நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

காலாண்டு நிதிநிலை முடிவுகள்... கூடுதல் உஷார்!

காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகும்போது பங்கு முதலீட்டாளர்கள் கூடுதல் உஷாராக இருப்பது அவசியம்.

1. சில நிறுவனங்கள், குறிப்பிட்ட காலாண்டில், லாபத்திலிருந்து இழப்புக்கு (Net Loss) வந்திருக்கும். இதனை மறைத்து, பூசி மெழுகி, அந்தக் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிடும். அதாவது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுவதற்குப் பதில் முந்தையக் காலாண்டுடன் ஒப்பிட்டிருக்கும். அப்போது அந்த நிறுவனம், லாபம் ஈட்டியிருப்பதாகத் தோற்றத்தை உருவாக்கும். இதுபோன்ற நிறுவனங்களிடம் உஷாராக இருப்பது மிக முக்கியம். இந்த தில்லுமுல்லு விஷயங்களைச் சின்ன கம்பெனிகள்தான் செய்யும் என்றில்லை; தங்கள் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்துவிடக்கூடாது என்பதற்காகப் பெரிய நிறுவனங்களும் இப்படிச் செய்வதுண்டு.

2. ஒரு சில நிறுவனங்களில் நிகர விற்பனை உயர்ந்திருக்காது. அதேசமயத்தில், நிகர லாபம் மட்டும் அதிகரித்திருக்கும். இதற்கான காரணம் என்ன என்பதை அலசி ஆராய்வது அவசியம். குறிப்பிட்ட காலாண்டில், அந்த நிறுவனத்தின் இதர வருமானம் அதிகரித்திருக்கும். அந்த நிலையில், விற்பனை அதிகரிக்காதபோதும், லாபம் அதிகரித்திருக்கும். இந்த இதர வருமான அதிகரிப்பு, அடுத்துவரும் காலாண்டுகளில் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், பங்கு முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

காலாண்டு முடிவுகள்

3. சில நிறுவனங்களில், குறிப்பிட்ட காலாண்டில் நிகர விற்பனை மிகவும் அதிகரித்திருக்கும். ஆனால், நிகர லாபம் மிக அதிகமாகக் குறைந்திருக்கும். அந்த நிலையில், எதற்காக லாபம் குறைந்தது என அலசி ஆராய்வது அவசியம். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலாண்டில் அதிக விலை தள்ளுபடியில் பொருள்களை விற்பனை செய்திருக்கும். அப்போது விற்பனை கூடியிருந்தாலும், நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருக்காது. குறிப்பிட்ட காலாண்டில், மூலதனப் பொருள்களுக்கு அதிகமாகச் செலவிட்டிருந்தாலும், லாபம் குறையக்கூடும். இந்தச் செலவு, வரும் காலாண்டுகளிலும் தொடர்ந்தால் சிக்கல்தான்.

4. குறிப்பிட்ட காலாண்டில் ஒரு நிறுவனத்தின் நிகர விற்பனை, நிகர லாபம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் அதிகரித்திருந்தால், அந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. நிகர விற்பனை மற்றும் நிகர லாபம் இரண்டும் இணைந்து அதிகரிக்கும் நிறுவனமே நல்ல நிறுவனம் என்று சொல்லலாம்.

- சேனா சரவணன்

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

கலைச் சொற்கள்!

நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளைச் சரியாகப் புரிந்துகொள்ள இங்கே முக்கிய கலைச் சொற்களுக்கான பொருளைத் தந்திருக்கிறோம்.

காலாண்டு முடிவுகள்

இ.பி.எஸ்.! (Earnings per share)

 ஒரு பங்கு சம்பாதித்து தரும் லாபமே இ.பி.எஸ். எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் (காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்பதுபோல்) ஒரு பங்கின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. நிறுவனத்தின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பி/பி.வி.! (Price to Book Value)

 நிறுவனப் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம் இது. அதாவது, பங்கின் சந்தை விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. இந்த விகிதம் குறைவாக இருந்தால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

புத்தக மதிப்பு!
(Book Value)


 ஒரு நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் புத்தக மதிப்பு. சுருக்கமாக, ஒரு நிறுவனத்தை விற்றால் என்ன தொகைக் கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்!  (Market Capitalization)

 ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டாளர்கள் வசம் உள்ள மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன். ஒரு கம்பெனி எந்த அளவுக்குப் பெரியது என்பதை இது சுட்டிக்காட்டும்.

 முக மதிப்பு! (Face Value)

 ஒரு பங்கின் முக மதிப்பு என்பது, பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்த முக மதிப்பு 1, 2, 5, 10 ரூபாய் என்பதுபோல் இருக்கும்.

செயல்பாட்டு லாப வரம்பு! (Operating Profit Margin)

 நிறுவனம் வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப்பொருட்கள் விலை, பணியாளர் சம்பளம், வரிகள் மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை, அதன் விற்பனை வருமானத்திலிருந்து கழித்தபின் கிடைக்கும் லாபம் செயல்பாட்டு லாபம். இந்த லாபம், விற்பனை வருமானத்தில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் செயல்பாட்டு லாப வரம்பு.

 பி/இ விகிதம்! (Price to Earnings Ratio)

 ஒரு நிறுவனப் பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கினால் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- சி.சரவணன்.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்