பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பண மதிப்பிழப்பு நடவடிக்கை... நாடு நன்மை அடைந்ததா..?

பண மதிப்பிழப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
பண மதிப்பிழப்பு

சோஷியல் மீடியா

"பிரதமர் மோடி அறிவித்த பணமதிப் பிழப்பு நடந்துமுடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த நடவடிக்கை குறித்து இப்போது உங்கள் கருத்து என்ன? அதனால் நாடு நன்மை அடைந்துள்ளதாக நினைக் கிறீர்களா?” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் அளித்த கமென்ட்ஸ் இதோ...

“பாமர மக்கள் வங்கியில் கியூவில்நின்ற அவஸ்தை தவிர, இழப்புகள் அவர்களுக்கு இல்லை. பாகிஸ்தானிலிருந்து இங்கு கள்ள நோட்டுகள் வருவதைத் தடுக்கவே பணமதிப் பிழப்பு செய்யப்பட்டதாக உலா வந்த தகவல் உண்மையானால், இது நாட்டு நன்மைக்காகத் தான் என அறியலாம். கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தவர்களுக்குதான் பாதிப்பு”னு சொல்லிருக்காரு கிருஷ்ணகுமார். வெள்ளந்தியாவே இருக்கீங்களே சார்!

“இந்த நடவடிக்கையால் நாடு நிச்சயமாகப் பயனடைந்துள்ளது. நாட்டின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் வளர்ந்துள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகப்படுத்தப் பட்டுள்ளது. கறுப்புப் பணம், தீவிரவாதிகள் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. கறுப்புப் பணம் கொண்டு செயல்படும் அனைத்து சிறு, குறு நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அதிகமாகியுள்ளது”னு சொல்லிருக்காரு கண்ணன். அட, இது எப்போ?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை... 
நாடு நன்மை அடைந்ததா..?

“சரியான நடவடிக்கை. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்”னு பதிவிட்டிருக்காரு செல்வகுமார். சரியா சொல்லிருக்கீங்க ஜி!

“பாகிஸ்தான் பொருளாதாரம் பாதிப்பு அடைந்தது. அடித்த கள்ள நோட்டுகள் வீணாயின. கன்டெயினர் லாரி, உள்ளூர் அரசியல் வாதிகள் தீபாவளி வெடியில் ரூபாய் நோட்டுகளை வெடித்தனர். பொதுமக்கள் சிறிது சிரமப்பட்டது உண்மைதான்”னு சொல்லிருக்காரு பாலு. அட..!

“இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தற்சார்பு பொருளாதாரம் உள்ள ஒவ்வொருவரும் இந்த மாற்றத்தால் கவலை அடையவில்லை”னு சொல்லிருக்காரு காந்தி நரேஷ். சூப்பர் அப்பு!

“எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதைதான். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை”னு சொல்லிருக்காரு சக்திவேல். தத்துவம் சார்!

“பணமதிப்பிழப்பின் நோக்கம், அதன் பலன்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை அரசாங்கம் இப்போதாவது வெளியிட வேண்டும்”னு கோரிக்கை விடுத்துருக்காரு ஜோசப். காத்திருங்க ஜி!

“நாட்டை பாதாளத்தில் தள்ளிய நடவடிக் கை”னு ஆவேசப்பட்டுருக்காரு வேலுசாமி கண்ணதாசன். பொறுமை சாமி பொறுமை!

“நாட்டிலுள்ள அனைத்து கறுப்புப் பணமும் முழுமையாக ஒழிக்கப்பட்ட நாள். அது மட்டுமன்றி நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் இருக்கும் பணம் முழுமையாக ஒழிக்கப்பட்ட நாள். இதில் பயனடைந்தது பணக்கார ஏழைகளே. பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். பயனடைந்தவர்கள் வேண்டுமானால் இந்த நாளை சாதனை நாளாகக் கொண்டாடட் டும்”னு நக்கலா சொல்லிருக்காரு ஐயப்பன் பிரகாஷ். வஞ்சப் புகழ்ச்சி..!