சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஏற்றம் காணும் இந்திரா நூயி!

ஏற்றம் காணும் இந்திரா நூயி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏற்றம் காணும் இந்திரா நூயி!

ஏற்றம் காணும் இந்திரா நூயி!

ல்வியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் ஒரு பெண்ணை எந்தளவுக்குச் சிகரமேற்றும் என்பதற்கு உதாரணம், இந்திரா நூயி. ஜான்சன் அண்டு ஜான்சன், பெப்சிகோ என்று பாய்ந்த இந்த சென்னைப் பெண்ணின் கிராப்(Graph), இப்போது லேண்ட் ஆகியிருப்பது  அமேஸானில்!

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்சி, கொல்கத்தா ஐஐஎம்-ல் எம்பிஏ என்று தன் அஸ்திவாரத்தை பலமாகப் போட்ட இந்திரா, படிக்கும்போதே பகுதி நேரமாக வரவேற்பாளர் வேலைபார்த்தார். ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக அடியெடுத்து வைத்தவர், தொடர்ந்து சில நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், கார்ப்பரேட் உலகின் போட்டியைச் சமாளிக்க, தன்னை இன்னும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் இரண்டாவது முதுகலைப்பட்டம் பெற்றார். வாழ்க்கை இந்திராவுக்கு மீண்டும் ‘அ’விலிருந்து ஆரம்பித்தது. வேலை தேடத் தொடங்கியவர், 1994-ல்  பெப்சி குளிர்பான நிறுவனத்தில் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் துணைத்தலைவர் பதவிவரை பயணித்தார்.

ஏற்றம் காணும் இந்திரா நூயி!

இந்திராவுக்குக் கூட்டு முயற்சி மிகப் பிடிக்கும். அதனால், துணைத்தலைவர் பதவியைத் தன்னுடைய நாற்காலியிலேயே கழற்றி வைத்துவிட்டு, ஊழியர்களுடன் சேர்ந்து குளிர்பானத் தயாரிப்பு, விற்பனை, கள ஆய்வு, வாடிக்கையாளர்களின் தேவை, தரம் என்று நேரடியாகக் களமிறங்கினார். 2006-ல் பெப்சிகோவின் சி.இ.ஓ ஆனார்.

பெப்சியை உலகின் அத்தனை திசைகளிலும் வெற்றிபெறச் செய்த இந்திரா, சென்ற வருடம் அக்டோபரில் அந்நிறுவனத்திலிருந்து விலகினார். ‘அடுத்து எந்த நிறுவனத்தில் காலடி வைக்கப் போகிறார்?’ என்று உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அமேஸானின் இயக்குநர்கள் குழுவில் இணைந்துள்ளார் இப்போது. வாழ்த்து மழைகளுக்கிடையில், இப்படிக் கேட்கிறார் இந்திரா: ‘இதைவிடப் பெரிய உயரங்களை அடைய வேண்டும். இந்த வளர்ச்சியையே பெரிதாகப் பேசினால் எப்படி?’

உண்மைதான்!

- ஆ. சாந்தி கணேஷ்