Published:Updated:

பிஸினஸ் திலகங்கள்! - 1

ஒரு ஃபேஷன் டிசைனரின் வெற்றிச் சூத்திரம்இந்துலேகா. சி, படங்கள்: பா.கார்த்திக்

##~##

புதிய பகுதி

'தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்’ என்று ஒலிக்கும் திரைப்பட பாடலின் இந்த வரிகள்... ஷைனி அஸ்வினுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும். ஒரு பொருளை வாங்கும்போது, 'வாடிக்கையாளராக என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அதையே நமது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்போதுதான்... பிஸினஸ், பின்னி பெடல் எடுக்கும்...’ என்கிற சூத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு, கலக்கி வருகிறார் 'ஆச்சி மசாலா’ நிறுவனரின் மூத்த மருமகளான இந்த ஷைனி. சென்னை, அண்ணா நகர் பகுதியில், 'தி ஃபேர் லேடி டிசைனர்’ எனும் பெயரில், இவர் நடத்திவரும் பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு கடைக்கு... பெண்களிடம் ஏக வரவேற்பு.

''என்னோட பொண்ணு அஷிரா, ஒரு குட்டி தேவதை. உண்மையை சொல்லணும்னா, இவளாலதான் நான் டிசைனிங் ஃபீல்டுக்கே வந்தேன். அவளுக்கு டிரெஸ் டிசைன் பண்றதுக்காக டிசைனர்ஸ்கிட்ட போவேன். அவங்க ஆயிரம் ரூபாய் மதிப்பே இருக்கற டிரெஸ்ஸைக்கூட... ஏழாயிரம், எட்டாயிரம்னு சொல்லும்போது எரிச்சலாயிடும். அவங்க கேக்குற விலையை கொடுக்கக்கூடிய அளவுக்கு வசதி இருந்தாலும், டிரெஸ் அந்தளவுக்கு வொர்த்தா இருக்கணுமில்ல..? டிரெஸ் விலை பத்தின டீட்டெய்ல் எல்லாமே அத்துப்படிங்கிறதால... தெரிஞ்சே ஏமாற எனக்கு இஷ்டமில்லை. அதுதான், இந்த ஷோரூம் ஆரம்பிச்சதுக்கான காரணம்'' என்று அத்தனை உற்சாகமாக பேசிய ஷைனியிடம், ''நீங்க ஃபேஷன் டிசைனிங் ஸ்டூடன்டா..?'’ என்று கேட்டோம்.

பிஸினஸ் திலகங்கள்! - 1

''நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். சின்ன வயசுல இருந்தே டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். இன்டர்நெட்ல ஃபேஷன் சம்பந்தமா நிறைய விஷயங்களை பிரவுஸ் பண்ணிட்டே இருப்பேன். லேட்டஸ்ட் டிரெண்ட், கலரிங் சென்ஸ் இப்படி நிறைய விஷயங்கள்ல அப்டேட்டா இருப்பேன். சினிமாவே பாக்க மாட்டேன். ஆனா, சினிமா பிரபலங்களோட போட்டோக்களை நெட்ல பாப்பேன். அவங்க போட்டிருக்கும் வெஸ்டர்ன் டிரெஸ்ஸோட டிசைனை, நம்ம டிரெடிஷனல் டிரெஸ்ல அப்ளை பண்ணுவேன். மத்தபடி இதுக்காக நான் தனியா எதுவும் படிக்கல'' என்ற ஷைனி தொடர்ந்தார்.

''என் மாமனார், 'கிராம மக்களுக்கு மலிவு விலையில கிடைக்கற மாதிரி ஊறுகாயிலிருந்து பாதாம் பால் பவுடர் வரைக்கும் ஒரு ரூபா பாக்கெட் போடணும்’னு அடிக்கடி சொல்வார். அதுல லாபம் குறைவா இருந்தாலும், 'வசதியானவங்களுக்கு மட்டும்தான் எல்லாமும்னு இல்லாம, எல்லாரும் எல்லாத்தையும் அனுபவிக்கணும்’ங்குற எண்ணம் அவர் மனசுல எப்பவும் இருக்கும்.

என்னோட மச்சினர் கல்யாணத்துக்காக வீட்டுல எல்லாருக்கும் நிறைய டிரெஸ் பர்ச்சேஸ் பண்ணினோம். ராத்திரி எல்லாரும் சேர்ந்து சாப்பிடும்போது, 'இந்த மாதிரி டிசைனர் டிரெஸ் எல்லாம் நாமளே பண்ணும்போது செலவு ரொம்ப குறைச்சலாதான் இருக்கு. ஆனா, பிரபல டிசைனர்ஸ்ங்கற ஒரே காரணத்துக்காக எவ்ளோ விலை வெச்சு விக்கறாங்க பாருங்க. எல்லாரும் வாங்கற விலையில நாம ஏதாச்சும் பண்ணணும்’னு மாமனார்கிட்ட சொன்னேன். அது அவரை யோசிக்க வெச்சுது.

