Published:Updated:

பிசினஸ் திலகங்கள்! 5

ஜுனோ மேரி... அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடைகள்..!இந்துலேகா.சி, படங்கள்: பா.கார்த்திக்

##~##

வெட்கப்படும் தருணத்தில்... ஒவ்வொரு பெண்ணுமே அழகுதான். அதுவும் திருமணப் பெண்ணின் வெட்கம்... கூடுதல் அழகு. குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணமகள்களின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்து தேவதையாக்குவது 'ஜுனோ மேரி’ மணமகள் உடைதான்.

''சென்னையில் மணப்பெண்களுக்காகவே ஸ்பெஷலாக நிறைய புடவைக் கடைகள் இருந்தாலும், கிறிஸ்தவ மணப்பெண்களுக்கான 'கவுன்’ போன்ற உடைகளுக்கு சில கடைகளே உள்ளன. அதிலும் நிறைய கலெக்ஷன்ஸ் இருக்காது. அந்தக் குறையைப் போக்குவதற்காக துவங்கப்பட்டதுதான் எங்கள் நிறுவனம்''

- புன்னகை மின்னச் சொல்கிறார், இதன் நிறுவனரான சென்னை கோட்டூர்புரம் திவ்யா. இவர் படித்தது டிராவல் அண்ட் டூரிஸம். வேலை செய்தது, விமானத்துறையில். தற்போது, கால்பதித்திருப்பது ஆடை நிறுவனத்தில்.

''இந்து, முஸ்லிம், நார்த் இண்டியன்னு எல்லா சமூகத்திலும் கல்யாணப் பொண்ணோட டிரெஸ் ரொம்ப கலர்ஃபுல்லா, கிராண்டா இருக்கும். ஆனா... கிறிஸ்டியன் கல்யாணப் பொண்ணுங்களுக்கு மட்டும் பெரும்பாலும் வெள்ளை கவுன்தான். அதுவும் ஃபாரின் கன்ட்ரீஸ்ல இருக்கற மாதிரி மாடல் மாடலான கவுனும் இங்க கிடைக்காது. ஒரு கிறிஸ்டியன் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்ததும், இதைப்பத்தி ரொம்ப தீவிரமா யோசிச்சதுதான்... 'வெட்டிங் கவுன்’ பிசினஸுக்கு நான் வரக் காரணம்.

பிசினஸ் திலகங்கள்!  5

ஆரம்பத்துல, எங்ககிட்ட வந்த கஸ்டமர்ஸுக்கு அளவெடுத்து, ஜப்பான், சைனாவில் இருக்குற டிசைனர்களுக்கு அனுப்பி கவுன் தைச்சு வாங்கிட்டிருந்தோம். அதுல தேவையான ஆல்டரேஷன்ஸ் பண்ணி கொடுத்துடுவோம். இப்படித்தான் 'ஜுனோ மேரி’ நிறுவனத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல நண்பர்கள், அவங்களுக்கு தெரிஞ்சவங்கனு டிசைன் பண்ணிக் கொடுத்தோம். எங்க டிசைன் எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சு, அப்படியே பிசினஸ் நல்லா பிக்-அப் ஆகிடுச்சு.

பிசினஸ் திலகங்கள்!  5

பிறகு, வெப்சைட் ஆரம்பிச்சு... எல்லா மாடல் கவுன்ஸையும் அப்லோட் பண்ணினோம். நேர்ல வரமுடியாத கஸ்டமர்ஸ் எங்க வெப்சைட்டை பார்த்தேகூட எந்த மாடல் கவுன் வேணும்னு செலக்ட் செய்ய முடியும். 'ஏ லைன்’, 'பால் லைன்’, 'ஸ்லிம் லைன்’, 'மெர்மெய்ட்’னு மொத்தம் நாலு வெரைட்டி இருக்கு. ஸ்டைல், கலர், துணி வகைனு எல்லாத்தையுமே கஸ்டமர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி செலக்ட் செஞ்சுக்கலாம். எங்க சிறப்பே, 'கஸ்டமைஸ்ட் வெடிங் கவுன்’தான்'' என்ற திவ்யா நிறைவாக,  

''பொண்ணுங்க, சாதாரணமா டிரெஸ் பண்ணும்போதே, அழகா தெரியணும்னு ஆசைப்படுவாங்க. அதுவும் கல்யாணத்துக்குனா கேக்கவே வேணாம். அதுக்கேத்த மாதிரி எங்ககிட்ட எல்லா மாடல் டிசைன், பல வகையான துணி, கலர் இப்படி நிறைய இருக்கு. அதனாலதான் எந்த விளம்பரமும் கொடுக்காம ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லி சொல்லியே... என்னோட பிசினஸ் நல்லா வளர்ந்துடுச்சி.

பிசினஸ் திலகங்கள்!  5

டிரெஸ் ரெடி பண்றதுக்கு ரெண்டு மாசம் டைம் கேப்போம். இது போதுமான அளவுக்கு கலைநயத்தோட தைக்கறதுக்குத்தான். ஆனாலும் 45 நாள்லயே டெலிவரி பண்ணிடுவோம். தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம கேரளா, மகாராஷ்டிரா, டார்ஜிலிங், ஷில்லாங்னு பல இடங்களுக்கு கவுன்களை சப்ளை செய்றோம். போன மாசம் பெங்களூருல ஒரு ஷோரூம் திறந்திருக்கோம். சினிமா, சின்னத்திரை மற்றும் பிசினஸ் வி.ஐ.பி-க்கள் நிறைய பேருக்கு வெடிங் கவுன் டிசைன் பண்ணிக் கொடுத்திருக்கோம். வசதியானவர்களுக்கு மட்டும் இல்லாம, நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய விலையில் கவுனை விற்பனை செய்றோம். என்னைப் பொறுத்தவரைக்கும் கஸ்டமரை திருப்திபடுத்தணும். அவ்வளவுதாங்க!'' என்று சந்தோஷமாக சொல்கிறார் திவ்யா!