ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்... - அவசியம் அறிய வேண்டிய நிதித் திட்டமிடலின் அடிப்படை!

ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்...

கொரோனாவால் அதிகரித் திருக்கும் மருத்துவச் செலவுகள் இன்று இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்பதை உணர்த்தி யிருக்கின்றன.

கை நிறைய சம்பாதித் தாலும், முறையான நிதிப் பழக்கம் இல்லாததால், இன்ஷூரன்ஸ் எடுத்து வைக்காத தால், அவசரகால நிதியைச் சேமிக்காததால், இன்று நம்மில் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.

நிதிச் சுதந்திரத்துடன் செயல்படுவதற்கு நிதித் திட்டமிடல் அவசியம் என்பதை வலியுறுத்தும் நிதி ஆலோசகர் அனிதா பட், அது குறித்து விளக்கமாகப் பேசுகிறார்.

“ஒவ்வொரு குடும்பத்துக்கும் பட்ஜெட் மிகவும் முக்கியமானது. ஆனால், இன்று நாட்டின் பட்ஜெட்மீது இருக்கும் அக்கறை கூட, பலருக்கு அவரவர் வீட்டின் பட்ஜெட் மீது இருப்பதில்லை.

மற்ற விஷயங்களை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என பிரித்துப் பார்த்துச் செயல் படுவது போல, நிதித் திட்டமிடலையும் கொ.மு, கொ.பி என பிரித்து, அதற்கு ஏற்றாற்போல திட்டமிடுவது அவசியம்” என்றவர் ஸ்டெப் - பை - ஸ்டெப்பாக என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினார்.

அனிதா பட்
அனிதா பட்

ஸ்டெப் 1: அவசரகால நிதி!

அவசரகால நிதி (Emergency Fund) சேமிப்பு என்பதுதான் நிதித் திட்டமிடலின் முதல் படி. ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டாலோ, ஏதாவது அசம்பா விதம் ஏற்பட்டு வருமானம் ஈட்ட முடியாத நிலை உருவானாலோ, மருத்துவ தேவைகளுக்காக நீண்ட விடுமுறை எடுக்க நேர்ந்தாலோ அந்தக் காலகட்டத்தில் குடும்பத் துக்குத் தேவைப்படும் நிதியை முன்னரே சேமித்து வைப்பதுதான் இந்த அவசரகால நிதி.

ஒருவர், தன் குடும்பத்துக்குத் தேவையான மாதாந்தர செலவுத் தொகையைக் கணக்கிட்டு, குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங் களுக்கான மொத்த தொகையையும் அவசரகால நிதியாகச் சேமித்து வைக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.20,000 அத்தியாவசிய செலவு தொகை யாகக் கொண்டால், அவர் குறைந்தபட்சம் ரூ.1.20 லட்சம், அதிகபட்சம் ரூ.2.40 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.

ஸ்டெப் 2: இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!

கொரோனாவால் அதிகரித் திருக்கும் மருத்துவச் செலவுகள் இன்று இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்பதை உணர்த்தி யிருக்கின்றன.

ஒரு குடும்பத் தலைவர், சம்பள தாரரோ சொந்தத் தொழில் செய்பவரோ, ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவசியம் அவருடைய பெயரில் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருந்தாக வேண் டும்.

ஆண்டு வருமானத்தைப்போல் 10 மடங்குக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணத்துக்கு ஒருவருடைய வருட சம்பளம் ரூ.5 லட்சம் எனக் கொண்டால், குறைந்த பட்சம் ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். குறைந்த வயதுள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கும்போது, இதற்கான பிரீமியம் மிக மிகக் குறைவாக இருக்கும்.

அதேபோலத்தான் ஹெல்த் இன்ஷூ ரன்ஸும். நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு, குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் மதிப்பு கொண்ட ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி அவசியம்.

இதற்கு குடும்ப உறுப்பினர்களின் வயது, உடல்நலம் ஆகியவற்றைப் பொறுத்து நிறுவனத்துக்கு நிறுவனம் பிரீமியம் வித்தியாசப்படும்.

ஸ்டெப் 3: இலக்குகளை நிர்ணயித்தல்!

