Published:Updated:

e-RUPI: வங்கிக்கணக்கு இல்லாமலேயே பணப்பரிவர்த்தனை; புதிய `இ-ருப்பி' சேவையில் என்ன ஸ்பெஷல்?

`இ-ருப்பி' (e-RUPI) சேவையைப் பயன்படுத்த வங்கிக் கணக்கு, ஆன்லைன் வங்கி, ஆப்ஸ் என எதுவுமே தேவைப்படாது என்பதுதான் இதன் பிரத்தியேக சிறப்பம்சம்.

Published:Updated:

e-RUPI: வங்கிக்கணக்கு இல்லாமலேயே பணப்பரிவர்த்தனை; புதிய `இ-ருப்பி' சேவையில் என்ன ஸ்பெஷல்?

`இ-ருப்பி' (e-RUPI) சேவையைப் பயன்படுத்த வங்கிக் கணக்கு, ஆன்லைன் வங்கி, ஆப்ஸ் என எதுவுமே தேவைப்படாது என்பதுதான் இதன் பிரத்தியேக சிறப்பம்சம்.

`இ-ருப்பி' என்ற புதிய பரிவர்த்தனை தளத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம் செய்தார். இ-ருப்பி சேவையைப் பயன்படுத்த வங்கிக் கணக்கு, ஆன்லைன் வங்கி, ஆப்ஸ் என எதுவுமே தேவைப்படாது என்பதுதான் இதன் சிறப்பம்சம். க்யூ ஆர் கோடு அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவே பணப் பரிவர்த்தனையை மிக எளிதாக மேற்கொள்ள முடியும் என்கிறது `இ-ருப்பி' டிஜிட்டல் பரிவர்த்தனை தளம்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), நிதி சேவைகள் துறை (DFS), தேசிய சுகாதார ஆணையம் (NHA), சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 11 கூட்டாளர் வங்கிகள் ஒன்றிணைந்து இந்த `இ-ருப்பி'யை அறிமுகப்படுத்தியுள்ளன.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த இ-ருப்பி சேவை ப்ரீபெய்ட் வவுச்சர் போல செயல்படும். பயன்பாட்டாளரின் அடையாளம் மற்றும் மொபைல் எண் உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஒருவர் இதை எளிமையாகப் பயன்படுத்த முடியும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பரிவர்த்தனை செய்வதற்குப் பதிலாக க்யூ ஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் தகவல் பயனாளியின் மொபைல் எண்ணுக்கு வழங்கப்படும். அதன்மூலமாகவே பரிவர்த்தனையை எளிதாகச் செய்துகொள்ளலாம். வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி பரிவர்த்தனை செய்வதற்கு மாற்றாக இந்த இ-ருப்பி ப்ரீபெய்டு வவுச்சரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

eRupi
eRupi

இந்தியா முழுக்க 11 வங்கிகளில் செயல்பாட்டுக்கு வர இருக்கும் இந்த இ-ருப்பி ப்ரீபெய்டு வவுச்சர் கிட்டத்தட்ட ஸ்பெஷல் கூப்பன்கள், ப்ரீபெய்டு வவுச்சர்கள் போலவேதான் வேலை செய்கிறது. எந்த நோக்கத்துக்காக இந்த வவுச்சர்கள் வழங்கப்படுகிறதோ அந்தக் குறிப்பிட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும்தான் இந்த இ-ருப்பி வவுச்சர்களைப் பயன்படுத்த முடியும். உதாரணத்துக்கு, நாம் வாங்கும் வவுச்சர் தடுப்பூசி அல்லது மருந்துக்காகப் பணம் செலுத்த உருவாக்கப்பட்டால் அதை அந்த நோக்கத்துக்காக மட்டுமேதான் பயன்படுத்த முடியும். எனவே அரசு குறிப்பிட்ட திட்டங்களுக்காக பயனாளிக்கு ஒதுக்கும் பணத்தை அவர்கள் அதற்காக மட்டுமே செலவிடுவதை அரசால் உறுதிசெய்ய முடியும்.