புறம் கெடாமல் காற்று மற்றும் நீர் ஆதாரங்களில் கலக்காமல் எடுத்துச்செல்வது.

2) தொழில்நுட்பத்தை ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்தி  அதிக சேதாரத்தை  ஏற்படுத்தாமல்  இருப்பது.

3) பல்வேறு  துறைகள் ஒருங்கிணைப்பு  இல்லாமல் பிரிந்து செயல்படுவது, புதிய உச்சத்துக்குத் தங்கள் பொருள்களை எடுத்துச் செல்லாதது.   

4) சந்தை உத்திகளைப் பயன்படுத்தி  விற்பனையை அதிகரிக்க முயற்சி  மேற்கொள்ளாதது, புதிய கண்டுபிடிப்புகளால்  உலகச் சந்தைகளில் தனித்துவம் பெற்று விளங்குவதில் பின்தங்கியிருப்பது. 

5) போட்டிகள்  நிறைந்த  சந்தையில், அதிகபட்ச  தரத்துடன் தனித்துவம் பெற்று விளங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம்.  

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?

ஸ்பெஷாலிட்டி  கெமிக்கல்ஸ்  நிறுவனங்களின் செயல்பாடுகளையும், அதன் பங்கு விலைகளையும் இனி பார்ப்போம். 

சர்வதேச  நிறுவனங்கள்

பி.ஏ.எஸ்.எஃப் இந்தியா (BASF India)

பார்மா, டெக்ஸ்டைல் மற்றும் விவசாயம் சார்ந்த வேதிப்பொருள்களைத் தயார் செய்வது.  தற்போதைய  பங்கு விலை - ரூ.2,130

எஸ்.ஆர்.எஃப் (SRF)

அக்ரோ கெமிக்கல் மற்றும் பார்மா ஆகியவற்றிற்குத் தேவையான முன்னெடுக்கப் பட்ட  இடைநிலை வேதிப்பொருள்களைத்  தயாரிப்பது. நைலான் பாப்ரிக்ஸ், பாலியெஸ்டர் ஃப்ளிம்ஸ் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வது. இந்தப் பங்கின் தற்போதைய பங்கு விலை - ரூ.1,940.

கிளாரியண்ட் கெமிக்கல்ஸ் (Clariant Chemicals)

கார்களில் பயன்படுத்தப்படும் பிரேக் திரவம், குளிர்பிரதேச நாடுகளில் குறிப்பாக, ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் விமான ஓடுபாதையில் ஏற்படக்கூடிய பனிச்சுவடுகளை அகற்றுவதில் பங்களிப்பு, கட்டுமானத் துறையில் நீர்க்கசிவு  தடுக்கவும், கான்கிரீட் மேற்பூச்சுக்குத் தேவையான  திரவங்களைத் தயாரிப்பதிலும் முன்னணி  நிறுவனமாகும். இந்தப் பங்கின் தற்போதைய   விலை - ரூ.570.

உள்நாட்டு நிறுவனங்கள்

1) ரப்பர் கெமிக்கல்ஸ் -  நாசில் (Nocil)

இதன் பயன்பாடு  மோட்டார் வாகனங்களின் டயர் தயாரிப்பிலும், கன்வேயர் பெல்ட், காலணிகள், ரப்பர் ஷீட் மற்றும் கேபில் தயாரிக்கும்   நிறுவனங்களுக்கும் தேவைப்படும் வேதிப் பொருளாக இருக்கிறது. மேற்சொன்ன பொருள்களின் தயாரிப்புக்குத் தேவைப்படும் பல்வேறு பொருள்களை அளிக்கக்கூடிய  நிறுவனமாக நாசில் விளங்குகிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கடந்த ஐந்து வருடச் செயல்பாடுகளைக் கவனித்தால், அதன் நிகர லாபம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடன்களையும் குறைத்துகொண்டே வருகிறது. இந்தப் பங்கின் தற்போதைய  விலை - ரூ.181.   

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்... இனி எப்படி இருக்கும்?

நாசில் தனது கடன்களைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டு வருவதும், ரப்பர் மற்றும் கச்சா எண்ணெயின் விலை சரிவுடனேயே வர்த்தகம் நடைபெறுவது சாதகமான செய்தியாகும்.

2) சாயம், இடைநிலை  சேர்ப்பான்கள் மற்றும் சாயம்  சேர்க்கப்பட்ட திரவங்கள் - கிரி இண்டஸ்ட்டிரீஸ் (kiri Industries)

இவற்றின் பயன்பாடு டெக்ஸ்டைல் துறையிலும், கார்பெட் விரிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள், தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படும் துணிவகைகள் போச்ன்றவற்றிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படு கின்றன.

கிரி இண்டஸ்ட்டிரீஸ் - இந்தப் பங்கின் தற்போதைய  விலை- ரூ. 515 

3) நிறமி மற்றும் விவசாயம் சார்ந்த வேதிப்பொருள்கள் - சுதர்ஸன் கெமிக்கல்ஸ்

மேற்பூச்சு, பிளாஸ்டிக், அழகு சாதனப்பொருள்கள், இங்க் தயாரிப்புகள் போன்றவற்றுக்குத் தேவையான இடைநிலை வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்.

சுதர்ஸன் கெமிக்கல்ஸ் - இந்தப் பங்கின் தற்போதைய விலை - ரூ.377 

தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருவதும், நிகர லாபம் தொடர்ந்து அதிகரித்து வருவதும், இன்றைய கால கட்டத்தில் அழகுசாதனப் பொருள்களின் விற்பனை பெரிய அளவில் ஏற்றம் காணப்படுவது சாதகமான செய்தி.

4) அல்கெல் பென்சைன் மற்றும் காஸ்டிக் சோடா

தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்தில் சுத்தம் செய்வதற்குத் தேவைப்படும்  வேதிப்பொருள்கள் தவிர, கூழ் மற்றும் பேப்பர், டெக்ஸ்டைல், அலுமினியம், சலவை பவுடர் போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பங்கின் தற்போதைய தற்போதைய விலை - ரூ.73

5) ஆந்திரா சுகர்- இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் 47% வரை சர்க்கரைத் துறையில் இருந்தாலும், மீதமுள்ள 53% கமாடிட்டி கெமிக்கல்கள் கீழ் இருக்கிறது. சல்பர், பொட்டாசியம் குளோரைடு, கால்நடைகளுக்கான தீவனம், பினாயில் போன்றவற்றில் வர்த்தகம் செய்துவருகிறது. இந்தப் பங்கின் தற்போதைய விலை- ரூ.539

இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலில் இவற்றை நன்கு கவனித்து, புரிந்துகொண்ட பின் முதலீடு செய்வது நல்லது.