தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

செல்போன் மூலம் கடன்... தேடிவந்து ஏமாற்றும் மோசடி நிறுவனங்கள்! உஷார் மக்களே உஷார்!

செல்போன் மூலம் கடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
செல்போன் மூலம் கடன்...

உஷார்

ஆன்லைன்மூலம் நம் பணத்தைத் திருட மர்மக் கும்பல்கள், வெவ்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு வருகின்றன. அப்படி ஒரு மோசடிக் கும்பலை நேரடியாக எதிர் கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் திரைப் படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கசாலி.

“என் தனிப்பட்ட தேவைக் காக அரசுக்குச் சொந்தமான புதிய தலைமுறை வங்கி ஒன்றில் கடன் கேட்டிருந்தேன். உடனே, பாரத் ஃபைனான்ஸ் என்கிற நிறுவனத்திடம் இருந்து லோன் தரத் தயார்னு எனக்கு மெசேஜ் வந்தது. இவங்க என்னதான் பண்ணு றாங்கன்னு பார்ப்போம்னு நினைச்சு அவங்களோட பேசினேன். ராதிகாங்குற பேர்ல ஒரு பெண் திருநெல் வேலியில இருந்து பேசினாங்க. எனக்கு ரூ.25 லட்சம் தொழில கடன் வேணும்னு கேட்டேன்.

‘உங்க டீட்டெய்ல்ஸை வாட்ஸ்அப் பண்ணுங்க’ன்னு ஒரு நம்பர் கொடுத்தாங்க. அந்த நம்பர் பாலாஜிங்கிற பேர்ல இருந்தது. அந்த நம்பருக்கு என் ஆதார் கார்டு, பான் கார்டு, ஆறு மாச பேங்க் ஸ்டேட்மென்ட் எல்லாத்தை யும் அனுப்பினேன்.

கசாலி
கசாலி

தகவல்களை அனுப்புன கொஞ்ச நேரத்துலயே ‘உங்க சிபில் ஸ்கோர் நல்லாருக்கு... ரூ.25 லட்சம் லோன் அப்ரூவ் ஆகிடுச்சு... அதுக்கான அக்ரி மென்ட் போடுறதுக்கு, நீங்க 2,500 ரூபா அனுப்பணும்’னு சொன்னாங்க.

அரசு / தனியார் வங்கியா னாலும், வங்கி அல்லாத நிதி நிறுவனமானாலும், தொழில் கடன்லாம் கேட்ட உடனே அப்ரூவ் பண்ண மாட்டாங்க. எந்த விசாரணையும் இல்லாம வெறும் புரூஃபை மட்டும் வெச்சுக்கிட்டு ரூ.25 லட்சம் அப்ரூவ் ஆகிடுச்சுன்னு சொல்றாங்கன்னா அவங் களை நாம நம்பவே கூடாது. ‘2,500 ரூபா என்ன, 10,000 ரூபாகூட கட்டுறேன். எனக்கு லோன் அப்ரூவ் ஆனதுக்கான புரூஃப் அனுப்புங்க’ன்னு கேட்டேன்.

உடனே, ராதிகா என்பவர் இன்னொருத்தருக்கு கான்ஃப்ரன்ஸ் போட்டாங்க. அவர் பெயர் ராகுல். மும்பை யில இருந்து பேசுறதாவும், என் லோன் அப்ரூவ் ஆகிட்ட தாவும் சொன்னார். நான் அதுக்கான காப்பி அனுப்புங் கன்னு கேட்டதும் என்னோட மெயில் ஐ.டி கேட்டு வாங்கி னார். வாட்ஸ்அப்ல லோன் அப்ரூவ் ஆனதுக்கான காப்பியை அனுப்பினாங்க. மெயில்ல அனுப்புங்கன்னு கேட்டு வாங்கினேன்.

செல்போன் மூலம் கடன்... தேடிவந்து ஏமாற்றும் மோசடி நிறுவனங்கள்! உஷார் மக்களே உஷார்!

அந்த மெயிலைத் திறந்து பார்த்தா, லாட்டரியில லட்சக்கணக்குல பணம் விழுந்திருக்குன்னு ஏமாத்துற கும்பல் அனுப்புற அதே ஃபார்மெட்ல இருந்தது. அந்த மெயிலைப் பார்த்துட்டு, அவங்களுக்குத் திரும்ப போன் பண்ணி பல கேள்விகளைக் கேட்டேன். உடனே உஷாரானவங்க, கொஞ்ச நேரத்துலேயே அதை டெலிட் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் என் லைனுக்கே அவங்க வரலை” என்றவர், தனியார் நிறுவனங்களிடம் லோன் வாங்கும்போது நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார்.

“நான் ஒரு சில வங்கியில கணக்கு வச்சிருக்கேன். லோன் வாங்குற ப்ராசஸிங்ல நான் இருக்கப்பதான் எனக்கு இந்த மெசேஜ் வருதுன்னா, நம்மளப் பத்தின டேட்டாக்கள் சுலபமா வெளியே பரவுதுன்னு அர்த்தம். ஸ்மார்ட்போன், ஆதார் கார்டெல்லாம் வந்தப்புறம் நம்ம டேட்டா எதுவும் பிரைவேட் கிடையாது. இவங்க அக்ரிமென்ட் காப்பி ரெடி பண்ண 2,500 ரூபா கேட்டாங்க. நான் அதைக் கட்டியிருந்தா, வேறு ஏதாச்சும் காரணம் சொல்லி இன்னும், இன்னும்னு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சுரண்டியிருப்பாங்க. நண்பர் ஒருவர் அப்படி 16,000 ரூபாய் வரை கட்டி அதுக்கப்புறம் தான் அலர்ட் ஆகியிருக்கார்.

நம்ம நாட்டுல கோடிக்கணக்கான பேருக்குப் பணத்தேவை இருக்குது. அப்படிப்பட்டவங்ககிட்ட இதுமாதிரி ப்ராஸிங் ஃபீஸ்னு 2,500 ரூபாயா 100 பேர் கிட்ட வாங்கினா 2.5 லட்சம், ஆயிரம் பேர்கிட்ட வாங்கினா 25 லட்சம். இப்படி கணக்கே இல்லாமல் சம்பாதிக்க முடியும். கடன் கிடைச்சா போதும், என்ன வேணா செய்யலாம்னு இருக்கிறவங்ககிட்ட வேற ஏதேதோ சொல்லிப் பணம் பறிக்கிற கும்பல் இருந்துகிட்டேதான் இருக்கு. நிறைய பேர் இதை யெல்லாம் யாரும் வெளியே சொல்றதில்லை. அதனால கவனம் தேவை.

கடன் வேணும்னா நீங்க வங்கியை நேரடியா அணுகுங்க. உங்களைத் தேடி வர்ற கடன்களை வாங்காதீங்க. வங்கிசாரா நிதி நிறுவனங்கள்லேயே பல நல்ல நிறுவனங்கள் இருக்கு. அதுல மட்டும் கடன் வாங்கப் பாருங்க. போன்ல கேட்டு வர்ற நிறுவனங்களை நல்ல நிறுவனங்கள்னு நினைச்சு மோசம் போகாதீங்க’’ என்று முடித்தார் கசாலி!