இந்த தங்க ஆபரணமும் அதன் செழிப்பான பாரம்பரியம் மாறாத வடிவமைப்பும் காண்போரை பண்டைய வரலாற்றின் பாதைக்கே அழைத்துச் செல்கிறது. மேலும் எந்த கோணத்திலும் பண்டைய பாரம்பரியங்களையும், அதன் கம்பீரத்தையும் இழக்காமல், GRTன் புதிய வகை நகையான 'பிரிஹா (BRIHA)' வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்கிறது.
தென்னிந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்ட் GRT ஜூவல்லர்ஸ், இந்தியாவின் மிக சக்திவாய்ந்த சாம்ராஜ்யங்களில் ஒன்றான சோழர்களின் காலத்தை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தங்கத்தால் மீண்டும் உருவாக்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, 60 ஆண்டுகளை கடந்து இந்தியாவின் மிகச்சிறந்த நகை குழுமங்களில் தனி அந்தஸ்தை பெற்ற பிறகும் கூட, நம்பிக்கை மற்றும் கைவினை கலையை மையப்படுத்தி, ஒரு பேரரசை உருவாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை GRT நிச்சயமாக அறிந்திருக்கிறது.

இந்தத் தங்க நகைகளின் ஒவ்வொரு நுண்ணிய வேலைப்பாடுகளும், 1000 ஆண்டுகளுக்கும் மேலான சோழர்காலத்து கட்டிடக்கலை மற்றும் அவர்களின் பாரம்பரியத்தால் கவரப்பட்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரகதீஸ்வரர் கோவிலிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த நுண்ணிய வடிவமைப்புக்களை நீங்கள் உற்று நோக்கும் போது, சோழப் பேரரசின் காலத்திற்க்கே பயணிப்பதை போலவும், நீங்கள் உண்மையிலேயே அத்தகைய சிற்பங்களை தொடுவது போலவும், கண்கவரும் வண்ணமாக உணரமுடியும் மற்றும் இதன் தனித்தன்மை உங்களை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும். 'இந்த நகைகள் மிக அபார திறமை கொண்ட கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
இதன் அறிமுக விழாவில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் பேசிய போது, "ஜிஆர்டி எப்போதும் நம் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், அவற்றை நவீன காலத்திற்க்கேற்ப மறுவடிவமைக்கவும் கடும் முயற்சி செய்கிறது. இதற்கான ஒரு உண்மையான எடுத்துக்காட்டாக திகழ்வது தான் எங்களின் இந்த "பிரிஹாட் கலெக்சன்கள். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதை கொண்டு சேர்ப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது
மேலும் இதை பற்றி, ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் திரு.ஆ.ராதாகிருஷ்ணன் கூறியது, "ஒவ்வொரு பேரரசும் அசைக்க முடியாத மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதில் சோழ சாம்ராஜ்யம் தனக்கென ஒரு முத்திரைப்பதித்துள்ளது. அவர்கள் காலங்களையும், மரபுகளையும் 'பிரிஹா கலெக்சன்' மூலம் மறு வடிவம் படைத்துள்ளோம். இந்த மதிப்பு மிக்க சாம்ராஜ்யத்தின் அழியாப் புகழை போற்றும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளரின் சிறந்த தருணங்களை, மேலும் மறக்க முடியாததாக மாற்றும் வகையில் பிரிஹா கலெக்சன் அமைக்கப்பட்டுள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.