ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

கார்ப்பரேட் வேலைக்கு குட்பை... - கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்!

கோகிலாக்‌ஷினி
பிரீமியம் ஸ்டோரி
News
கோகிலாக்‌ஷினி

`கடைகள், ஆன்லைன்ல கிடைக்கிற சாப்பிங் போர்டுகளை விட தரமா, அழகா கொடுக்கணும்னு முடிவு பண்ணி தேக்கு மரத்துல தயாரிச்சோம்

``நான் கார்ப்பரேட் வேலைய விட்டப்போ, ‘படிச்ச படிப்புக்கு சம்பந்தம் இல்லாம இப்போ மரம் அறுத்து எதையோ செஞ்சிட்டு இருக்க’னு பலர் பேசினாங்க. எந்த வேலையா இருந்தாலும், அதுல கிடைக்கிற திருப்திதான் முக்கியம். இதுல எனக்கு அது நிறைய கிடைக்குது’’ - ஒரு மரத்துண்டுக்கு உருவம் கொடுத்தபடியே பேசினார் கோவையைச் சேர்ந்த கோகிலாக்‌ஷினி. கொரோனா காலகட்டத்தில் மரங்களில் அலங்காரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் செய்யும் தொழிலை ஆரம்பித்தவர், தன் கலை நயத்தால் வெற்றி கண்டுள்ளார்.

‘Livelywoods Artistry’ என்ற பெயரில் காய்கறி நறுக்கும் மரப்பலகைகள் (Chopper), சுவர் அலங்கார ஓவியங்கள், சுவர் கடிகாரம், பெயர்ப் பலகை, டேபிள், குழந்தைகளுக்கான பொம்மைகள், பரிசுப் பொருள்கள் என இவர் தயாரிக்கும் 40 வகையான மரப் பொருள்கள் இப்போது கண்டங்களைக் கடந்தும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளராகியுள்ளனர்.

கார்ப்பரேட் வேலைக்கு குட்பை... - கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்!

கோகிலாக்‌ஷினியை ஒரு காலை நேரத்தில் சந்தித்தோம். ``சொந்த ஊர் ஊட்டி. படிச்ச தெல்லாம் கோவை. எம்.பி.ஏ முடிச்சுட்டு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில வேலைபார்த்தேன். கல்யாணம் முடிந்தது. சுயமா ஏதாவது செய் யணும்னு நினைச்சு வேலையை விட்டேன். நான், கணவர், கணவரின் தங்கைனு எல்லா ரோட யோசனைகளையும் கலந்து, மரத்துல வீட்டு உபயோகம், பரிசுப் பொருள்கள்லயே கலைநயமா பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அந்த நேரத்துல என் அப்பா தவறிட்டார். அதுல இருந்தும் நான் வெளில வரவும் இது தேவைப்பட்டுச்சு. 2019-ல இருந்து தீவிரமா தொழில்ல இறங்கினேன். ஆரம்பத் தில், உறவுகள், நண்பர்கள் வட்டாரங்களில் அவங்களுக்குத் தேவைப்பட்ட பொருள்களை செய்து கொடுத்தோம். இன்னொரு பக்கம், இதில் என்னவெல்லாம் புதுசா செய்யலாம்னு நான் என் தேடலை விரிவுபடுத்தினேன். சின்னச் சின்ன நுணுக்கங்களை கத்துக்கிட் டேன். கஸ்டமர்கள் கிடைக்க இன்ஸ்டா கிராம்தான் பெரிய பாலமா கைக்கொடுத்துச்சு. எங்க போஸ்ட்களை பார்த்து நிறைய ஆர்டர்கள் வந்தன’’ என்பவர், தன் வீட்டின் மேல் பகுதியை தொழில்கூடமாக்கி உள்ளார்.

கார்ப்பரேட் வேலைக்கு குட்பை... - கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்!

