பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

“என் நிதி நிர்வாகி என் அம்மாதான்..!” - நடிகை ரேமா அசோக்

ரேமா அசோக்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேமா அசோக்

பணம் என் சாய்ஸ்!

“மிடில் கிளாஸ்லிருந்து மீடியாவுக்கு வந்த பொண்ணு நான். டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக என் பயணத்தைத் தொடங்கினேன். அடுத்தபடியாக, ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல் என வாய்ப்புகள் வந்தன.

என் நிதி நிர்வாகி என் அம்மாதான். இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி கற்றுக்கொண்டு இருக்கேன். ஆனால், பதின் பருவத்தில் இருந்தே என் தேவைகளுக்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்ளத் தொடங்கினேன். அதனால் பொருளாதார சுதந்திரம் உள்ள ஒரு பெண் நான்.

ரேமா அசோக்
ரேமா அசோக்

சிறு வயதில் உண்டியலில் சேமித்தது தொடங்கி இப்போது ஆபரணங்களாக சேமிப்பது வரை சேமிப்பு எனக்குப் பிடித்த மான ஒன்று. அப்படி சேமித்த பணத்தில் எத்தனையோ பொருள்கள் வாங்கினாலும், நான் கார் வாங்கியது மறக்கவே முடியாது.

ஆரம்பத்தில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கினேன். ஆனால், புது கார் வாங்க வேண் டும் என்பது என் ஆசை. அதற்காக பணம் சேமித்து, என் 20-வது வயதில் புது கார் வாங்கினேன். அடுத்து, சென்னையில் வீடு வாங்க வேண்டும். அதற்காக சேமிக்கத் தொடங்கி இருக்கிறேன். விரைவில் அதுவும் சாத்தியமாகும்.

அடுத்தடுத்து தேவைகள், ஆசைகள் இருந் தாலும் பணத்தின் பின்னால் இயந்திரமாக ஓடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக் கிறேன். மீடியாவில் இருந்தாலும் சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பது என் லட்சியம். கொரோனா நேரத்தில் மேக்கப் ஆர்டிஸ்ட்ரி ஒன்றையும் தொடங்கினேன். கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதற்காக மனதுக்குப் பிடிக்காத எந்த வேலையிலும் நான் கமிட் ஆனது கிடையாது. பணம் என்பது நமக்கானதாக இருக்க வேண்டும். பணத்துக்காக நாம் இருக்கவும் கூடாது, ஓடவும் கூடாது.”