பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பணத்தைக் கையாளும் கலை... குழந்தைகளுக்கு எப்படி சொல்லித் தருவது..?

பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சி

உழைத்தால்தான் நமக்கு பணம் கிடைக்கும் என்பதை அவர்களுக்குப் புரியும்படி தெளிவுபடுத்துங்கள்.

நம் பிள்ளைகள் பிற்காலத்தில் பணத்தை சிறப்பாகக் கையாள நாம் அவர்களின் இளம் வயதிலேயே போதுமான பயிற்சி கொடுப்பது அவசியம். பொதுவாக, ஏழு வயதுக்கு மேல் சிறுவர்கள் பணத்தைக் கையாளும் திறனைப் பெறுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, குறைந்த பட்சம் அந்த வயதிலாவது பணத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பது நல்லது.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com/

நாணயங்களைக் கையாளும் திறன்...

முதலில், சிறிய மதிப்பிலான நாணயங்களைக் கொடுத்து அவற்றை எண்ணுவதற்குப் பழக்குங்கள். முதலில் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து அவற்றை எண்ணுவதற்குப் பழக்குங்கள்.

அதன்பிறகு ரூ.2, ரூ.5, ரூ.10 எனப் பல நாணயங்களைக் கலந்து கொடுத்து அவற்றை எண்ணப் பழக்குங்கள். இதன் பிறகு, ரூ.10, ரூ.20, ரூ.50 என பல ரூபாய்த் தாள்களைக் கொடுத்து அவற்றின் மதிப்பு என்ன என்பதை ஒரு காகிதத் தில் எழுதச் சொல்லுங்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் கையாளும் திறன் குழந்தைகளுக்கு இயல்பாக வரும். பிற்காலத் தில், பணம் தொடர்பாக முடிவு செய்ய அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்!

உழைத்தால் கிடைக்கும் பணம்...

வீட்டில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, வாகனங் களைத் துடைப்பது போன்ற வேலைகளைப் பிள்ளை களைச் செய்யச் சொல்லுங் கள். எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கு பணம் கொடுங்கள். உதாரணமாக, அரை மணி நேரம் ஒரு வேலையைச் செய்தால் ரூ.50 என்பது போல் கொடுங்கள்.

கூடவே சில நுட்பமான வேலைகளை செய்யச் சொல்லி, அதை அவர்கள் சிறப்பாக குறுகிய காலத்தில் செய்யும்போது அதற்கு வழக்கத்தைவிட இருமடங்கு தொகையைக் கொடுங்கள். அப்போது இந்த வேலையை நீ சரியாகவும் குறுகிய காலத் திலேயும் செய்ததால், இந்த இரட்டிப்புப் பணம் கிடைத் திருக்கிறது என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.

உழைத்தால்தான் நமக்கு பணம் கிடைக்கும் என்பதை அவர்களுக்குப் புரியும்படி தெளிவுபடுத்துங்கள்.

முதலீடு...

இந்தப் பணத்தை வங்கி யில் முதலீடு செய்து அதற்கு கிடைக்கும் வட்டி என்ன என்பதை வங்கிக் கணக்கு புத்தகத்தில் அச்சிட்டு அவர் களுக்கு விளக்கிச் சொல்லுங் கள். மேலும், வட்டிக்கு வட்டி சேரும் கூட்டு வளர்ச்சி (compounding) பற்றி எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளை சிறுவயதிலேயே பணத்தைச் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய வைத்து, அதைப் பல மடங்காகப் பெருக்கும் வழியையும் சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்கு ஏதாவது தேவையெனில், அதை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் பழக்குங்கள்.

பணத்தைக் கையாளும் கலை
பணத்தைக் கையாளும் கலை

கடன்...

பள்ளிக்கூடத்தில் கடன் வாங்கி கழித்தல் கணக்கு போட்டிருக்கும் பிள்ளைகளுக்கு 10 வயதாகும்போது கடன் என்றால் என்ன, அதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன, நல்ல கடன், கெட்ட கடன் எது, எப்போது கடன் வாங்க வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், வட்டி கட்டாவிட்டால் என்ன நடக்கும் என்கிற விவரங்களை எடுத்துச் சொல்லுங்கள்.

நல்ல கடன் என்பது குடியிருக்க வீடு வாங்க, வீடு கட்ட வாங்கும் வீட்டுக் கடன், தொழில் தொடங்க வாங்கும் வணிகக் கடன் ஆகும் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். அடுத்து, விரும்பத்துக்கான பொருள்களை அதிக வட்டியில் வாங்கும் கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் போன்றவை கெட்ட கடன்கள் என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.

ஒரு பொருளை கடனில் வாங்குவதைவிட பணத்தைச் சேர்த்தபின் வாங்குவது நல்ல பழக்கம், தேவை இல்லாமல் வட்டி கட்ட வேண்டாம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

பிள்ளைகளுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் பண்டிகைக் காலங்களில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமிக்கும் வழக்கத்தை உருவாக்குங்கள். அப்படிச் சேரும் பணத்தை மூன்று மாதத்துக்கு ஒரு முறை வங்கிக்குச் சென்று டெபாசிட் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இப்போதெல்லாம் சிறுவர்களின் பெயரில் வங்கிக் கணக்கை சுலபமாக ஆரம்பிக்க முடியும்.

இப்படி பிள்ளைகளுக்கு பண நிர்வாகத்தை சொல்லிக் கொடுக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கு போடும் திறனும் அதிகரிக்கும்!