‘`கடைகள், ஆன்லைன்ல கிடைக்கிற சாப்பிங் போர்டுகளை விட தரமா, அழகா கொடுக்கணும்னு முடிவு பண்ணி தேக்கு மரத்துல தயாரிச்சோம். மக்களுக்கு ரொம்பவே பிடிச்சது. இப்படி ஒவ்வொரு பொருளுக்குமே, அதுல நம்ம தயாரிப்பு சிறப்பா இருக்கணும்னு பார்த்து பார்த்து செஞ்சதோட பலனை கஸ் டமர்கள் எங்களுக்குத் தந்தாங்க. சுவர் ஓவி யங்கள், சுவர் அலங்காரப் பொருள்கள், பெயர்ப்பலகை, குழந்தைகளுக்கான பொம்மைகள், போட்டோஃபிரேம், டேபிள்னு 40 வகையான பொருள்கள் தயாரிக்கறோம். இந்தப் பொருள்களை வீடு, ஹோட்டல், ரிசார்ட், காபி ஷாப்னு அந்தந்த இடத்துக்குத் தகுந்த டிசைன்ல செய்றோம். மொத்த பிசின ஸும் ஆன்லைன்லதான் நடக்குது. ஆர்டர் கொடுத்துட்டா அனுப்பிடுவோம்’’ என்பவர் கஸ்டமர்கள் வட்டம் பற்றி பகிர்ந்தார்.

கார்ப்பரேட் வேலைக்கு குட்பை... - கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்!

‘`இந்தியா முழுவதுமே வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அமெரிக்கா, கனடா மாதிரியான வெளிநாடுகள்ல இருந்தும் ஆர்டர்கள் வருது. சொல்லப்போனா வெளிநாடு ஆர்டர்களுக்கு அந்தப் பொருள்களோட விலையைவிட, அதை அனுப்புறதுக்கான தொகை அதிகமா இருக்கு. இருந்தாலும் அதைக் கொடுத்து வாங்க அவங்க தயாரா இருக்காங்க. அந்தள வுக்கு நம்ம பொருள் டிசைன், தரம்னு அவங் களுக்குப் பிடிச்சுப் போனதில் எங்களுக்குப் பெருமை. பூஜா வைத்தியநாதன், உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், சந்தோஷ் பிரதாப் மாதிரி நிறைய பிரபலங்கள் எங்க வாடிக்கையாளர்கள். இவங்க எல்லாருமே இந்தத் தொழிலுக்கு வந்தப்புறம் அறிமுகமானவங்கதான். அவங் களோட சப்போர்ட்டும் ரொம்பப் பெருசு. இப்ப ஒன் உமன் ஆர்மியா எல்லா வேலை களையும் பார்க்கிறேன். மெஷின் ஆப்பரேட் பண்றதுல நிறைய ரிஸ்க் இருக்கிறதால, ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், பொருளோட ஃபினிஷிங் பார்க்கிறப்போ கிடைக்கிற உணர்வு, மெஷினை கீழ வைக்கவே மனசு வராம ஆக்கிடும். இப்ப ரெண்டு பேரை வேலைக்கு எடுத்துருக்கோம். இப்பவும் மரத்துல தொடங்கி அனைத்துப் பொருள் களையும் நேர்ல போய் பார்த்துதான் வாங்க றோம். தரத்துல சமரசமே இல்லை என்பதால, அதற்கேற்ற விலையை மக்கள் கொடுக்க முன்வர்றாங்க. குறிப்பா, எங்களோட எந்தப் பொருள்லயும் நச்சுத்தன்மை ரசாயனங்கள் பயன்படுத்துறது இல்ல. ஒரு பொருளை தயாரிக்க குறைந்தபட்சம் 3 - 4 நாள்களாகும். எங்க டார்கெட், இத்தனை பொருள்களை உற்பத்தி பண்ணணும் என்பதில்லை; நேர்த் தியா பண்ணனும் என்பதுதான். அடுத்ததா, ஒரு வெப்சைட் உருவாக்கணும்’’ என்பவர், ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தத் தொழிலில் நல்ல வாய்ப்பிருக்கிறது என்கிறார்.

கார்ப்பரேட் வேலைக்கு குட்பை... - கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்!

``மாசம் ஆனா சம்பளம், வருமானம் என்பதை தாண்டி இதுல ஒரு அடையாளம் கிடைக்குது இல்ல... அதுதான் எனக்கான எரிபொருள். இந்தத் துறையில பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. இதுல விருப்பம் இருக்கிற பெண்கள், கலைஞர்களுக்கு நாங்க வாய்ப்புக் கொடுக்கத் தயாரா இருக்கோம். சேர்ந்து சாதிப்போம்’’ - அழைக்கிறார் கோகிலாக்‌ஷினி.