தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

உங்கள் முதலீட்டுக் கலவையில் தங்கத்தின் பங்களிப்பு என்ன?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

நீண்ட காலத்தில் தங்கம் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 9% விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

பல ஆண்டுக் காலமாகத் தங்கத்தை ஆபரணமாகப் பார்த்தும் பயன்படுத்தியும் வந்தனர் நம் மக்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஒரு முதலீடாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

இப்போதெல்லாம், முதலீட்டாளர்கள் மூன்று முதன்மையான காரணங்களுக்காகத் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.முதலீட்டுக் கலவையின் (போர்ட் ஃபோலியோ) ரிஸ்க்கைக் குறைக்க பலவகைப்படுத்தல் (Diversification), பங்கு சார்ந்த முதலீடுகள் மற்றும் தங்கம் இடையேயான தலைகீழ் வருமானத் தொடர்பு (Inverse Return Correlation), பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவை அந்த மூன்று காரணங்கள் ஆகும்.

இன்றைய நவீன உலகில் உங்கள் மவுஸை க்ளிக் செய்வதன் மூலம் பல திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதாகி இருக்கிறது.

உங்கள் முதலீட்டுக் கலவையில்
தங்கத்தின் பங்களிப்பு என்ன?

தங்கம் கொடுத்த வருமானம்...

வரலாற்று ரீதியாகத் தங்கம் நீண்ட காலத்தில் பாசிட்டிவ் வருமானத்தை அளித்துள்ளது. குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை ஆண்டு முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்குப் பணவீக்க விகிதம் அளவுக்கு அல்லது அதை விடக் கொஞ்சம் அதிக வருமானம் தரும் ரிஸ்க் இல்லாத முதலீடாக விளங்குகிறது தங்கம்.

கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எப்படி ஏறி இறங்கி இருக் கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் (பார்க்க வரைபடம்).

நீண்ட காலத்தில் தங்கம் ஆண்டுக்கு சராசரி யாக சுமார் 9% விலை ஏற்றம் கண்டுள்ளது. அதே நேரத்தில் இது கடந்த 30 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் நெகட்டிவ் வருமானத்தைத் தந்திருக்கிறது. பொதுவாக, நீண்ட காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் தங்கம் 7% - 9% வருமானம் கொடுத்திருக்கிறது.

தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

ஒருவர் தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்களைப் பார்ப்போம்.

* கோவிட் 19 பரவல் போன்ற இக்கட்டான நிலை, நிதி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை போன்ற காலகட்டத்தில் பங்குச் சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்கள் வருமானம் கொடுக்காது. அந்தக் காலகட்டத்தில் தங்கம் ஒரு பாதுகாப்பு வலையாகச் செயல்படுகிறது. இந்தக் கால கட்டத்தில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்ததால், நம் தேவைக்கேற்ப விற்கலாம் அல்லது அடமானம் வைத்து அந்தப் பணத்தைப் பயன் படுத்தலாம்.

* தங்கத்தை விற்றுப் பணமாக்குவது மிக எளிது. பொதுவாக, வேறு எந்த நிதிச் சொத்துகளையும் பணமாக்க 2 அல்லது 3 நாள்கள் ஆகும். ஆனால், தங்கம் அப்படியல்ல. விற்ற உடனே பணம் கைக்கு வந்துவிடும்.

* நிறுவனப் பங்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகளைப்போல், தங்கத்தில் முதலீடு செய்ய சிறப்பு அறிவு, திறமை எதுவும் தேவையில்லை. பங்குகளில் முதலீடு செய்தால், அதன் விலையின் போக்கை எப்போதும் கண் காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தங்கத்தை இது மாதிரி கண்காணிக்கத் தேவை யில்லை.

* பங்குச் சந்தை சரியாகச் செயல்படாத காலகட்டத்தில் தங்கம் விலை ஏற்றம் காணும். அந்த வகையில், முதலீட்டுக் கலவையின் ரிஸ்க்கைக் குறைக்க முதலீட்டின் ஒரு பகுதி தங்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

* தங்கமானது நீண்ட காலத் தில் பணவீக்க விகிதத்தைவிட கூடுதலாக வருமானம் தருகிறது.

