நடப்பு
Published:Updated:

சந்தைக்குப் புதுசு : அனைத்து வயதினருக்கும் ஏற்ற முதலீடு! - புதிய அறிமுகம்..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

வீ-சாட் சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே வங்கி அதிகாரிகளுடன் வீடியோ சாட் வங்கிச் சேவையைப் பெறலாம்!

ண்மையில் சந்தையில் அறிமுகமாகியுள்ள சில புதிய திட்டங்கள் பற்றிய குறிப்புகள்...

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்

எல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘எல் அண்ட் டி எஃப்.எம்.பி - சீரிஸ் XX பிளான் ஏ’ (L&T FMP - Series XX - Plan A) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குளோஸ்டு எண்டட் வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். நவம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, நிரந்தர வருமானம் தரக்கூடிய கடன் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களிலும், அரசு பாண்டுகளிலும் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டில் குறைந்த அளவே ரிஸ்க் இருக்கும் என்பதால், அனைத்து வயதினரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

சந்தைக்குப் புதுசு : அனைத்து வயதினருக்கும் ஏற்ற முதலீடு! - புதிய அறிமுகம்..!

இ.எஸ்.ஜி - இ.டி.எஃப் ஃபண்ட்

மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘மிரே அஸெட் இ.எஸ்.ஜி செக்டர் லீடர்ஸ் இ.டி.எஃப் ஃபண்ட் மற்றும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்’ (Mirae Asset ESG Sector Leaders ETF & Mirae Asset ESG Sector Leaders Fund of Fund) திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்த இவ்விரு திட்டங்களிலும் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். நவம்பர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் மற்றும் சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நிஃப்டி 100 இ.எஸ்.ஜி துறைசார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. நுழைவுக் கட்டணமும், வெளியேறும் கட்டணமும் கிடையாது. இந்த ஃபண்டில் ஓரளவுக்கு ரிஸ்க் இருக்கிறது என்பதால், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

சந்தைக்குப் புதுசு : அனைத்து வயதினருக்கும் ஏற்ற முதலீடு! - புதிய அறிமுகம்..!

சி.பி.எஸ்.இ பாண்டு ப்ளஸ் ஃபண்ட்

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘நிப்பான் இந்தியா இ.டி.எஃப் நிப்ஃடி சி.பி.எஸ்.இ பாண்டு ப்ளஸ் எஸ்.டி.எல்’ (Nippon India ETF Nifty CPSE Bond Plus SDL) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குளோஸ்டு எண்டட் வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். நவம்பர் 3-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் நிதி, நிஃப்டி சி.பி.எஸ்.இ பாண்டுகளில் முதலீடு செய்யப் படுகிறது. இந்த ஃபண்டில் குறைந்த அளவே ரிஸ்க் இருக்கும் என்பதால், அனைத்து வயதி னரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

‘வி-மீட்’ வசதி

கொரோனா காலகட்டத்தில் ஃபெடரல் பேங்க் தனது வாடிக்கையாளர்களின் நலனுக் காகப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில், மொபைல் ஏ.டி.எம் வசதியையும் வங்கிக்கு வர வேண்டிய தேவை இருப்பின் ‘ப்ரீ புக்கிங்’ செய்துதரும் சேவையையும் வழங்கியது. இந்த வரிசையில், தற்போது ‘வி-மீட்’ என்ற புதிய சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையின் மூலம், வீட்டில் இருந்தபடியே வங்கி அதிகாரிகளுடன் வீடியோ சாட் மூலம் வங்கிச் சேவையைப் பெறலாம். சந்தேகம் மற்றும் விளக்கங்களையும் இந்த சேவையின் மூலம் ஃபெடரல் பேங்க் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.