நடப்பு
Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்காலத்துக்கு ரூ.1 கோடி இலக்கு..! - முதலீட்டு ஆலோசனை

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

பணவீக்கம் ஆண்டுக்கு 10% எனில், உங்கள் மகனின் கல்விச் செலவுக்கு 10 ஆண்டுகளில் ரூ.25.93 தேவை!

என்னுடைய வயது 35. நான் 2016 முதல் சில ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். ஓய்வுக்கால நிதியாக ரூ.1 கோடி சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. அதற்கு நான் இன்னும் எவ்வளவு தொகையைக் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். என்னுடைய முதலீடுகள் சரியாக உள்ளதா, மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா?

என் முதலீடுகள்... ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி குரோத் ஃபண்ட் ரூ.1,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 குரோத் ரூ.1,500.

- ஆர்.சிவசண்முகம், ஈரோடு

ஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்காலத்துக்கு ரூ.1 கோடி இலக்கு..! - முதலீட்டு ஆலோசனை

“உங்கள் ரிட்டையர்ட்மென்ட் வயது 59 என எடுத்துக்கொண்டால், இன்னும் 24 ஆண்டுகளில் உங்கள் சேமிப்பைச் செய்து முடிக்க வேண்டும். உங்கள் முதலீடுகளை ஜனவரி 2016 முதல் செய்து வருகிறீர்கள் எனில், இப்போதுள்ள மியூச்சுவல் ஃபண்டின் மதிப்பு ரூ.2.93 லட்சம். உங்களது மாத முதலீட்டுத் தொகை ரூ.4,500. பின்வரும் முறையில் 24 வருடங்களுக்கு முதலீடு செய்து, தற்போதுள்ள முதலீட்டையும் சேர்த்து, அந்த முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் சராசரி வருமானம் 11% இருக்கும்பட்சத்தில் உங்கள் குறிக்கோளான ரூ.1 கோடியை அடைய வாய்ப்புள்ளது.

பரிந்துரை: ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ டிஸ்கவர் குரோத் ஃபண்ட் ரூ.1,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ரூ.1,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ரூ.1,000, யூ.டி.ஐ ஈக்விட்டி ரூ.500, ஐ.டி.எஃப்.சி கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் பாண்ட் ஃபண்ட் ரூ.1,000 (ஆரம்ப முதலீடு ரூ.5,000). ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 மற்றும் டி.எஸ்.பி ஸ்மால் ஃபண்டுகள் எதிர்ப்பார்த்த வருமானம் தரவில்லை. ஆதலால், அவை மாற்றப்பட்டுள்ளன.”

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சில ஃபண்டுகளில் மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள் சிறந்த ஃபண்டுகளா, தொடர்ந்து முதலீடு செய்யலாமா? தற்போது முதலீடு செய்துவரும் தொகை போக கூடுதலாக மாதம் ரூ.10,000 முதலீடு செய்யத் தயாராக இருக்கிறேன். நடுத்தர அளவு ரிஸ்க் கொண்ட நல்ல வருமானம் தரும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டவும்.

தற்போது முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்... எல் அண்ட் டி இந்தியா வேல்யூ ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000.

- பி.திருநாவுக்கரசு, கோவை

ஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்காலத்துக்கு ரூ.1 கோடி இலக்கு..! - முதலீட்டு ஆலோசனை

“உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் இப்போதைய மதிப்பு ரூ.1.36 லட்சம். தற்போது செய்துவரும் முதலீடுகளுடன் அஸெட் அலோகேஷன் முறையில் பின்வரும் வகையில் செய்துவர, அதற்கு சராசரியாக 11% வருமானம் கிடைக்கும்பட்சத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.14.29 லட்சமாக வளர வாய்ப்புள்ளது.

உங்களுக்கான போர்ட்ஃபோலியோ பரிந்துரை: எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் ரூ.3,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ரூ.3,000, எஸ்.பி.ஐ ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ3,000, யு.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, டி.எஸ்.பி கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட் ரூ.3,000.”

உங்கள் மகளின் திருமணச் செலவு தற்போதைய மதிப்பில் ரூ.20 லட்சம் எனில், அடுத்த 20 ஆண்டுகளில் 6% பணவீக்க விகிதத்தில் ரூ.64.14 லட்சமாக உயர வாய்ப்புள்ளது!

என் வயது 38. என்னுடைய மகனுக்கு 8 வயது; மகளுக்கு 4 வயது. அடுத்த 15 - 18 ஆண்டுகள் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். நான் என் ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.10,000 பி.பி.எஃப் முதலீடு செய்துவருவதால், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் செய்யும் முதலீடுகள் முழுக்க முழுக்க என் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காகத்தான். நான் செய்துவரும் ஃபண்ட் முதலீடுகள் சரியா..?

