Published:Updated:

பைக் வாங்கும்போது எதற்கெல்லாம் பணம் கட்டுகிறீர்கள் தெரியுமா? #DoubtOfCommonMan

 பைக்
News
பைக்

ஹெல்மெட், ஆர்.சி ஸ்மார்ட் கார்டு (RC புக்), சாரி கார்டு, ரியர் வியூ மிரர்கள், க்ராஷ் கார்டு, ஸ்டாண்டு, நம்பர் பிளேட் ஆகியவை புதிய வாகனத்திற்கு கட்டாயம் என்பதால், அவற்றுக்கான விலைகளும் மொத்த விலையில் சேரும்.

நாளிதழ்கள், தொலைக்காட்சிகளைத் திறந்தால், புதிது புதிதாக பைக் விளம்பரங்கள் வருகின்றன. அந்த விளம்பரங்களில் ஒரு விலையைக் குறிப்பிடுகிறார்கள். விற்பனை மையங்களுக்குப் போய் விலை கேட்டால், அதைவிட அதிகமாக விலை சொல்கிறார்கள். இதுகுறித்து, விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் சாகுல் ஹமீது கேள்வி எழுப்பியிருந்தார். "பைக் வாங்கும்போது, லைஃப் டாக்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.டி.ஓ சார்ஜ் என்றெல்லாம் விலையோடு சேர்த்து வாங்குகிறார்கள். உண்மையில், பைக் வாங்கும்போது எதற்கெல்லாம் பணம் கட்ட வேண்டும்" என்பதுதான் சாகுல் ஹமீது எழுப்பியிருக்கும் கேள்வி. 

பைக் வாங்கும்போது எதற்கெல்லாம் பணம் கட்டுகிறீர்கள் தெரியுமா? #DoubtOfCommonMan

அவருக்கான பதில்...

"பைக் விளம்பரங்களில் காட்டப்படும் விலை என்பது, எக்ஸ்-ஷோரும் விலை. அந்த வாகனத்தை உற்பத்தி செய்திருக்கும் நிறுவனம், அதற்கு நிர்ணயித்திருக்கும் அடிப்படை விலை (லாபத்தையும் சேர்த்து). வண்டிக்கான ரெஜிஸ்ட்ரேஷன் (வண்டியின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 8 சதவிகிதம்) மற்றும் RTO சார்ந்த செலவுகளை அந்த விலையோடு சேர்த்து வாங்குவார்கள். புதிய வாகனத்துக்கான சாலை வரி மற்றும் முன்பதிவு எண்ணுக்கான விலையும் இதோடு சேரும். இவை தவிர, ஹேண்ட்லிங் சார்ஜ் என்று ஒன்றைச் சேர்ப்பார்கள். புதிய வாகனத்தை தொழிற்சாலையில் இருந்து டீலரின் யார்டுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதற்கான செலவுதான் ஹேண்ட்லிங் சார்ஜ்.  முன்பு வாகனத்தின் விலைக்கேற்ப இது நிர்ணயிக்கப்பட்டது. இப்போது ஓரளவுக்கு வரையறுக்கப்பட்டுவிட்டது. 

பைக் வாங்கும்போது எதற்கெல்லாம் பணம் கட்டுகிறீர்கள் தெரியுமா? #DoubtOfCommonMan

இதுபோக, வாகனத்துக்கான இன்சூரன்ஸ். ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு, ஓர் ஆண்டுக்கான Comprehensive/Own Damage பாலிஸி மற்றும் ஓர் ஆண்டுக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு ஆகியவை இதில் சேரும். தற்போது ஹெல்மெட், ஆர்.சி ஸ்மார்ட் கார்டு (RC புக்), சாரி கார்டு, ரியர் வியூ மிரர்கள், க்ராஷ் கார்டு, ஸ்டாண்டு, நம்பர் பிளேட் ஆகியவை புதிய வாகனத்திற்கு கட்டாயம் என்பதால், அவற்றுக்கான விலைகளும் மொத்த விலையில் சேரும். சில நிறுவனங்களில் வாகனத்துக்கான நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி, AMC, ஆக்ஸசரீஸ், ஐந்து ஆண்டுகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற இதர செலவுகளை விலையோடு சேர்க்காமல் தனியாக வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். 

புது டூவீலர் வாங்கும்போது எதற்கெல்லாம் பணம் தரவேண்டும்?

* எக்ஸ்-ஷோரூம் விலை * ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் ஆர்.டி.ஓ சார்ந்த செலவுகள் *  ஹேண்ட்லிங் சார்ஜ்  மற்றும் வாரன்ட்டி * இன்சூரன்ஸ்  * ஆக்ஸசரிஸ்

பைக் வாங்கும்போது எதற்கெல்லாம் பணம் கட்டுகிறீர்கள் தெரியுமா? #DoubtOfCommonMan