Published:Updated:

பணவீக்கம் எதனால் ஏற்படுகிறது? அதற்கான முக்கியக் காரணம் என்ன? | Doubt of Common Man

பணவீக்கம்
News
பணவீக்கம்

ரூபாயினுடைய வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். இது எப்படி ஏற்படுகிறது?

Published:Updated:

பணவீக்கம் எதனால் ஏற்படுகிறது? அதற்கான முக்கியக் காரணம் என்ன? | Doubt of Common Man

ரூபாயினுடைய வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். இது எப்படி ஏற்படுகிறது?

பணவீக்கம்
News
பணவீக்கம்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் பாலமுருகன் என்ற வாசகர், "பணவீக்கம் எப்படி ஏற்படுகிறது, கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

ரூபாயினுடைய வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். நிதி தொடர்பான பல சொற்களைத் தினமும் செய்திகளிலும், செய்தித்தாள்களிலும் படித்திருப்போம். அது என்னவென்பதை யோசிக்காமல் கடந்தும் வந்திருப்போம். அப்படியான ஒரு சொல்லாகத்தான் பணவீக்கம் என்ற சொல் இருந்து வருகிறது. பணவீக்கம் என்றால் பணத்தின் மதிப்பு குறைவது என்ற பொதுவான ஒரு கருத்து நம்மில் பலருக்கு இருந்தாலும், ஏன் பணவீக்கம் ஏற்படுகிறது திடீரென ஏன் பணத்தின் மதிப்பு குறைகிறது என்று நாம் யோசிப்பதில்லை. நம் வாசகர் ஒருவருக்கு இதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

பணவீக்கம்
பணவீக்கம்

வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம், "ரூபாயினுடைய வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். ரூபாயினுடைய வாங்கும் சக்தி எப்போது குறையும் என்றால் பார்த்தால், இரண்டு விதங்களில் ரூபாயினுடைய மதிப்பு குறைவதை நம்மால் பார்க்க முடியும். உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். ஒரு பொருள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், தேவைக்கு அதிகமான உற்பத்தி இருந்தால், அந்தப் பொருளின் மதிப்பு குறையும். அதேபோல அதிகளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டால் பணவீக்கம் ஏற்படும். இதற்கு உதாரணமாக வெனிசுலா நாட்டை எடுத்துக் கொள்ளலாம். வெனிசுலா நாட்டு அரசு அதிகளவில் பணத்தை அச்சடித்து வெளியிட்டது. அதன் காரணமாக வெனிசுலா பணத்தின் மதிப்பு குறைந்து அதிகப்படியான பணவீக்கத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக வெனிசுலாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.

பொருளாதார நிபுணர் நாகப்பன்
பொருளாதார நிபுணர் நாகப்பன்

இரண்டாவது, நமது தேவைக்கும் குறைவாக ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் அப்போதும் பணவீக்கம் ஏற்படும். பணம் என்பது நமது தேவைகளை நாம் நிறைவேற்றிக்கொள்ள நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு சாதனம். நம்முடைய தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி இல்லை என்றால், நமது தேவையை பூர்த்தி செய்ய அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அந்தப் பொருளை வாங்க முயல்வோம். அதனால் ஒரு பொருளின் விலை உயர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனாலும் பணவீக்கம் ஏற்படுகிறது. மேற்கூறிய இரண்டு நிலைமைகளினாலும் பணவீக்கம் ஏற்படுகிறது. அதாவது பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்போதும், தேவைக்கும் குறைவாக உற்பத்தி இருக்கும்போதும் பணவீக்கம் ஏற்படும்" எனக் கூறினார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man