நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: இறக்கம் வந்துவிடலாம், ஜாக்கிரதை!
##~## |
ரிசல்ட்கள் வர ஆரம்பிக்கும் வாரம். எனவே, அவற்றுக்கு ஏற்றாற்போல் டிரெண்ட் தடாலடியாக மாறக்கூடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். புதன் முதல் ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவது மிக மிக நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.
நான்கு நாட்கள் ஏற்றமும் ஒருநாள் இறக்கமுமாக இருந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 113 பாயின்ட்கள் ஏற்றத்தில் முடிவடைந்தது. அடுத்த வாரமும் நிறைய ரிசல்ட்கள் வெளிவரும் வாரம். எனவே, அதற்கு ஏற்றாற்போலவே சந்தையின் போக்கும் இருக்கும். ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துகொண்டு வருவதுபோலவே தெரிகின்றது.

இருப்பினும் செய்திகளின் எஃபெக்ட் மட்டுமே சந்தையை இனி எடுத்துச் செல்லும். குறைந்த எண்ணிக்கையில் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதே சிறந்தது. ஓவர்நைட் பொசிஷன்கள் வைக்கவே கூடாத நேரமிது. திடீர் நெகட்டிவ் செய்திகள் 5835 வரை சந்தையை வேகமாக நகர்த்திச் சென்றுவிடலாம். இதற்கு வாய்ப்புகள் வரும் வாரத்தில் குறைவாக இருந்தாலும், மாத இறுதிக்குள் நடந்துவிடும் வாய்ப்பு இப்போதைக்கு சந்தையில் கனன்று கொண்டுதான் இருக்கின்றது.

