Published:Updated:

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி! இந்தியாவுக்கு ரூ.35,000 கோடி லாபம்...!

கச்சா எண்ணெய்
News
கச்சா எண்ணெய் ( crude oil )

சீனாவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது..

Published:Updated:

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி! இந்தியாவுக்கு ரூ.35,000 கோடி லாபம்...!

சீனாவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது..

கச்சா எண்ணெய்
News
கச்சா எண்ணெய் ( crude oil )

கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியிலிருந்து உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இந்தியா ரூ.35,000 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா உள்பட உலக நாடுகள் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இதனால் ரஷ்யப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், முக்கியமான சில ஏற்றுமதி பொருள்களின் விலையைக் குறைத்து விற்றது. இதை சாதகமாக பயன்படுத்தி இந்தியா, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா உள்பட சில உலக நாடுகள் எதிர்த்தாலும், இந்தியா அதற்கான விளக்கத்தைத் தந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இருந்து பின்வாங்கவில்லை.

நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களின்படி, சீனாவுக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. போருக்கு முன்னதாக 1 சதவிகிதத்துக்கும் குறைவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா, போருக்குப்பின் 12% இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த ஜூலையில் இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரியாத் திரும்பவும் தன் நிலையில் வந்தபின், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் மூன்றாவது இடத்தை ரஷ்யா இன்றளவும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

வணிகத் துறைத் தரும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி எட்டு மடங்கு அதிகமாக அதிகரித்து, 11.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.3 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரஷ்யாவிடமிருந்தான இறக்குமதி 12 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் 7 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 83% இறக்குமதி மூலமாக எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும். 2021-2022 காலகட்டத்தில் நாட்டின் எண்ணெய் இறக்குமதி 119 பில்லியன் டாலர் அளவுக்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் இது பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது பணவீக்க மேலாண்மையின் ஒரு பகுதி ஆகும். மற்ற நாடுகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடத்தான் செய்கிறது. எண்ணெயை வாங்குவது சுத்திகரிப்பு நிறுவனங்கள்தான்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி!  
இந்தியாவுக்கு ரூ.35,000 கோடி லாபம்...!

அரசாங்கம் அல்ல, மலிவான எண்ணெய் பொருளாதார அளவில் சாதகமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இறக்குமதிக் கட்டணமும் குறைகிறது. அத்துடன் டாலருக்கான தேவையையும் குறைக்கிறது. இதனால் அரசாங்கம் வழங்கும் மானிய விலையும் குறைகிறது” என்று கூறியிருந்தார்.

உலக எண்ணெய் சந்தையில் இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, லாபம் பார்ப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலகட்டத்தில் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருந்தபோது, இந்தியா ரூ.25,000 கோடிக்கு மலிவாக கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரிப்பு கப்பல்களில் சேமித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.