Published:Updated:

வீட்டுக் கடன்: வட்டி, அசல் எவ்வாறு பிடித்தம் செய்யப்படுகிறது?|Doubt of Common Man

2017 மற்றும் 2021க்கும் இடையில், இந்திய வீட்டுக் கடன் வாக்குவோரின் அளவு 32% வளர்ச்சி கண்டுள்ளது.

Published:Updated:

வீட்டுக் கடன்: வட்டி, அசல் எவ்வாறு பிடித்தம் செய்யப்படுகிறது?|Doubt of Common Man

2017 மற்றும் 2021க்கும் இடையில், இந்திய வீட்டுக் கடன் வாக்குவோரின் அளவு 32% வளர்ச்சி கண்டுள்ளது.

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் பிரியா என்ற வாசகர், "வங்கியில் வாங்கும் வீட்டுக் கடனுக்கு, வட்டி மற்றும் அசல் எவ்வாறு பிடித்தம் செய்யப்படுகிறது? மாதா மாதம் வட்டி செலுத்துவது என்ன ஆகும்? " என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of Common man
Doubt of Common man

வீட்டுக்கடன் என்பது ஒருவர் தனது வீட்டை அடமானம் வைத்துப் பெறுவது ஆகும். பயனாளி, கடனின் தன்மையைப் பொறுத்து 5 முதல் 30 ஆண்டுகளுக்கு மாதாந்திர தவணைகள் எனப்படும் EMI-களில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது நாம் அறிந்ததே. நிதி ஆண்டு 2021-ன் முடிவில், இந்தியாவில் நிலுவையில் உள்ள வீட்டுக்கடன்களின் மதிப்பு ₹22.4 லட்சம் கோடி. இது நிதி ஆண்டு 2020-இல் இருந்த அளவிலிருந்து 12.1% அதிகரித்துள்ளது. 2017 மற்றும் 2021க்கு இடையில், இந்திய வீட்டுக் கடன் வாக்குவோரின் அளவு 32% வளர்ச்சி கண்டுள்ளது. நம்மில் பலரும் வங்கியில் இதுபோல வீட்டுக் கடன் வாங்கியிருப்போம். ஆனால், நாம் எவ்வளவு தொகை மாத மாதம் செலுத்துகிறோம், அவற்றில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. இந்நிலையில், நம்முடைய வாசகர் ஒருவருக்கும் இந்த வீட்டுக்கடன் குறித்த சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது Doubt of common man பக்கத்தில் கேட்டிருந்தார்.

Home Loan
Home Loan

நம் வாசகரின் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளச் சென்னையில் தனியார் வங்கி ஒன்றின் மேலாளராக இருக்கும் மூர்த்தி அவர்களிடம் பேசினோம். வாசகரின் கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கியில் வாங்கும் வீட்டுக் கடனுக்கு, வட்டி மற்றும் அசல் எவ்வாறு பிடித்தம் செய்யப்படுகிறது?

ஆரம்பத்தில் வாடிக்கையாளர் கட்டும் EMI-யில் பெரும்பகுதி வட்டிக்கே சென்று விடும். பின்பு தான் அசலுக்குச் செல்லும் தொகையின் அளவு அதிகரிக்கும். வீட்டுக்கடன் கால அவகாசம் குறைந்தபட்சம் 5 வருடங்கள். இதில் முதல் 2.5 வருடங்கள் வாடிக்கையாளர் அதிகமாக வட்டி தான் கட்டுவார். வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க அசல் குறையும். வங்கிகளின் EMI சார்ட்டில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

Home Loan
Home Loan

வீட்டுக்கடன் வட்டியானது ஃப்லோட்டிங் இன்ட்ரஸ்ட் (Floating Interest) மற்றும் ஃபிக்ஸட் இன்ட்ரஸ்ட் (Fixed Interest) என இருவகைப்படும். ஃப்லோட்டிங் இன்ட்ரஸ்ட் என்பது குறிப்பிட்ட தொகையைக் கடன் காலம் முழுவதும் EMI-யாக செலுத்தும்படி இருக்காது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வாடிக்கையாளர் கட்டும் வட்டியும் அதற்கு ஏற்ப குறையும். ஃபிக்ஸட் இன்ட்ரஸ்டில் வாடிக்கையாளர் முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகையை மாதாமாதம் EMI-யாக செலுத்த வேண்டியிருக்கும். ரெப்போ விகிதம் ஏறினாலும் இறங்கினாலும் அதனால் வாடிக்கையாளருக்கு எவ்வித பாதிப்போ பலனோ இல்லை.

மாதா மாதம் வட்டி செலுத்துவது என்ன ஆகும்?

இந்த வட்டிதான் வங்கிகளுக்கு வருவாய். பொதுவாக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெறும். இந்த பணம் மற்றும் நிரந்தர வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்ஸட் டெபாஸிட்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் இந்த இரண்டும் கடனாக வழங்கப்படும். ஃபிக்ஸட் டெபாஸிட்களுக்கும், ரிஸர்வ் வங்கிக்கும் வங்கிகள் வட்டி கட்டும். இந்த வட்டியைவிடச் சற்று அதிகமாகக் கடன் பெற்றவர்களிடம் வட்டி வசூலிப்பது வழக்கம்." என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man