மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?

இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?
பிரீமியம் ஸ்டோரி
News
இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

ரு கல்லூரியின் வகுப்பறை ஒன்றில் வெற்றிக்கான வழிகளைப்பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் ஒரு மென்திறன் பயிற்சியாளர். அனைவரும் அவரின் பேச்சால் கவரப்பட்டு ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஒரு மாணவன் மட்டும் அவனுக்கும், இந்த வகுப்பிற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் அமர்ந்திருந்தான். பயிற்சியாளர் வகுப்பில் கவனம் செலுத்துமாறு சொல்லியும், அந்த மாணவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

அவர் இடையிடையே மாணவர்களைப் பார்த்து, ‘‘உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா, சந்தேகம் இருந்தால் கேளுங்கள்’’  என்று கேட்டார். அந்த ஒருவனைத்தவிர, மற்ற மாணவர்கள் ‘‘யெஸ் சார்’’ என்றனர். அவன் எவ்விதச் சலனமும் இன்றி அமர்ந் திருந்ததைப் பார்த்து, அந்தப் பயிற்சி யாளருக்குக் கோபம்தான் வந்தது.

இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?

வகுப்பு முடிந்ததும் அந்த மாணவன் முதலில் வெளியேறினான். மற்ற மாணவர்கள் அந்தப் பயிற்சியாளரிடம் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அந்தப் பயிற்சியாளரின்  எண்ண மெல்லாம் வெளியேறிய அந்த மாணவனைப் பற்றியே இருந்தது. அங்கிருந்த மாணவர் களிடம் விசாரித்தபோது, ‘அவன் எப்பவுமே அப்படித்தான்’ என்று கூறினார்கள்.

மாணவர்களிடம் விடைபெற்று வெளியில் வந்த அவர், அங்கே நின்று கொண்டிருந்த அந்த மாணவனிடம் சென்றார். அவனிடம், “ஏன்பா, வகுப்பில் எந்தவிதச் சலனமும் இல்லாமல் இருந்தாய், நான் கற்றுத் தந்தது உனக்குப் புரியவில்லையா” என்றார்.

அதற்கு அந்த மாணவன், “உங்கள் வகுப்பு மட்டுமல்ல,  எனக்கு எந்த வகுப்பிலுமே ஈர்ப்பு இல்லை சார்” என்றான். அவனது பதில் பயிற்சியாளருக்கு அதிர்ச்சி தந்தது. “உன் பிரச்னை என்னன்னு சொல்” என்றார். அதற்கு அந்த மாணவன், “சார் எதுக்கு உங்க நேரத்தை வேஸ்ட் பண்றீங்க. ஏற்கெனவே இந்த விஷயத்தைப் பலபேர்கிட்ட சொல்லி பைத்தியம்னு பேர் வாங்கிட்டேன்” என்றான்.

இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?அதற்கு அவர், “ நீ என்னன்னு சொன்னால்தான் அதற்கான வழிமுறைகளை நான் சொல்ல முடியும்” என்றார்.

 “சார், நீங்க எல்லோருமே டைம் மேனேஜ்மென்ட், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட், கோல் செட்டிங் என நிறைய விஷயங்கள் சொல்லித் தர்றீங்க. ஆனா, இதெல்லாம் எப்படிப் பண்ணணும்னு சொல்லித் தர்றதில்லை. வகுப்பு எடுக்கறப்போ உற்சாகத்துல நல்லா மோட்டிவேட் ஆகுறோம். அப்பவே எல்லாத்தையும் சாதிச்சுடறமாதிரி உணர்றோம். ஆனா, சீக்கிரமே எல்லாத்தையும் மறந்துட்டு எப்போதும்போல ஆகிடுறோம். இது எனக்கு மட்டும் இருக்கிற ஃபீலிங் இல்ல; 90%  மாணவர்கள் இந்த மனநிலையில தான் இருக்காங்க. இதையெல்லாம் நான் பேசியும், உங்களைப் போன்றவர்களிடம் கேட்டும் கெட்ட பெயர்தான் வாங்கிக் கொண்டேன். இதற்கு நீங்களாவது ஒரு பதில் சொல்ல முடியுமா?’’ என்றான்.

அந்தப் பயிற்சியாளரிடம் அவனது கேள்விக்கான விடை அன்றில்லை. அவனுடைய கேள்விக்கான விடையை ஆறு வருடங்களுக்குப்பிறகு அவர் கண்டறிந்தார். அவர்  கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

1. வெற்றி என்பது கண்ணில் பட்டவுடன் காசுகொடுத்து வாங்கிவிடும் கனியன்று. மனதில் விதைத்து, உழைப்பென்னும் உரமிட்டு, சிரமமேதும் பாராமல் சிந்தனை நீரூற்றி, விருட்சமாகி விளைகிற கனிதான் அது. அந்த மெள்ள மெள்ள வளரும்; சிறுகச் சிறுகத்தான் கிடைக்கும். வெற்றி பெற்றவர்களைப் பார்க்கும்போது, அவர்களின் வெற்றி உடனடியாகக் கிடைத்ததாகத் தோன்றும். ஆனால், அவர்களின் முழுமை யான வாழ்வியலை ஆராய்ந்தால், அந்த மகத்தான வெற்றியானது, ஆயிரம் சிறுசிறு வெற்றிகளையும், ஆயிரம் சிறுசிறு தோல்விகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கும்.

இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?

2. ஒரு செயலைச் செய்யும்முன் அந்தச் செயலின் நுட்பங்களை, அந்தச் செயலினால் வரும் பலன்களை ஆய்ந்தறிய வேண்டும். அந்தச் செயலின் வெற்றி, பல சிறிய செயல்களைக் கொண்டு அமையும்பட்சத்தில், முதல் செயலுக்கான அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும்.

3. நான் வகுப்பில் மென்திறன் பயிற்சி அளித்தபோது, அந்த மாணவர் களுக்கான பாடத்திலிருந்து ஒரு கேள்வி கேட்டேன். அனைவரும் உடனே சொன்னார்கள். நான் இன்னொரு கேள்வியைக் கேட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை. அந்த மாணவர்கள், “இந்தக் கேள்வி பயிற்சி வினாக்களில் இல்லையே சார்” என்றார்கள். “ஆனால், பாடத்தில் பதில் இருக்கிறதே. தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிப்பதற்காக மட்டும் படித்தீர்களேயானால், உங்களால்  எதையும் சாதிக்க முடியாது.  நாம் படிக்கும்போது, அதன் பயன்பாடு குறித்து புரிந்து படிக்கவேண்டும்” என்று சொன்னேன். அப்படிப் படிப்பதுதான் அறிவை மேம்படுத்தும்.

4. கற்பிக்கப்படும் அனைத்தும் கற்பிப்பவர் பாயின்ட் ஆஃப் வியூவ், கற்றுக்கொள்பவரின் பாயின்ட் ஆஃப் வியூவ் என இரண்டு நிலைகளைக் கொண்டது. ஒரு சின்ன உதாரணம்... ஒரு பயிற்சி வகுப்பில் நான் பயிற்சி அளித்தபோது ஒரு கதை சொன்னேன். நகரத்தில் இருக்கும் ஒருவன் ஒரு கிராமத்திற்கு ஆராய்ச்சிக்காகச் செல்கிறான். அவனுக்கு மீன் சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆற்றில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரிடம் சென்று மீனை வாங்கி வந்துவிட்டான். மீண்டும் மறுநாள் அதே இடத்திற்குச் சென்று அவரிடமிருந்து மீன் வாங்கி வந்தான். அதற்கடுத்த நாளும் அவன் சென்று கேட்க, அப்போது இதைக் கவனித்துவந்த அங்கிருந்த மற்றொரு நபர், மீன் பிடிப்பவனிடம் `நீ அவனுக்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது நல்லது’ என்றான்.

நான் மாணவர்களைப் பார்த்து, “மீன் சாப்பிட வேண்டுமென்றால், மீன் பிடிக்கத் தெரியவேண்டுமா என்ன” எனக் கேட்டேன். அதற்கு அந்த மாணவர்கள், “தேவையில்லை சார். அவன் அங்க இருக்கப்போறது கொஞ்சநாள்தான். அவன் மீன் பிடிக்கக் கற்றுக்கொள்வது அவசிய மில்லை” என்றனர். அவர்களின் பாயின்ட் ஆஃப் வியூவில் அது சரிதான். ஆனால், கற்றல் என்பது அன்றைய பொழுதுக்கானது மட்டுமன்று; பின்பு வரும் நாள்களில் அது அவனுக்குப் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த நொடிப்பொழுதை மட்டும் மனதில்கொள்ளாமல் எதிர்வரும் காலத்தையும் கருத்தில்கொண்டு எதையும் கற்க வேண்டும்.

5. இலக்கை நிர்ணயிப்பது மற்றும் பகுப்பாய்வு வகுப்புகளில் (Goal setting and Analytical Classes) நீங்கள் கற்றுக்கொண்டதை உங்களுக்கு ஆர்வமுள்ள ஒன்றில் பொருத்திப் பார்த்து பயன் பெறவேண்டும். இல்லையெனில், நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களினால் எந்தப் பயனும் இருக்காது.

சுருக்கமாக, கற்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். பிறகு, கற்பிக்கும் அனைத்தும் மனதில் தெளிவாகப் பதியும். விருப்பத்துடன் கற்கும் எந்த வகுப்பும் எப்போதும் வீணாவதில்லை.

(காலம் வெல்லும்)

படங்கள்: ப.சரவணக்குமார்

இனி உன் காலம் - 13 - ஏன் பிடிக்கவில்லை படிப்பு..?

சிட் ஃபண்ட் முறைகேடுகள்... தடுக்க புதிய மசோதா!

சிட் ஃபண்டுகளில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தவண்ணம் இருந்ததால் இதற்கான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக, சிட் ஃபண்ட் திருத்த மசோதா - 2018 மக்களவை யில் அறிமுகப்படுத்தப் பட்டது. நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, இந்த மசோதாவை மக்களவை யில் தாக்கல் செய்தார். சிட் ஃபண்ட் ஏலம் விடுவதை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் பதிவு செய்ய வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிறது இந்த மசோதா. அதேபோல, சிட் ஃபண்ட் நடத்துபவ ருக்கான கமிஷன் தொகையை 5 சதவிகிதத்தி லிருந்து 7 சதவிகிதமாக உயர்த்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.