ரியல் எஸ்டேட், தங்கம் என பாரம்பரிய முதலீடுகளிலேயே கவனம் செலுத்திவந்த மக்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது ஒரு வகை. அதற்கு பங்குச் சந்தை குறித்த தெளிவும், அனுபவமும் அதேசமயம் கணிசமான நேரமும் தேவை. அப்போதுதான் பங்குச் சந்தையில் நம்மால் நஷ்டம் அடையாமல் லாபம் பார்க்க முடியும்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு பங்குச் சந்தை குறித்த அனுபவமோ, தெளிவோ இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் பங்குச் சந்தை முதலீட்டுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கவும் முடியவில்லை. இதற்காகவே உருவாக்கப்பட்டவைதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். தேர்ந்த அனுபவமுள்ள நிபுணர்கள் பங்குச் சந்தை முதலீடுகளை நிர்வகிக்கும் பணியைச் செய்கிறார்கள். நாம் முதலீடு செய்ய விரும்பும் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலமாக முதலீடு செய்தால் பங்குச் சந்தையின் பலனை எல்லோருமே அனுபவிக்க முடியும்.
ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் பல வகைகள் உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் பல விதமான மியூச்சுவல் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. முதலீடு என்பது ஒவ்வொருவரின் தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்கு, சேமிப்புப் பழக்கம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் எது என்பது தெரியாமல் இருக்கின்றனர். சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்துவிட்டாலே நம்முடைய முதலீட்டு இலக்கை பாதி எட்டிவிட்டோம் என்று சொல்லலாம்.
சரியான ஃபண்டை தேர்வு செய்வது எப்படி?
இந்தக் கேள்விக்கான பதிலை நாணயம் விகடன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடம் கொன்டு சேர்த்துவருகிறது. தற்போது மதுரையில் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் அனுமதி இலவசம். அனைவரும் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

நிகழ்ச்சி விவரங்கள்: நாணயம் விகடன் மற்றும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?' என்ற நிகழ்ச்சி மதுரையில் டிசம்பர் 24-ம் தேதி, சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. கூட்டம் சம்பக்குளம் எஸ்விபி கார்டன் ஹோட்டல் ஸ்டெர்லிங் வி கிராண்ட்-ல் நடக்க்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள். அனுமதி இலவசம். அனைவரும் வருக. பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G