சமீப காலமாக ஒவ்வொரு மாதத்திலும் தங்கம் விலை புதுப்புது உச்சங்களைத் தொட்டுக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.5,676-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.45,408-க்கும் விற்பனை ஆனது. மேலும் வெள்ளி ரூ.81.80-க்கு விற்பனை ஆனது.

தமிழ்ப் புத்தாண்டான நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,720-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760-க்கும் விற்பனை ஆனது. நேற்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.83.00 ஆக இருந்தது.
இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.81.50 ஆக விற்பனை ஆகி வருகிறது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை, உக்ரைன் - ரஷ்யா போர் ஆகிய காரணங்களால் தொடர்ந்து தங்கம் விலை உயர்கிறது. தங்கம் விலை இந்த ஆண்டு ரூ.62,000-த்தை தொடலாம் என்று கூறப்படுகிறது.