குழந்தைகளின் மேற்படிப்பு, அவர்களின் திருமணம், சொந்த வீடு, வருடம் ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா, ஓய்வுக்காலம் என நம் ஒவ்வொருவருக்கும் பல எதிர்கால தேவைகள் இருக்கும். தேவைகளும், அவற்றுக்கான திட்டமிடலும் தெளிவாக இருக்கும்போதுதான் இலக்குகளை நம்மால் சிரமமின்றி அடைய முடியும். அதனால் குறுகிய காலத்தில் அடைய வேண்டிய தேவைகள் எவை, நீண்டகாலத்தில் அடைய தேவைகள் எவை என்கிற கால அளவை நிர்ணயம் செய்து, அதன் பிறகு, முதலீட்டுக்கான விஷயங்களை ஆரம்பியுங்கள்.

ஸ்டெப் 4: சேமிப்பும் முதலீடுகளும்!

மேலே சொன்ன அவசரகால நிதி சேமிப்பு மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்த பிறகே, நிதி ஆலோசனையின் நான்காவது நிலையான சேமிப்பு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆரம்பிக்கும் முதலீடுகள், இடையிடையே ஏதேனும் நிதிப் பிரச்னைகள் ஏற்படும்போது இடைநிறுத்தம் ஆகாமல் இருக்கும்.

ஒருவர் தனது சம்பளத்தில் 30% தொகையை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக ஒதுக்க வேண்டும் என்பது நியதி. மீதமிருக்கும் 70%-ல் 40% கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவதற்கு, மீதி இருக்கும் 30% அன்றாட தேவைகளுக்கு எனப் பிரித்துக்கொள்ளலாம். கடன் தேவை இல்லாதவர்கள் அதையும் முதலீடு மற்றும் சேமிப்புக்கு ஒதுக்கும்போது, எதிர்கால தேவைகளை சீக்கிரமாகவே அடையலாம்.

ரிஸ்க் அதிகம் உள்ள பங்குச்சந்தை முதலீடுகளில் நேரடியாக முதலீடு செய்ய யோசிப்பவர்கள், தயக்கம் இல்லாமல் பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தங்களின் நீண்டகால தேவை களுக்காக முதலீட்டை ஆரம்பிக்கலாம். இது தவிர ஃபிக்ஸட் டெபாசிட், கோல்டு பாண்டுகள், பெண் குழந்தைகளுக்கு என்றால் மத்திய அரசின் ‘செல்வ மகள் சேமிப்பு’ போன்ற திட்டங்களிலும் பிரித்து முதலீடு செய்யலாம்.

ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்... - அவசியம் அறிய வேண்டிய நிதித் திட்டமிடலின் அடிப்படை!

ஸ்டெப் 5: போர்ட்ஃபோலியோ ரெவ்யூ!

முதலீடுகளை ஒருமுறை செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், இடை நிறுத்தம் செய்யாமல் ஒவ்வொரு மாதமும் அதைத் தொடர்வது முக்கியமாகும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொண்டிருக்கும் முதலீடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத் தைக் கணக்கிட்டுப் பார்ப்பது அவசியம்.

ஒருவேளை நீங்கள் ஆரம்பித்த ஒரு முதலீடு சரியாக வருமானம் தரவில்லை என்றால், அதை வேறு முதலீடுகளுக்கு மாற்றவும் இந்த மறு ஆய்வு உதவி செய்யும். அதனால், ஒவ்வோர் ஆண்டும் நிதி ஆலோசகர்களுடன் கலந்து பேசி, முதலீட்டு போர்ட் ஃபோலியோவை அலசி ஆராய்வது முக்கிய மாகும்.

ஃபார்முலாவை மாற்றுங்கள்!

நாம் இத்தனை காலமாக `வருமானம் (Income) - செலவு (Expense) = முதலீடு (Investment)’ என்ற ஃபார்முலாவைக் கடைப்பிடித்து வந்தோம். அதாவது, வருமானத்திலிருந்து செலவெல்லாம் போக மிச்சமிருந்த பணத்தை முதலீடு செய்தோம். இப்படி இருந்தால் பணம் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. எனவே, `வருமானம் (Income) - முதலீடு (Investment) = செலவு (Expense)’ என்று ஃபார்முலாவை மாற்றினால், நிறைய பணத்தைச் சேர்க்க முடியும்.