Published:Updated:

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 47% உயர்வு... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி 2022-23-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவை வெளியிட்டது. இதில் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியன் வங்கியின் முழுமையான நிகர லாபம் 47 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,447.3 கோடியாக உள்ளது.

Published:Updated:

இந்தியன் வங்கியின் நிகர லாபம் 47% உயர்வு... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியன் வங்கி 2022-23-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவை வெளியிட்டது. இதில் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியன் வங்கியின் முழுமையான நிகர லாபம் 47 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,447.3 கோடியாக உள்ளது.

இந்தியன் வங்கி

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி 2022-23-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவை வெளியிட்டது. இதில் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியன் வங்கியின் முழுமையான நிகர லாபம் 47% உயர்ந்து ரூ.1,447.3 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.984 கோடியாக இருந்தது.

இந்தியன் வங்கியின் நிகர வட்டி வருமானம், சம்பாதித்த வட்டிக்கும் செலவழிக்கப்பட்ட வட்டிக்கும் உள்ள வித்தியாசம், மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில் 29.4 % அதிகரித்து ரூ. 5,508.3 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,255.2 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி

இந்தியன் வங்கியின் லாபம் அதிகரித்ததால், இயக்குநர் குழு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்க முடிவெடுத்தது. அதன்படி, இந்தியன் வங்கியின் வாரியம், 2022-23 நிதியாண்டில் ஒரு பங்குக்கு ரூ.8.60 டிவிடெண்ட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது வங்கியில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 86% ஆகும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்திலால் ஜெயின் கூறுகையில், ``வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து செயல்படும் இந்தியன் வங்கி ஊழியர்களின் புத்திசாலித்தனம் மற்றும் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி அதன் மூலம் சேவை வழங்குவதே எங்களுடைய நோக்கம்'' என்று தெரிவித்தார்.