Published:Updated:

``பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.35,012 கோடி!" - ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை கூறுவது என்ன?

பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.35,012 கோடி!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2,17,80,757 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.8,086 கோடியும், பஞ்சாப் தேசிய வங்கியில் 1,50,48,156 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.5,340 கோடியும், கனரா வங்கியில் 1,56,22,262 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4,558 கோடியும் உரிமை கோரப்படாமல் இருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.35,012 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது என கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் பதிலளித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.35,012 கோடி!
பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.35,012 கோடி!

மக்களவையில் நிதித்துறை அமைச்சகத்திடம் இதுவரை உரிமை கோரப்படாமல் பொதுத்துறை வங்கியில் இருக்கும் நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் பதிலளித்தார்...

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாத டெபாசிட் கணக்குகளில் இருந்து ரூ.35,012 கோடி பொதுத்துறை வங்கிகளில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் கூறுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்!

உரிமை கோரப்படாத மற்றும் செயல்படாத கணக்குகள் அதிகம் இருக்கும் வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பஞ்சாப் தேசிய வங்கியும், மூன்றாவது இடத்தில் கனரா வங்கியும் உள்ளது.

இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2,17,80,757 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.8,086 கோடியும், பஞ்சாப் தேசிய வங்கியில் 1,50,48,156 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.5,340 கோடியும், கனரா வங்கியில் 1,56,22,262 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.4,558 கோடியும் உரிமை கோரப்படாமல் இருக்கிறது.

"இறந்தவர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் தொகையை உரிமை கோரும் உறவினர்களுக்கு உதவி!" - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
"இறந்தவர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் தொகையை உரிமை கோரும் உறவினர்களுக்கு உதவி!" - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
vikatan

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இறந்தவர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் தொகையை உரிமை கோரும் அவர்களது உறவினருக்கு உதவிட பணியாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது என்றும், அது தான் அவர்களது முன்னுரிமை என்றும் கூறியுள்ளது.

அடுத்ததாக இந்திய ரிசர்வ் வங்கியின் 'வங்கி வாடிக்கையாளர்கள் சேவை' குறித்த சுற்றறிக்கையில்,

  • ஒவ்வொரு வங்கியும் வருடாந்திர ஆய்வு நடத்தி ஒராண்டுக்கு மேலாக செயல்படாத வங்கி கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது செயல்படாத வங்கி கணக்கு குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

  • இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத வங்கி கணக்குகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்களை கண்டுபிடிக்க வங்கிகள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்படாத வங்கி கணக்குகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது வங்கி கணக்கு தகவல்களை அந்தந்த வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். - என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் மக்களவையில் பதிலளித்துள்ளார்.

நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்
நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்

பொதுத்துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத நிதியை பற்றி நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலனிடம் பேசினோம்...

உரிமை கோரப்படாமல் இருக்கும் நிதியின் வாடிக்கையாளர்களில் ஐந்தில் நான்கு பேர் இறந்து போயிருக்கலாம். இன்னும் அரிதாக சில வாடிக்கையாளர்கள் வீடு மாறி சென்றிருக்கலாம் அல்லது வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்றிருக்கலாம்.

10 ஆண்டுகளுக்கு மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் ஆதார் இணைக்கப்பட்டதா? என்பது பெரிய கேள்வி. ஒரு வேளை ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் வாடிக்கையாளர்களை கண்டுபிடிப்பது எளிதாகி இருக்கும். ஆனால் இந்த விசயத்தில் இது பெரிதாக சாத்தியமில்லை.

ரிசர்வ் வங்கி தனி இணையதளம் தொடங்க வேண்டும்!
ரிசர்வ் வங்கி தனி இணையதளம் தொடங்க வேண்டும்!

இந்தியன் ரிசர்வ் வங்கி இதற்காக ஒரு தனி இணையதளம் தொடங்கி, அனைத்து வங்கிகளில் இருந்து செயல்படாத கணக்குகளின் தகவல்களை வெளியிடலாம். அப்போது வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களது வாரிசுகள் எளிதாக அவர்களது செயல்படாத வங்கி கணக்குகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். " என்றார்.

இதிலும் மோசடிகள் நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. மேலும் இது வங்கிகளுக்கு மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.

வங்கியில் இருந்து இந்த பணம் கடைசி வரை உரிமை கோரப்படவில்லை என்றால் அந்த பணத்தை வங்கியால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.