Published:Updated:

நம்முடைய டீமேட் (Demat) கணக்கை நிரந்தரமாக மூடுவது எப்படி? | Doubt of Common Man

டீமேட்

டீமேட் கணக்குகளைப் பராமரிக்கவும் அதனை வைத்திருக்கவும் வருடா வருடம் நாம் ஒரு தொகையைச் செலுத்த வேண்டியது அவசியம்.

Published:Updated:

நம்முடைய டீமேட் (Demat) கணக்கை நிரந்தரமாக மூடுவது எப்படி? | Doubt of Common Man

டீமேட் கணக்குகளைப் பராமரிக்கவும் அதனை வைத்திருக்கவும் வருடா வருடம் நாம் ஒரு தொகையைச் செலுத்த வேண்டியது அவசியம்.

டீமேட்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் கங்கா என்ற வாசகர், ``நம்முடைய டீமேட் (Demat) கணக்கை நிரந்தரமாக மூடுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

நம்மில் பலர் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான ட்ரேடிங் கணக்கு , டீமேட் கணக்குகளை ஆர்வமாகத் தொடங்கியிருப்போம். ஆனால், காலப்போக்கில் நம்முடைய சூழ்நிலையால் பங்குவர்த்தகத்தில் கவனம் செலுத்த முடியாமல் முழுமையாக விலகியிருப்போம். நம்முடைய டீமேட் கணக்கு மற்றும் ட்ரேடிங் கணக்கு பராமரிக்கப்படாமல் அப்படியே இருக்கும். டீமேட் கணக்குகளைப் பராமரிக்கவும் அதனை வைத்திருக்கவும் வருடா வருடம் நாம் ஒரு தொகையைச் செலுத்த வேண்டியது அவசியம். நம் பயன்படுத்தவில்லை என்றாலும், இந்தக் கட்டணங்களை நாம் செலுத்திக்கொண்டுதான் இருப்போம். எனவே, பயன்பாட்டில் இல்லாத டீமேட் கணக்குகளை மூடிவிடுவது நல்லது. நம் வாசகர் ஒருவருக்கு டீமேட் கணக்கை எப்படி மூடுவது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நம்முடைய டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

டீமேட் கணக்கு
டீமேட் கணக்கு

நம் வாசகரின் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளப் பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களிடம் இந்தக் கேள்வியை முன் வைத்தோம். அவர் கூறியதாவது, "நாம் நம்முடைய டீமேட் கணக்கை மூடவேண்டும் என முடிவு செய்துவிட்டால், அந்தக் கணக்கில் எந்த நிறுவனத்தின் பங்குகளும் இருக்கக்கூடாது. நம்முடைய டீமேட் கணக்கில் பங்குகள் இருந்தால், நம்மால் கணக்கை மூட முடியாது. எனவே, நம்முடைய டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகளை முதலில் விற்றுவிட வேண்டும். நம்முடைய கணக்கில் பங்குகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, நாம் கணக்கு வைத்திருக்கும் Depository Participant (DP)-யிடம் நம் டீமேட் கணக்கை மூடுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கி அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். ஓரிரண்டு நாட்களில் நம்முடைய டீமேட் கணக்கு மூடப்பட்டதற்கான ஆவணத்தை நமக்குக் கொடுப்பார்கள். அதனையும் வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு டீமேட் கணக்குக்கான கட்டணம் எதையும் நம் வங்கிக் கணக்கில் இருந்து அவர்களால் எடுக்க முடியாது.

பொருளாதார நிபணர் நாகப்பன்
பொருளாதார நிபணர் நாகப்பன்

இதில் சில நேரங்களில் பிரச்சினை வரலாம். Unlisted (பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்படாத பங்குகள்) மற்றும் Delisted (லிஸ்ட் செய்யப்பட்டு பின்னர் பங்குச்சந்தையில் இருந்து டீலிஸ்ட் செய்யப்பட்ட பங்குகள்) பங்குகளை நம்முடைய டீமேட் கணக்கில் வைத்திருந்தால், அவற்றை நம்மால் பங்குச்சந்தையில் விற்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது நம்முடைய டீமேட் கணக்கை மூடுவதில் சிக்கல் ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது, நம்முடைய கணக்கில் இருக்கும் பங்குகளைப் பயன்பாட்டில் இருக்கும் நம்முடைய உறவினர்கள் அல்லது நண்பர்களின் கணக்கிற்கு மாற்றி விடலாம். வேறொரு டீமேட் கணக்கிற்கு மாற்றிவிட்டுப் பின்னர் நம்முடைய டீமேட் கணக்கை மூடிவிடலாம். அப்படி பங்குகளை மாற்றுவதற்கு நம்முடைய DP-யிடம் இருந்து DIS (Delivery Instruction Slip)-ஐப் பெற்று அதில் நாம் பங்குகளை அனுப்ப வேண்டிய டீமேட் கணக்கு குறித்த தகவல்களை நிரப்பிக் கையொப்பமிட்டு அளிக்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய பங்குகள் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டு நம்முடைய டீமேட் கணக்கை மூட முடியும்" எனத் தெரிவித்தார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man