என் முதலீடுகள்... ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட் ரூ.2,000. தற்போதைய என் போர்ட்ஃபோலியோ மதிப்பு ரூ.10 லட்சம்.

- கார்த்தி, மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்காலத்துக்கு ரூ.1 கோடி இலக்கு..! - முதலீட்டு ஆலோசனை

“உங்கள் போர்ட்ஃபோலியோவில் ரிஸ்க் பரவல் வாயிலாக உங்கள் இலக்குகளை அடைய பின்வரும் மாற்றங்கள் தேவைப் படுகின்றன. ஆக்ஸிஸ் புளூசிப் ரூ.3,000, பராக் பரிக் லாங் டேர்ம் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ரூ.2,000, நிப்பான் ஸ்மால்கேப் ரூ.2,000, எஸ்.பி.ஐ மேக்னம் கில்ட் ரூ.2,000 (ஆரம்ப முதலீடு ரூ.5,000). இந்த முதலீடுகள் சராசரி வருமானம் 11% தரும்பட்சத்தில், 10 வருடங்களில் தற்போது உள்ள மதிப்பையும் சேர்த்து ரூ.53.76 லட்சம் பெற வாய்ப்புள்ளது.

கல்விச் செலவுக்கான பணவீக்கம் ஆண்டுக்கு 10% இருக்கும் எனில், உங்கள் மகனின் கல்விச் செலவு இன்னும் 10 ஆண்டுகளில் ரூ.25.93 லட்சமாகவும், மகளின் கல்விச் செலவு அடுத்த 14 ஆண்டுகளில் ரூ.37.97 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளது. உங்கள் மகளின் திருமணச் செலவு தற்போதைய மதிப்பில் ரூ.20 லட்சம் எனில், அடுத்த 20 ஆண்டுகளில் 6% பணவீக்க விகிதத்தில் ரூ.64.14 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. இவற்றுக்கான உங்கள் மாதச் சேமிப்பு கூடுதலாக முறையே 10 ஆண்டுகளுக்கு 16,000 ரூபாயும், 20 ஆண்டுகளுக்கு 7,500 ரூபாயும் இருக்க வேண்டும்.

இந்த முதலீடுகள்மூலம் கிடைக்கும் சராசரி வருமானம் 10% எனில், உங்கள் இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. உங்கள் ரிடையர்மென்ட்டுக்கு இன்னும் 21 ஆண்டுகள் இருக்கும் எனில், அப்போதைய மாத சராசரி செலவு தற்போதைய மதிப்பில் ரூ.20,000 என்ற ஊகத்தில், தேவையான தொகை ரூ.1.85 கோடி. இந்த இலக்கை அடைய மாத முதலீடு ரூ.19,000. இந்தத் தொகையை 21 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, அதற்கு சராசரி வருமானம் 11% கிடைக்கும்பட்சத்தில் தேவையான தொகையைப் பெற வாய்ப்புள்ளது.”

நான் தலா ரூ.1,000 வீதம் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்துவருகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் சேர்க்க விரும்புகிறேன். அதற்கேற்ற போர்ட் ஃபோலியோவை பரிந்துரை செய்தால் உதவியாக இருக்கும். என் முதலீடுகள்... யு.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், பி.என்.பி பரிபாஸ் லார்ஜ்கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா நிஃப்டி ஸ்மால்கேப் 250 இண்டெக்ஸ் ஃபண்ட்.

- பத்மநாபன், மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்காலத்துக்கு ரூ.1 கோடி இலக்கு..! - முதலீட்டு ஆலோசனை

“ரிஸ்க் பரவல் முறையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் முதலீட்டு போர்ட் ஃபோலியோவுக்கான பரிந்துரை: யு.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, கனரா ராபிகோ ஈக்விட்டி புளூசிப் ரூ.1,000, மிரே அஸெட் எமெர்ஜிக் புளூசிப் ரூ.1,000 (ஆரம்ப முதலீடு ரூ.5,000), நிப்பான் ஸ்மால்கேப் ரூ.1,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000. உங்கள் இலக்கான ரூ.50 லட்சத்தை அடுத்த 10 ஆண்டுகளில் அடைய மாத முதலீடு ரூ.23,000, சராசரி வருமானம் 11% இருக்கும் எனில், அதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் இலகுக்கான முதலீட்டை மேற்கண்ட விகிதாசாரத்தில் அமைத்துக்கொள்ளலாம்.”

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா?

finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.