என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

சூப்பராகச் செய்யலாம்... சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

சணல் ட்ரே
பிரீமியம் ஸ்டோரி
News
சணல் ட்ரே

#Utility

விருந்தோம்பல் தொடங்கி, தாம்பூலம் கொடுப்பதுவரை வீடுகளில் தவிர்க்க முடியாத பொருள் `ட்ரே' எனப்படும் தட்டு. பெரும்பாலும் அது பிளாஸ்டிக்கில் இருக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஓர் அருமையான மாற்று, `சணல் ட்ரே’. நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்களை வைத்தே இதைச் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் பூமாதேவி.

 பூமாதேவி
பூமாதேவி

தேவையான பொருள்கள்:

சணல் கயிறு, பிரவுன் அட்டை, ஃபெவிக்கால், கத்தி, கத்தரிக்கோல், ஸ்கேல், உருளை வடிவிலான சிறிய டப்பா, வேஸ்ட் கிளாத்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!
சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 1: முதலில் பிரவுன் அட்டை யைச் சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோ வெட்டிக்கொள்ளவும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 2: பிரவுன் அட்டையின் மேற்பகுதியைச் சுற்றிலும், படத்தில் காட்டியுள்ளவாறு ஃபெவிக்கால் கொண்டு கோடுபோல வரைந்து கொள்ளவும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 3: வரைந்திருக்கும் ஃபெவிக்கால் கோட்டுக்கு மேல், சணல் கயிற்றை அழுத்தமாக ஒட்டவும். இதேபோல் ஃபெவிக்கால் கொண்டு வரிசையாக ஒட்டவும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 4: மேற்பகுதி முழுவதும் சணல் கயிறு ஒட்டப்பட்ட அட்டைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதைச் சிறிது நேரம் காற்றில் காய வைக்க வேண்டும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 5: அடுத்து, சணல் கயிற்றைப் படத்தில் காட்டியுள்ளவாறு சற்று நீளமாக வெட்டி, அதைச் சமமாக மடக்கி ஃபெவிக்கால் வைத்து ஒட்டிக் காய வைக்கவும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 6 : மடக்கப்பட்ட சணல் கயிறு காய்ந்த பிறகு, அதை உருளை வடிவிலான சிறிய டப்பா மீது சுற்றி, ஃபெவிக்கால் வைத்து ஒட்டி வளையங்களாகச் செய்து கொள்ளவும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 7: டப்பாமீது சுற்றி வளையங் களாகச் செய்யப்பட்டு, காய்ந்த பிறகு, தனியே எடுத்து வைக்கப்பட்ட சணல் வளையங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 8: சணல் கயிற்றைச் சிறிதாக வெட்டிக்கொண்டு, ஸ்டெப் 5-ல் செய்தது போல இதையும் சமமாக மடக்கி ஃபெவிக்கால் வைத்து ஒட்டிக் காயவைக்க வேண்டும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 9: இந்தக் கயிறு காய்ந்த பிறகு, இதைக்கொண்டு நாம் ஏற்கெனவே செய்து வைத்துள்ள சணல் வளையங்களைப் படத்தில் காட்டியுள்ளவாறு ஃபெவிக்கால் பயன்படுத்தி இணைக்க வேண்டும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 10: இணைக்கப்பட்ட வளையங்களைச் சணல் ஒட்டப்பட்ட பிரவுன் அட்டையின் ஓரங்களில் ஒட்டவும்.

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 11: பிரவுன் அட்டையின் ஓரங்களைச் சுற்றி முழுவதுமாக சணல் வளையங்களை ஒட்டி, சிறிது நேரம் காற்றில் உலர வைத்தால் அழகான `சணல் ட்ரே’ ரெடி!

சூப்பராகச் செய்யலாம்... 
சூழலுக்கு உகந்த சணல் ட்ரே!

ஸ்டெப் 12: இதை ‘தேநீர் ட்ரே’வாகவோ, தாம்பூலம் வைத்துத் தரும் தட்டாகவோ உங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.