* இந்தியாவில் செல்வத்தின் அடையாளமாகவும் தங்கம் கருதப்படுகிறது. இந்தியர்கள் தங்க நகைகளை அணிகிறார்கள். பலரும் பிள்ளைகளுக்குத் திருமணத்தின்போது தங்க நகைகளைப் பரிசளிக்கிறார்கள்.

உங்கள் முதலீட்டுக் கலவையில்
தங்கத்தின் பங்களிப்பு என்ன?

செல்வம் சேர்ப்பதில்...

ஒருவர் செல்வம் குவிப்பதற் கான வழிகளைத் தேடினால், அதில் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு சிறிய அளவில் உதவி செய்வதாக இருக்கும். ஆனால், தங்கத்தை ஆபரணமாக வாங்கி, அதில் 100% முதலீடு செய்வதால் நம்மால் அதிக செல்வத்தைச் சேர்க்க முடியாது.

பெண்களோ, ஆண்களோ தங்கத்தை அணிந்து அழகு பார்க்க ஆபரண வடிவில் கொஞ்சம் தங்கத்தை வாங்கு வதில் தவறில்லை. ஆனால், முதலீட்டு நோக்கில் தங்கத்தை வாங்கினால் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி எல்லாம் சேர்ந்து சுமார் 12% - 15% இழப்பாகும்.

எனவே, தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்கும்போது டிஜிட்டல் வடிவில் வாங்குவது நல்லது. கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், தங்கப் பத்திரம் (கோல்டு பாண்ட்) ஆகிய வற்றில் முதலீடு செய்வதன்மூலம் கூடுதல் லாபம் ஈட்டமுடியும். இதில் கோல்டு பாண்டில் ஆண்டுக் குக் கூடுதலாக 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். தவிர, இந்த டிஜிட்டல் தங்கத்தில் தங்கத்தைப் பாதுகாக்கும் பிரச்னை இல்லை; திருட்டு பயமும் இல்லை.

முதலீட்டாளரின் தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்கு ஆகிய வற்றைப் பொறுத்து ஒருவர் தங்கத்தில் எவ்வளவு முதலீடுசெய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். பொதுவாக, ஒருவரது மொத்த முதலீட்டில் 5% - 10% அளவுக்கு டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து, போர்ட்ஃபோலி யோவின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம்!
கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்து. ஆனால், அது தொடர்ந்து உங்களுக்கு வருமானம் தந்து கொண்டிருக்காது. தங்கத்தின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்தே இதன் மூலமான வருமானம் இருக்கும்.

தங்கத்தின் விலை நீண்ட காலத்துக்கு ஏறவில்லை எனில், அதன் மூலம் எந்த லாபத்தையும் பெற முடியாது. அப்படிப்பட்ட காலமும் தங்கத்தில் இருந்திருக்கிறது. 2013, 2014 மற்றும் 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் தங்கம் தொடர்ந்து நெகட்டிவ் வருமானம் தந்திருக்கிறது. எனவே, ஒருவர் அவரின் மொத்த முதலீட்டில், அவரின் வயதுக்கேற்ப அஸெட் அலொகேஷன்படி முதலீடு செய்ய வேண்டும்.

உதாரணமாக, ஒருவரின் வயது 40 எனில், அவர் (100-40) 60% தொகையை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்) முதலீடு செய்ய வேண்டும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது, குறைந்த பட்சம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால், சில நிறுவனப் பங்குகள் சரியாகச் செயல்படவில்லை என்றாலும் மற்றவை நன்றாகச் செயல்பட்டு அதிக வருமானத்தைக் கொடுக்கும்.

மீதமுள்ள தொகையில் 30 சதவிகிதத்தை ஃபிக்ஸட் இன்கம் என்கிற ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மீதம் இருக்கும் 10 சதவிகிதத்தை தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அண்மைக் காலத்தில் வெள்ளி இ.டி.எஃப்-களும் நல்ல வருமானம் தரத் தொடங்கியிருக்கின்றன.

இப்படி ஒருவரின் முதலீட்டுக் கலவை இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 10% - 12% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.