மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!

இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

து ஒரு மிகப் பிரபலமான கல்லூரி. அந்தக் கல்லூரியில் படிக்கும் கௌதம்,  ஓர் இளநிலைப் பட்டாதாரி. அன்று அவனுக்கு இரண்டாம் ஆண்டின் முதல் நாள் மட்டுமல்ல, அந்தக் கல்லூரியும் அவனுக்கு முதல் நாள். மாணவர்கள் அனைவரும் மிகுந்த பரபரப்பாக இருந்தார்கள். முன்பின் வந்திருக்காத இடம் என்பதால், மாணவன் ஒருவனிடம் வழிகேட்டு வகுப்பறைக்குச் சென்றான்.  

இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!

அவனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘எழில் எழில்’  என்று கத்திக்கொண்டிருந்தனர். அங்கே அவனது பள்ளி நண்பனான ரஞ்சித்தைக் கண்டான்; அவனிடம் சென்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

ரஞ்சித் கௌதமிடம், ‘‘ஏன்டா, காலேஜ் மாத்துறே?’’ என்று கேட்டான். தன்னுடைய அப்பாவிற்கு பணிமாற்றம் ஏற்பட்டதால்,  இந்தக் கல்லூரி வர நேர்ந்ததைச் சொன்னான். பின்பு ரஞ்சித்திடம், ‘‘எழில் யாருடா? ஏன் அந்தப் பேரைத் திரும்பத் திரும்ப சொல்றாங்க?’’ என்று கேட்டான்.

இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!



‘‘எழில்தான்டா இந்த க்ளாஸ் ஏஞ்சல்’’ என்றான். ‘அப்படியா, அவள் எப்படி இருப்பாளோ?’ என்கிற எண்ணம் கெளதம் மனதில் ஓட ஆரம்பித்தது.

யார் இந்த எழில்..?

எழில் போன்ற பெண்கள் அனைத்துக் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். அவள் அழகுக்கு யாருமே ஈடாக முடியாது. அவள் செய்கிற ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மை இருக்கும். அந்தமாதிரியான தேவதைகள் கண்களால் சொல்கிற வேலைகளைத் தலையால் செய்யக் காத்திருக்கிறது  மாணவர் கூட்டம். அவள் பேசுகிறபோது அவளுடைய வார்த்தைகள் மண்ணில்பட்டதும் உறைந்து போகும் மழைத்துளிப்போல் மனதில் பதிந்துவிடும்.

‘‘அவளோட அஞ்சு நிமிஷம் பேசினா போதும்; அன்னைக்கு பூரா எனர்ஜிட்டிக்கா இருக்கும் கெளதம்’’ என்று ரஞ்சித் சொன்னபோது, அவன் கையில் ஒரு கிரீட்டிங் கார்டு இருந்ததைப் பார்த்தான். ரஞ்சித் மட்டுமல்ல, அங்கிருந்த எல்லா மாணவர்கள் கையிலும் ஒரு கிரீட்டிங் கார்டு. இந்த கிரீட்டிங் கார்டுகள் எல்லாம் எழிலுக்காம்.

இதனைக் கேட்ட கௌதமுக்கு ஆர்வம் அதிகமாகியது. தானும் எழிலுக்கு கார்டு வாங்கப் போவ தாகக் கூறி அருகில் இருக்கும் கடைக்குச் சென்றான்.  கௌத முக்குப் பசித்தது. கேன்டீனைத் தேடிச் சென்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு வகுப்புக்குச் சென்றான். அவன் வகுப்பில் நுழைந்தபோது, எல்லா மாணவர்களும் அமைதி யாக உட்கார்ந்து, கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அத்தனை மாணவர்களின் நடுவில் கறுப்பாகவும், சற்று குண்டாவும் ஒரு பெண் நின்று பேசிக்கொண்டிருந்தாள். கெளதம் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவனைப் பார்த்து ‘வெல்கம்’ என்றாள் அந்தப் பெண். யார் இந்தப் பெண் என்று நினைத்தபடி,   சின்னதாகப்  புன்னகைத்துவிட்டு,   தன் நண்பனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.

அப்போது அந்தப் பெண் ‘‘ஹாய், ஐ ஆம் எழில்’’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். கௌதமிற்கு ஒன்றும் புரியவில்லை. அவன் ரஞ்சித்தைப் பார்த்தான். ‘இவளாடா நீ சொன்ன ஏஞ்சல்?’ என்று கேட்கிற மாதிரி இருந்தது அவன் பார்வை.  ரஞ்சித்தும் லேசாகப் புன்னகைத்து விட்டு, அவள் பேச்சைக் கேட்கத் தொடங்கினான்.   

இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!

 ‘‘நண்பர்களே, நான் என்னா லான சின்னச் சின்ன உதவிகளை மத்தவங்களுக்குச் செஞ்சு கிட்டிருக்கேன். அதில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வது எனக்கு மிகப் பெரிய பலம். வாழ்வில் வெற்றிபெற்ற மனிதர்கள் சிலரைப் பற்றி ஆராய்ந்து ரிப்போர்ட் தயாரித்து, அதைக்கொண்டு ஓர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். இதற்கு உங்கள் உதவி தேவை’’  என்று சொல்ல, ‘‘என் உதவி  உனக்கு எப்போதும் உண்டு எழில்’’ என்றபடி எல்லோரும் அவ ளுக்கு கிரீட்டிங் கார்டு தந்தனர்.

