ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் 25... அவர்கள் 25! - நீங்கள் தொழிலதிபராக... அட்டகாசமான வாய்ப்பு!

ஒரு சர்ப்ரைஸ் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு சர்ப்ரைஸ் திட்டம்

ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - 5

சுதந்திரமாகச் செயல்பட வேண்டும், பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும், புதிய பாதை வகுக்க வேண்டும்... இப்படித் தொழில்முனைவோர் ஆவதற்கான லட்சியத்துடன் இருக்கும் பெண்களின் கனவுகளுக்குச் சிறகு தரும் ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டத்தின் விண்ணப்பப் படிவம் இதோ உங்கள் கைகளில். இனி நீங்கள் செய்ய வேண்டியது, இந்த விண்ணப்பத் தைப் பூர்த்தி செய்து, விரைவாக எங்களுக்கு அனுப்ப வேண்டியது மட்டும் தான். 2023 ஜனவரி 31-ம் தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

 ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

இறுதியாக, தேர்வு செய்யப்படும் 25 பெண்களுக்கு, தொழில் தொடங்குவதற்கான அவசியமான வழிகாட்டுதல்கள் கிடைப்பதை உறுதிசெய்து, தொழிலதிபர்களாக அவர்களை உருவாக்கிவிட உவகையுடன் கரம்கொடுக்கப் போகிறது அவள் விகடன்.

அவள் 25... அவர்கள் 25! - நீங்கள் தொழிலதிபராக... அட்டகாசமான வாய்ப்பு!
அவள் 25... அவர்கள் 25! - நீங்கள் தொழிலதிபராக... அட்டகாசமான வாய்ப்பு!

விதிமுறைகள்

1. விண்ணப்பதாரர்கள் 18 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களாக இருக்க வேண்டும்.

2. குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.

3. ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

அனுப்புவது எப்படி?

அவள் விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் இந்த விண்ணப்ப படிவத்தைக் கத்தரித்துப் பயன்படுத்தலாம் அல்லது கேள்வி களுக்கான தலைப்பு மற்றும் வரிசை எண்களுடன் உங்கள் பதில்களை வெள்ளைத்தாளில் தனியாகவும் எழுதலாம். பதில்களை தபால் அல்லது இ-மெயில் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி

‘அவள் 25... அவர்கள் 25!’

அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: avalvikatan@vikatan.com