Published:Updated:

How to: LIC IPO பங்கு கிடைத்துள்ளதா எனக் கண்டறிவது எப்படி? I How to check LIC IPO allotment status?

எல்.ஐ.சி ஐ.பி.ஓ ( LIC IPO )

மே 16-க்குள் தகுதியுள்ள முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும்.

Published:Updated:

How to: LIC IPO பங்கு கிடைத்துள்ளதா எனக் கண்டறிவது எப்படி? I How to check LIC IPO allotment status?

மே 16-க்குள் தகுதியுள்ள முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும்.

எல்.ஐ.சி ஐ.பி.ஓ ( LIC IPO )

முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல்.ஐ.சி) ஐ.பி.ஓ பங்குகளின் ஒதுக்கீடு (மே 12-ம் தேதி) நேற்றுடன் முடிந்துவிட்டது.

இதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எளிய வழிகளை பின்பற்றித் தங்கள் பங்கு ஒதுக்கீட்டை அறிந்துகொள்ளலாம். அதாவது, முதலீட்டாளர்கள் பி.எஸ்.இ இணையதளத்திலோ அல்லது ஐ.பி.ஓ பதிவாளரின் இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம்.

ஐபிஓ
ஐபிஓ
IPO

பிஎஸ்இ இணையதளம்

பி.எஸ்.இ இணையதளத்தில் தங்கள் முதலீடுகளை அறிய விரும்புபவர்கள், இந்த இணையதளத்தில் `ஈக்விட்டி' என்பதைத் தேர்ந்தெடுத்து, `லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' என்ற பெயரைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் விண்ணப்ப எண் அல்லது பான் எண்ணை பதிவிட வேண்டும். அடுத்து நான் ரோபோ அல்ல என்பதை உறுதி செய்து, சர்ச் பொத்தானைக் தேர்வு செய்ய வேண்டும்.

ஐ.பி.ஓ இணைய தளம்

ஐ.பி.ஓ இணையதளத்தில் தங்கள் முதலீடுகளை அறிய விரும்புபவர்கள், ஐபிஓ 'லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் விண்ணப்ப எண் அல்லது கிளையன்ட் ஐ.டி அல்லது பான் தேர்ந்தெடுத்து விவரங்களைப் பதிவிட வேண்டும். கேப்ட்சாவை (captcha) உள்ளீட்டு இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

மே 16-க்குள் தகுதியுள்ள முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். அப்படி பங்குகள் ஒதுக்கப்படாத பட்சத்தில் ஏற்கெனவே கட்டிய பணமானது மே 13-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் வரவைக்கப்படும்.