நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கிரெடிட் கார்டு பயன்பாடு... ஆர்.பி.ஐ-யின் அதிரடி மாற்றங்கள்..!

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கியமான சில மாற்றங்களை இந்த அக்டோபர் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வர இருக்கிறது.

தற்போது கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் களின் விவரங்கள் அவர்களின் அனுமதி யுடன்தான் ஆன்லைன் வியாபார நிறுவனங் களின் ஆன்லைன் தளங்களில் சேமிக்கப்படு கின்றன.

வாடிக்கையாளர் ஓர் இணையதளத்தைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது ஒவ்வொரு முறையும் விவரங்களைப் பதிவிடாமல் விரைவாகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் இந்த விவரங்கள் சேமிக்கப்படுகின்றன.

கிரெடிட் கார்டு பயன்பாடு... ஆர்.பி.ஐ-யின் அதிரடி மாற்றங்கள்..!

வாடிக்கையாளரின் விவரங்களை இவ்வாறு சேமித்து வைக்கும்போது அவர்களைப் பற்றி வியாபார நிறுவனங்கள் நன்கு அறிய முடியும் என்றாலும், இதன்மூலம் சில முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பிருப்பதை மறுப்பதற் கில்லை.

தற்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவின் படி, வியாபாரத் தளங்களில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்கள் அழிக்கப்பட இருக்கின்றன. கடன் அட்டை பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாத் திடும் பொருட்டு ‘டோக்கன்’ நடைமுறையை வங்கிகள் பயன்படுத்தும்படி ரிசர்வ் வங்கி தற்போது கூறியுள்ளது.

இதன்படி, தொடர்ந்து வியாபாரத் தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்பான விவரங்கள், வியாபாரத் தளங்களில் டோக்கன் வடிவில் மட்டுமே சேமிக்க முடியும். இதன் மூலம் கடன் அட்டை விவரங்களை யாரும் அறிய முடியாது.

முக்கியமான தகவல்கள் ‘மாஸ்க்’ செய்து மறைக்கப்படும். இதனால் வாடிக்கையாளரின் விவரங்களை வியாபாரத் தளங்கள் அறிய முடியாது. இதன் காரணமாக முறைகேடுகள் நடைபெறும் ஆபத்து இல்லை என்பதால், இனி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்!