
இது புதுசு
காஞ்சிபுரம் பட்டுப்புடவையிலுள்ள அன்னப்பறவை, கோயில் பிராகாரத்திலுள்ள தாமரை, பிரமிப்பூட்டும் யாளி சிற்பங்கள்... இவற்றையெல்லாம் தங்களின் கடிகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளது ‘டைட்டன்’ கடிகார நிறுவனம்!
தமிழரின் பாரம்பர்யத்தையும் அழகியலையும் வெளிப்படுத்தும் வண்ணம் கலைநுணுக் கத்துடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘நம்ம தமிழ்நாடு கலெக்ஷன்’ கைக்கடிகாரங்கள் அண்மையில் சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டன.

அறிமுக விழாவில் பரதநாட்டியம் ஆடிய தோடு, தமிழர்களின் புராதன அடையாளங்கள் மற்றும் கட்டடக் கலை குறித்துப் பேசினார் நடிகையும் பரதக் கலைஞருமான ஷோபனா.
டைட்டனின் இந்தக் கடிகாரங்கள் தமிழ்நாட்டின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதன்முறையாகத் தமிழ் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“பல ஆண்டுகளாக வெற்றிகரமாகத் தொடரும் எங்கள் பயணத்தில், தமிழகத்தின் பாரம்பர்யத்தையும் வளமான கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையிலான கைக்கடிகாரத் தொகுப்பை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாட்டின் மரபு தனித்துவமானது. தமிழ் மீதான எங்களது அன்பைக்கொண்டாட இதுவொரு சிறிய வாய்ப்பு” என்றார் டைட்டன் நிறுவனத் தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதிகாந்த்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஏழு வெவ்வேறு கலை அம்சங்களுடனான கடிகாரங்கள் இப்போது டைட்டன் ஷோரூம் களில் கிடைக்கின்றன. மெட்டீரியல் ஃப்யூஷன், எம்பாசிங், 3டி ஃபார்மிங் மற்றும் க்னர்லிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.