எழிலின் சில நிமிடப் பேச்சி னால் கவர்ந்திழுக்கப்பட்ட கெள தமும் அவன் வாங்கி வைத்திருந்த கிரீட்டிங் கார்டினை அவனை அறியாமலே கொண்டு போய்க் கொடுத்தான்.

எதற்கு இந்தக் கல்லூரி சம்பவத்தைச் சொன்னேன் தெரியுமா?

இன்றைய இளைஞர்கள் அழகு என எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களெல்லாம் வெள்ளை வெளேர் என்று பெயின்ட் அடித்த மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண்கள் உடல் பருமனாக இருந்தால் அது ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், பெண்கள் ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் கொஞ்சம் குண்டாக இருந்தால், அதை வைத்தே அவளை ஒதுக்கிவிடுகிறார்கள்.

இளைஞர்கள் தங்கள் நிறம் பற்றிய கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது. நிறம் என்பது வெற்றுத் தோல். அதனை மட்டும் கொண்டு எதையும் சாதிக்க முடியாது. காக்கையும் குயிலும் ஓரே நிறம் தான். ஆனால், எதன் குரல் நம்மை ஈர்க்கிறது? அதில்தான் இருக்கிறது சூட்சுமம். வெளித்தோற்றம் கருமையாக இருந்தாலும் உள்ளம் குயிலின் குரலாய் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

எழில் போன்ற பெண்கள் நம்முடன் படிப்பவர்களாக, பணியாற்று பவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் நம் குடும்பத்தில் ஒருவராக, நம் தாயாக, நம் சகோதரியாகக்கூட இருக்கலாம். நம் நண்பர்களாகவும் இருக்கலாம்.  கறுப்போ, குண்டோ, குள்ளமோ, ஒல்லியோ அது முழுக்க முழுக்க உடல் சம்பந்தப்பட்ட விஷயம். அதை ஒரு காரணமாக நினைத்து, அவர்களை நாம் ஒதுக்கினால், நாம் தவறு செய்கிறோம் என்றுதான் அர்த்தம். உடல்தோற்றும் குறித்த தவறான புரிந்துகொள்ளலிலிருந்து நாம் முதலில் விடுதலை பெறவேண்டும். நாம் விடுதலை பெற்றபின், அதுகுறித்த தாழ்வுமனப்பான்மை அவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அதிலிருந்து அவர்களை விடுதலை பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிறமுள்ள வானவில் சில நொடிகளில் மறைந்துவிடும். ஆனால். நிறமில்லா வானமே நிரந்தரமாகத் தெரியும். வடிவங்களும் உருவங்களும் எதுவாயினும், உயிரினமாய் இருப்பதற்கே முதல் உணர்வு தாருங்கள்.அழகற்றவர்களாக அல்லது நிறமற்றவர்களாக இருப்பதற்குக் கர்வம் கொள்ளுங்கள். நிறமற்றவர்களினால்தான் பல நிறங்கள் உருவாகும்.

அழகு என்பது மனிதனுக்கு மனிதன் மாறக்கூடியது. ஆனால், ஆளுமை என்பது அழகைத் தாண்டி அனைவரையும் ஆச்சர்யத்துக் குள்ளாக்குவது. அழகு இருக்குமிடத்தில் கர்வம் இருக்கும். ஆனால், ஆளுமை இருக்குமிடத்தில் அலட்டல் இருக்காது. வெற்றுப்பூச்சுக்கள் சற்றும் உங்களைச் சலனப்படுத்தாது.

உருவத்தில் நீங்கள் எப்படியிருந்தாலும், உள்ளத்தால் நீங்கள் ஒன்று பட்டுச் செயல்பட்டால், உலகத்தை நிச்சயம் வென்றுவிடலாம்.  நிறங்கள் கொண்டு யாரும் இங்கு வெற்றி பெறுவதில்லை. உறுதியான நிதானம் கொண்டே வெற்றி பெறுகிறார்கள். இன்றே இப்போதே  நிற பேதங்களையும், உருவபேதங்களையும் விட்டு வெளியே வாருங்கள்.

இதுவரை நான் சொன்னது ஆண்களுக்கு மட்டுமான அறிவுரை என்று நினைத்துவிடாதீர்கள். பெண்களும் ஆண்களின் அழகு பற்றிய  தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, அழகையும், ஆளுமையையும் சரியாகப் புரிந்துகொண்டால், நிச்சயம் வெற்றிதான்!

(காலம் வெல்லும்)

படம்: ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 9 - அழகு ஒரு திரை!

ட்விட்டர் டு சோஷியல் ஃபைனான்ஸ் இன்க்!

சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் சி.ஓ.ஓ அந்தோணி நோடோ, தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவர், ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜேக் டோர்சேவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தோணி நோடோ முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை ஃபைனான்ஸ் அதிகாரியாக இருந்தார். பிறகு 2016-ம் ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தின் சி.ஓ.ஓ-ஆக பொறுப்பேற்றார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தி லிருந்து விலகி, சோஷியல் ஃபைனான்ஸ் இன்க்   (SoFi) என்ற நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப் பேற்கவுள்ளார்.