பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஏடிஎம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளையும் ஏடிஎம் அட்டைகள் இன்றி மேற்கொள்ளும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளதை அண்மையில் கேள்விப்பட்டேன். இவ்வசதி மூலம் ஏ.டி.எம் அட்டைகள் இன்றி பணம் எடுக்கலாம், POS கருவிகள் மூலமும் Cash Point-களிலும் பணம் பெறலாம், பர்ச்சேஸும் செய்யலாம். பயன்படுத்தி பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஸ்மார்ட்டான அதே நேரத்தில் பாதுகாப்பான வங்கிச்சேவை எனும் நோக்குடன், வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து `YONO CASH' எனும் ஒரு புதிய வசதியை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்துள்ளது.

YONO Cash மூலமாகக் கீழ்க்காணும் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்:
1. பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு உள்ளவர்கள் ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்-களில் தினசரி 20,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.
(தினசரி பணம் எடுக்கும் அளவீட்டுக்குள் இந்தத் தொகையும் அடங்கும்.)
2. பாரத ஸ்டேட் வங்கி Merchant-களிடம் தினசரி 2,000 ரூபாய் வரை பணமாகப் பெறலாம்.
3. பாரத ஸ்டேட் வங்கி சர்வீஸ் பாயின்டுகளில் தினசரி ரூ10,000 வரை பணமாகப் பெறலாம்.
4. பாரத ஸ்டேட் வங்கி கார்டுகள் மூலம் தினசரி ரூ 10,000 வரை பர்சேஸ் செய்யலாம்.
இந்த YONO Cash வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் இணையதள வங்கிச்சேவையைப் பெற்றிருப்பது அவசியம்.
பயன்படுத்தும் முறை:
1.ஆன்லைன் பேங்கிங்கில் YONO Cash-னுள் சென்று மேற்காணும் நான்கு வசதிகளில் ஏதேனும் ஒரு விருப்பமான பரிவர்த்தனை முறையைத் தேர்வு செய்துகொள்ளவும். பின் தேவைப்படும் தொகையைக் குறிப்பிடவும்.
2. ஆறு இலக்க Password Create செய்யவும்.
3. வங்கியில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒரு பரிவர்த்தனை எண் அனுப்பப்படும்.
4, நாம் Create செய்த Password மற்றும் வங்கி நமக்கு அனுப்பிய பரிவர்த்தனை எண் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஏ.டி.எம் அட்டை இன்றி பணம் பெறுதல் உள்ளிட்ட மேற்கண்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

பாஸ்வேர்டு மற்றும் பரிவர்த்தனை எண் ஒரு முறை மட்டுமே செல்லும் என்பதால் ஸ்கிம்மர்கள் மற்றும் ஹேக்கர்கள் பயமின்றி வங்கிச் சேவையைப் பயன்படுத்த இது சிறந்த வழிமுறையாகும்.
ஒரு முறை உருவாக்கிய பாஸ்வேர்டு 30 நிமிடங்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால், பாஸ்வேர்டு உருவாக்கிய 30 நிமிடங்களுக்குள் நமது பரிவர்த்தனையை முடிப்பது அவசியம்.
தற்போது SBI Debit கார்டுகளில் மட்டுமே இவ்வசதியைப் பயன்படுத்த முடிகிறது.
Credit Card-களுக்கு இவ்வசதி இன்னும் விரிவாக்கப்படவில்லை. மேலும், இவ்வசதி SBI ஏ.டி.எம்-களில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. கூடிய விரைவில் அனைத்து ஏ.டி.எம்-களிலும் இதனை எதிர்பார்க்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.
அட்டைகள் ஏதுமற்ற மெய்நிகர் வங்கிச்சேவை எனும் குறிக்கோளை நோக்கி இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கி நகர்வது ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால், `Yono Cash' வசதி அறிமுகமாகி பல நாள்கள் ஆகியும் இவ்வசதி குறித்த விவரங்கள் வாடிக்கையாளர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. அதிலும், இணையதளத்தை சிறப்பாகக் கையாளக்கூடிய, நெட் பேங்கிங் வசதி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் கூட இவ்வசதி குறித்து இன்னும் அறியாமல் உள்ளனர். எனவே, வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம்.
வங்கிச் சேவைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை சேவை அளிப்பவர் மற்றும் அதைப் பெறுபவர் என இருவருக்குமே சமமான பங்குண்டு. வங்கிகள், வாடிக்கையாளர் பாதுகாப்பு அம்சங்களில் தனி கவனம் செலுத்தி தொடர்ந்து புதுமையான மற்றும் பாதுகாப்பான உத்திகளை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் வாடிக்கையாளர்கள் வங்கியின் மேல் நம்பிக்கை வைத்து புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முன்வருதலும், புதுமைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதலும் அவசியம்.
எனவே, எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, புதிய தொழில்நுட்பத்தை ஏற்று, பாதுகாப்பான வங்கிச் சேவையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.