நடப்பு
தொடர்கள்
Published:Updated:

எல்.ஓ.யு ரத்து... ஏற்றுமதிக்குப் பாதிப்பா?

எல்.ஓ.யு ரத்து... ஏற்றுமதிக்குப் பாதிப்பா?
பிரீமியம் ஸ்டோரி
News
எல்.ஓ.யு ரத்து... ஏற்றுமதிக்குப் பாதிப்பா?

சுமதி மோகனபிரபு

றக்குமதியாளர்கள் வெளிநாடு களில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற உதவியாக இருந்த கடன் உத்திரவாதக் கடித முறையைத் (Letter of Undertaking) தவறான முறையில் பயன்படுத்தி, நீரவ் மோடி பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.13,600 கோடி மோசடி செய்ததைத் தொடர்ந்து, இந்திய வங்கிகள் யாவும் இனிமேல் கடன் உத்திரவாதக் கடிதங்களை யாருக்கும் தரக் கூடாது என ஆர்.பி.ஐ அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குப் பாதிப்பு வருமோ எனப் பயந்து போயிருக்கிறார்கள்.

எல்.ஓ.யு ரத்து... ஏற்றுமதிக்குப் பாதிப்பா?

இந்த நடவடிக்கையால் எல்லா ஏற்றுமதியாளர்களுக்கும் பாதிப்பு என்று சொல்ல முடியாது. இந்தக் கடன் உத்திரவாதக் கடிதத் தடையானது, இதுவரை குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்றுவந்த வைர வியாபாரிகளுக்கு அதிகளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.  ஜவுளி, வாகனத்துறை மற்றும் இதரத் துறைகளில் வெளிநாடுகளில் கடன் பெற்று வந்த நிறுவனங் களின் லாப விகிதம் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், நேர்மையான முறையில் இறக்குமதி செய்பவர்கள், லெட்டர் ஆஃப் கிரெடிட் மற்றும் பேங்க் கேரன்டி ஆகியவற்றின் உதவியுடன் எந்தவொரு பாதிப்புமின்றி தங்களது ஏற்றுமதித் தொழிலைத் தொடரலாம்.

இந்த நடைமுறையின்கீழ் இறக்குமதிக் கடன்களைப் புதுப்பிக்க முடியாத நிறுவனங்கள் டாலர் கடனைத் திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அடுத்த சில வாரங்களுக்கு ஓரளவு உயரவும் வாய்ப்புள்ளது. உள்நாட்டு வங்கிகளின் கடன் அளவும் வட்டி விகிதமும் சற்றே உயரலாம்.

இறக்குமதி மீதான நாட்டத்தைக் சற்றுக் குறைத்து, உள்ளூர் கடன் வளர்ச்சியை ஆர்.பி.ஐ-யின் இந்த அறிவிப்பு அதிகரிக்க உதவும்!