Published:Updated:

தங்கம் விலை விரைவில் ரூ.42,000-த்தை தொட்டுவிடும்! - தங்கவிலை நிலவரம்!

தங்கம் விலை விரைவில் 42,000 ரூபாயா?

ஒரு கிராம் தங்கத்தின் விலை விரைவில் ரூ.6,000-த்தை எட்டிவிடும் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தங்க நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் என்றதும் தற்போது நகைகள் ஞாபகத்துக்கு வருவதைவிட, அதன் விலைதான் கண்முன் வந்து மக்களின் பயத்தைக் கிளப்பிவிடுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

தங்கம்!
தங்கம்!
EquityPandit

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,097-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.40,760-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.5,115-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.40,920-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினத்தைவிட, தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.20-ம், ஒரு பவுனுக்கு ரூ.160-மாக உயர்ந்திருந்தது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி 50 காசுகளாக உயர்ந்து ரூ.74.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500-ஆக உயர்ந்து ரூ.74,500-க்கும் விற்பனை ஆனது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை விரைவில் ரூ.6000-த்தை எட்டிவிடும்!
ஒரு கிராம் தங்கத்தின் விலை விரைவில் ரூ.6000-த்தை எட்டிவிடும்!

தங்கத்தின் விலை இப்படி எறிக்கொண்டே இருந்தால், விரைவில் ரூ.42,000-த்தை எட்டிவிடும். ஒரு கிராம் தங்கத்தின் விலை விரைவில் ரூ.6,000-த்தை எட்டிவிடும் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை குறைவதற்க்கு வாய்ப்புகள் இல்லை என்று தங்க நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களே, 2023-ம் ஆண்டு தங்கத்தின் விலை கூடுமா, குறையுமா - உங்கள் கருத்து என்ன?