Published:Updated:

தங்கக் கடன் பத்திரம் குறித்து விளக்க முடியுமா? | Doubt of Common Man

தங்கக் கடன் பத்திரம் | Sovereign Gold Bond
News
தங்கக் கடன் பத்திரம் | Sovereign Gold Bond

8 வருடங்கள் கழித்து முதிர்வடைந்த பிறகு நமக்குக் கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வரவுகளுக்கு வரிப்பிடித்தம் எதுவும் செய்யப்படாது

Published:Updated:

தங்கக் கடன் பத்திரம் குறித்து விளக்க முடியுமா? | Doubt of Common Man

8 வருடங்கள் கழித்து முதிர்வடைந்த பிறகு நமக்குக் கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வரவுகளுக்கு வரிப்பிடித்தம் எதுவும் செய்யப்படாது

தங்கக் கடன் பத்திரம் | Sovereign Gold Bond
News
தங்கக் கடன் பத்திரம் | Sovereign Gold Bond
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் செந்தில் என்ற வாசகர், "தங்கக் கடன் பத்திரம் குறித்து விளக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் தொடங்கி, பெரிய நிறுவனங்கள் வரை தங்கம் வாங்குவது என்பது முக்கியமான முதலீட்டு விருப்பமாகப் பார்க்கப்படுகிறது. நாம் அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் நேரடியாகத் தங்கம் வாங்கியிருப்போம். ஆனால், தங்கக் கடன் பத்திரங்கள் (Sovereign Gold Bond) பற்றி நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருப்பதில்லை. தங்க முதலீட்டுப் பத்திரம் என்ற ஒன்று இருப்பதே நமக்குத் தெரிவதில்லை. அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் அது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. நம் வாசகர் ஒருவருக்கு தங்கக் கடன் பத்திரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. அதை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

பொருளாதார நிபுனர் நாகப்பன்
பொருளாதார நிபுனர் நாகப்பன்

நம் வாசகரின் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளப் பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களை அணுகினோம். தங்கக் கடன் பத்திரங்கள் பற்றி அவர் விவரித்தவை, "மத்திய அரசின் சார்பில் தங்கத்திற்குப் பதிலாக ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுபவையே தங்கக் கடன் பத்திரங்கள். இன்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் போது நம்மால் வாங்க முடியும். தினசரி பயன்பாட்டுக்காக அன்றி முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்கள் அந்தத் தங்கத்திற்குப் பதிலாக இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இவற்றை வாங்குவது மற்றும் விற்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்ட பிறகு ஆராய்ந்து தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சிறப்பு" என்றார்.

அரசிடம் இருக்கும் தங்கத்தின் அளவிற்கு மட்டும்தான் தங்கக் கடன் பத்திரங்களை மத்திய அரசு வெளியிடுமா?

"இல்லை, தங்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவிற்கு மட்டும்தான் தங்கப் பத்திரங்கள் வெளியிட வேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை. எவ்வளவு தங்கப் பத்திரம் வேண்டுமானாலும் அரசு சார்பில் வெளியிட முடியும்."

தங்கக் கடன் பத்திரங்களை வாங்குவது மற்றும் விற்பதில் தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?

"ஒரு நபர் குறைந்தபட்சமாக ஒரு கிராமில் இருந்து 4 கிலோ வரை தங்கக் கடன் பத்திரங்களாக வாங்க முடியும். நீங்கள் தங்கம் வாங்கியிருக்கிறீர்கள் என்பதற்கான ஆவணமாகச் சான்றிதழ் வழங்கப்படும் அல்லது உங்களது டீமேட் கணக்கில் செலுத்தப்படும் (எந்தச் சூழ்நிலையிலும் இதைத் தங்கமாக நம் கைகளில் பெற முடியாது). இப்படி வாங்கப்படும் தங்கக் கடன் பத்திரம் முதிர்வடையும் காலம் 8 ஆண்டுகள். கடன் பத்திரத்தை வாங்கி 8 ஆண்டுகள் கழித்தே அந்தக் கடன் பத்திரத்தைக் கொடுத்து, அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் விற்கிறதோ அந்த விலையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தங்கம்
தங்கம்

இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வதில் சில நன்மைகள் இருக்கின்றன. 8 வருடங்கள் கழித்து முதிர்வடைந்த பிறகு நமக்குக் கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வரவுகளுக்கு வரிப்பிடித்தம் எதுவும் செய்யப்படாது. அதே போல இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தை நாம் வைத்திருக்கும்போது வருடத்திற்கு 2.5 சதவிகிதம் அளவிற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை நமக்கு வட்டி வழங்கப்படும். 8 வருடகாலத்துக்கு முன்பே தங்கக் கடன் பத்திரத்தை விற்கும் பட்சத்தில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படும். அதற்கேற்ப நமக்குக் கிடைத்திருக்கும் வருவாய்க்கு வரி கட்ட வேண்டியிருக்கும். அதாவது, 5,000 ரூபாய்க்குத் தங்கக் கடன் பத்திரம் வாங்கி, முதிர்வடையும் காலத்திற்கு முன்னரே விற்கும் பட்சத்தில் பணவீக்க விகிதத்திற்கு ஏற்ப 5,000 ரூபாய் என்பது 5,400 எனக் கூடியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த 5,400 ரூபாயைத் தவிர்த்துக் கூடுதலாக நமக்குக் கிடைத்திருக்கும் வருவாய்க்கு நாம் வரி கட்ட வேண்டும்.

இந்தத் தங்கக் கடன் பத்திரங்கள் வெளியானவுடன் மும்பைப் பங்குச்சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். முதிர்வடையும் காலத்திற்கு முன்பாக விற்க வேண்டும் என்றால் பங்குத் தரகர்கள் மூலமாக அங்கு நாம் விற்பனை செய்துகொள்ள முடியும். இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் ஆண்டுக்கு இருமுறை நமக்குக் கிடைக்கும் வட்டிக்கு TDS கிடையாது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை முதிர்வு காலத்திற்கு முன்பாக அவசரப் பணத் தேவைகளின் போது சாதாரணத் தங்கம் போல அடமானமும் வைத்துக்கொள்ள முடியும்.

தங்கம்
தங்கம்

இந்தப் பத்திரங்களில் குறிப்பிடப்படுவது 24 கேரட் சுத்தத் தங்கம் ஆகும். டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால் பங்குத் தரகர்கள் மூலமாகவே இந்தத் தங்கக் கடன் பத்திரங்கள் வாங்க விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஆன்லைன் பேமண்ட் வசதிகள் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்குக் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. இந்தத் தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை என்பது கூடுதல் ப்ளஸ். நீண்ட கால முதலீட்டுக்காகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் தங்கத்திற்குப் பதிலாகத் தாராளமாக இந்தத் தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்."

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man