முதல் முதலா, என்னோட மயில் கலர் புடவைக்கு மேட்ச்சா, என் பொண்ணுக்கு ஒரு லெஹெங்கா டிரெஸ் டிசைன் பண்ணினேன். எல்லாருக்குமே அது ரொம்ப பிடிச்சுது. என் மேல ஒரு நம்பிக்கையும் வந்துச்சு. அப்பறம் என்ன? பிஸினஸ் பண்றதுக்கு க்ரீன் சிக்னல் கெடைச்சுடுச்சு''

- சந்தோஷ சிரிப்பை உதிர்க்கிறார்.

பிஸினஸ் திலகங்கள்! - 1

''கணவர் அஸ்வின், அவரோட வேலையை யும் பாத்துக்கிட்டு எனக்கும் உதவ ஆரம்பிச் சார். நான் என் கணவர், குழந்தை, அவளை பாத்துக்க என்னோட அம்மானு குடும்பத் தோட பாம்பே, டெல்லி, வாரணாசினு கிளம் பிப் போய், எங்கெங்கே விதவிதமா துணி வகைங்க கெடைக்கும்னு தேடித் தேடி கண்டுபிடிச்சோம். பிறகு, அண்ணாநகர்ல எங்க பழைய வீட்டையே வொர்க்கிங் யூனிட்டா மாத்தி, பக்கத்துலயே ஷோரூமை யும் ரெடி பண்ணிட்டோம். எல்லா பெண் களுக்குமே கல்யாண சமயத்துல, 'அழகா டிரெஸ் பண்ணி ஐஸ்வர்யா ராயா மாறிட ணும்’னு ஆசை இருக்கும். ஆனா, எல்லாருக் குமே பொருளாதார நிலை அந்த அளவுக்கு கைகொடுக்காது. இதையெல்லாம் யோசிச்சு தான்.... எல்லாரும் வாங்கக்கூடிய அளவுல சீப் அண்ட் பெஸ்ட்டா கொடுக்கணும்ங்கற என் கனவை இங்க நனவாக்கியிருக்கேன்.

பிஸினஸ் திலகங்கள்! - 1

பிஸினஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்ன ஒரே ஒரு டிசைனர் பிளவுஸை, பதிமூணாயிரம் கொடுத்தெல்லாம் வாங்கியிருக்கேன். வாங்குற வரைக்கும்தான் மதிப்பு இருக்கும். அதுக்கப்புறம் 'பிளவுஸ் ஃபிட்டிங் சரியில்லை’னு எடுத்துட்டு போய் கொடுத்தா... ஒரு ரெஸ்பான்ஸ்ஸும் இருக்காது. ஆனா, நான்... ஒரு டிரெஸ் டிசைன் பண்ணி கொடுக்கறதோட இல்லாம, கஸ்டமருக்கு கால் பண்ணி, 'ஃபிட்டிங் சரியா இருக்கா’னு ஃபாலோ பண்ணுவேன். வெளியில நான் எப்படி எதிர்பார்த்தேனோ... அதை எல்லாம் என் கஸ்டமர்ஸுக்கு கொடுக்கணும்ங்கறதை ஒரு கொள்கையாவே வெச்சுருக்கேன்'' என்ற ஷைனி, நிறைவாக,

''கடை துவக்க விழாவுல, புடவை வாங்குற ஒவ்வொருத்தருக்கும் ஃப்ரீயா ஒரு பிளவுஸ் டிசைன் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம், ஒருத்தர் சொல்லி ஒருத்தர்னு... நல்ல வர வேற்பு. இதே பிராண்ட்ல நிறைய ஷோரூம் திறக்கணுங்கிறதுதான் என்னோட ஆசை. எல்லா ஷோரூமையும் பாத்துக்கறதுக்கு, என்னை மாதிரியே மைண்ட் செட் இருக்குற வங்களா தேடிப்பிடிச்சுதான் வாய்ப்பு கொடுப்பேன். ஏன்னா... 'கஸ்டமர் ஈஸ் அவர் பாஸ்' இல்லையா....'' என்று சிரித்தார்.

ஆல் தி பெஸ்ட் ஷைனி!

சாதனைகள் தொடரும்...