மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா?

உஷார், உஷார்!

##~##

வேலை வாங்கி தருவதே எங்கள் வேலை என புற்றீசல்போல பல கம்பெனிகள் கிளம்பி இருக்கின்றன. வேலை வேண்டுமா? உங்கள் பெயர், முகவரியை எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்கின்றன.  

என்னதான் வேலை தருகிறார்கள் என்று பார்ப்போமே என்று பதில் அனுப்பினோம். பதிலுக்கு அவர்கள், ஒரு முகவரியைக் கொடுத்து நாளை காலை வாருங்கள் என்று கூறியிருந்தார்கள். சென்று பார்த்தோம். முதலில் ஒரு அப்ளிகேஷன் விலை 100 ரூபாய் என்று நீட்டினார்கள். உங்களுக்கு வேலை கிடைத்துவிடும். நாளை வரும்போது 800 ரூபாய் டாக்குமென்ட் சார்ஜ் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.

அங்கு போனால் ஒரே திருவிழா கூட்டம். என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் யாரும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. வேலை கிடைத்தால் போதும் என்கிற பரபரப்பில் அவர்கள் சிக்கித் தவிப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது. இந்தப் பரபரப்பைப் பயன்படுத்திதான் முடிந்தவரை காசு கறந்து லாபம் பார்க்கத் துடிக்கின்றன சில நிறுவனங்கள்.

நாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா?

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிபுணர் ஒருவர் தெளிவாக விளக்கினார்.

''சில வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் அப்ளிகேஷன் விலை, டாக்குமென்டேஷன் சார்ஜ் என பலவிதங் களில் பணம் வாங்கி மோசடி செய்வதோடு, வேலைக்குச் சேர்த்துவிட்ட பிறகு மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை பல மாதங்களுக்கு கமிஷனாகவும் வாங்கிக் கொள்கின்றன. சில நிறுவனங்கள், முதல் மாதச் சம்பளத்தை சுளையாக ஆலோசனைக் கட்டணமாக வாங்கிவிடுகின்றன.

நாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா?

இந்த ஆலோசனை நிறுவனங்களின் மூலம் வேலைக்குச் சேருகிறவர்களுக்கு கான்ட்ராக்ட் முறையில்தான் வேலை தரப்படு கிறது. சம்பளமும் 10,000 ரூபாய், 12,000 ரூபாய் என குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில், இவர்கள் பார்க்கும் வேலையைச் செய்யும் நிரந்தரப் பணியாளர்களுக்கு 20,000 ரூபாய், 25,000 ரூபாய் எனச் சம்பளம் வழங்கப்படுவதோடு பல சலுகைகளும் தரப்படுகின்றன. நிரந்தர பணியாளர்களுடன் ஒப்பிடும்போது ஒப்பந்தப் பணியாளர்களுக்கு வேலைப் பளுவும் அதிகம். பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் இன்றைய நிலையில் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை இந்த ஏஜென்சிகள் மூலம் குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை வேலைக்கு எடுக்கும் யுக்தியைக் கையாளுகின்றன'  என்றார் அவர்.

நாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா?

இதுமாதிரியான நிறுவனங்களிடம் சிக்காமல் எப்படி உஷாராக இருப்பது என்பது குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார் மாஸ்டர்சிஸ் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் துணை மேலாளர் பத்மலட்சுமி.

''

நாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா?

வேலை கிடைக்கும் முன்னரே முழுப் பணத்தையும் கட்டக் கூடாது. முழுப் பணத்தையும் கட்டச் சொல்லும் கம்பெனிகள் உண்மையானதாக இருக்க வாய்ப்பு இல்லை.

சமீபகாலமாக இ-மெயில், தொலைபேசி மூலம் வேலைவாய்ப்பு தொடர்பான நிறைய தகவல்கள் வருகின்றன. அவற்றை தீர விசாரித்து அவ்வாறு ஒரு நிறுவனம் உள்ளதா? அல்லது தொலைபேசி எண்களையும் பற்றி விசாரித்து அதன்பிறகு முடிவு எடுக்க வேண்டும்.

சில ஆலோசனை நிறுவனங்கள் வேலை வாங்கி தருகிறோம் என்று பணத்தை வாங்கிக்கொண்டு ஆன்லைனில் ஏற்கெனவே உள்ள தகவல்களை மட்டும் தருகின்றன. அவ்வாறான நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.  ஆலோசனை நிறுவனங்கள் தரும் உறுதிமொழியை இ-மெயில் மூலமாகவோ அல்லது அந்தந்த ஆலோசனை நிறுவனங்களின் லெட்டர் பேடில் எழுதித் தருமாறு கேளுங்கள். பின்னாளில் ஏதாவது பிரச்னை என்றால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்குத் தொடர இது நிச்சயம் தேவைப்படும்.

வேலை கிடைக்காவிட்டால் பணத்தைத் திரும்பத் தருவோம் என்று கூறும் நிறுவனங்கள், நிபந்தனைப் பத்திரங்களில் ஓர் இடங்களில்கூட இதைக் கூறியிருக்க மாட்டார்கள். அல்லது மாற்றுக் கருத்தாக வேறு எதையேனும் கூறியிருப்பார்கள்.

முன்னரே எங்களது நிறுவனத்தின் மூலம் நிறையபேர் நல்ல வேலை வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள் என்று கூறுவதை நம்பக் கூடாது. மேலும், குறைவாக படித்தவர்களுக்கு அதிகச் சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறும் ஆலோசனை நிறுவனங்கள் உண்மையானதாக இருக்க வாய்ப்பு

நாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா?

இல்லை.

உணவு, தங்குமிடம் இலவசம், இன்ஷூரன்ஸ் பாலிசி ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறும் ஆலோசனை நிறுவனங்கள், வேலையில் சேர்ந்தவுடன் இதை மறந்து விடுகின்றன. இவ்வாறான உறுதிமொழிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்பிவிடாமல் அதெல்லாம் உண்மையா என முடிந்தவரை விசாரித்து அறிந்துகொள்வது அவசியம்!'' என்றார்.

வேலை தேடுகிறவர்கள் இனியாவது உஷாராக நடந்துகொண்டால்தான், ஏமாறாமல் இருக்க முடியும்!

சே.புகழரசி