மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

ங்குச் சந்தை முதலீடு பற்றி நான் கூறிய விஷயங்களைப் படித்துப் பார்த்த வாசகிகள், `மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன' என்று கேட்டு, அடுத்த அத்தியாயத்துக்கு அடியெடுத்துத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்காகவும் மியூச்சுவல் ஃபண்டின் அருமை பெருமைகளைச் சொல்லிவிடுகிறேன்! 

டூ இன் ஒன்

பணத்தைச் சேர்த்து வைப்பதில் ரிஸ்க்கே வேண்டாம் என்று நாம் நினைத்தால், பேங்க் எஃப்.டி அல்லது ஆர்.டி-யில் சேமிப்போம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் துணிந்தால், நேரடி யாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம். தனித்தனியான இந்த இரண்டு விஷயங்களையும் ஒருசேர நமக்குத் தருகின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். அதாவது, அவை நாம் தரும் பணத்தை நமது ரிஸ்குக்கேற்ற மாதிரி கடன் சந்தையிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்கின்றன.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

சமர்த்து மேனேஜர்கள்

நாம் தரும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கென்று ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலும் ஆய்வுக்குழு இருக்கும். குறிப்பாக, ஒவ்வொரு ஃபண்டுக்கும் ஒரு மேனேஜர் இருப்பார். உதாரணத்துக்கு, லார்ஜ்கேப் ஃபண்ட் என்றால், நன்கு செயல்படக்கூடிய பெரிய கம்பெனிகளை அந்த மேனேஜர் தேர்ந்தெடுத்து அவற்றில் முதலீடு செய்வார். அந்தப் பங்குகளைத் தகுந்த ஏற்ற இறக்கத்தில் வாங்கி விற்று, லாபத்தை அதிகரிப்பார். அதனால், ஒரு ஃபண்டைத் தேர்வு செய்யும்முன் அந்த ஃபண்டின் மேனேஜர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

யாராவது ஒருவர் நமக்கு ஒரு ஃபண்டை சிபாரிசு செய்தால், முதலில் அந்த நிறுவனம் நம்பகமானதா என்று கவனிக்க வேண்டும். பிறகு, அந்த ஃபண்ட் திட்டம் எப்படிப் பட்டது, எந்தெந்த கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது, அந்த ஃபண்டின் கடந்த கால வருமானம் (குறைந்தது ஐந்தாண்டு காலத்துக்கு) எப்படி என்று பார்க்க வேண்டும். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், குறைந்தது ஐந்தாண்டுகளுக்குமேல் உங்கள் முதலீட்டை வைத்திருந்தால்தான், ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

திட்டங்கள் பல வகை

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பல வகைப்பட்டவை. லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப், மல்டிகேப் போன்ற ஃபண்ட் திட்டங்கள் கம்பெனிகளின் மூலதன அளவை வைத்து வகுக்கப்பட்டவை. இதுமாதிரி பல வகைப்பட்ட ஃபண்டுகள் உள்ளன. வரிச் சலுகை தரும் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களுக்குச் சம்பளதாரர்களிடம் அமோக வரவேற்பு உண்டு.

கடன் ஃபண்டுகள்

குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்ட நினைப்பவர்கள் கடன் ஃபண்டுகளில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேர்க்கலாம். இதனால் பள்ளிக் கட்டணம் பற்றிய கவலையில்லாமல் இருக்கலாம். இதில் முதலீடு செய்யப்படும் பணம் பெரும்பாலான வேளைகளில் குறைய வாய்ப்பு இல்லை. வருமானம், வங்கி எஃப்.டி அளவுக்குக் கிடைக்கும். 

ரூ.8,000 கோடியைத் தாண்டி...

நமது எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் மியூச்சுவல் ஃபண்டுகள் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பிருப்பதால், பலரும் இப்போது இதைத் தேடிவருகின்றனர். மியூச்சுவல் ஃபண்டில் இப்போது மாதம் ரூ.8,000 கோடி என்கிற பிரமாண்டமான அளவுக்கு எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்துவருகின்றனர் நம் மக்கள். சுருக்கமாக, நமது காரை நாமே ஓட்டினால், அது பங்குச் சந்தை. ஒரு டிரைவரை வைத்து ஓட்டினால் அது மியூச்சுவல் ஃபண்ட். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? 

ஒரு பயிற்சி: உங்கள் எதிர்காலத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள எந்த மாதிரியான ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வீர்கள்?      

ப(ய)ணம் தொடரும்

- சுந்தரி ஜகதீசன்

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!