Published:Updated:

கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு மத்திய அரசின் புதிய வசதி!

கைவினைப் பொருள்கள்
News
கைவினைப் பொருள்கள்

கைவினைக் கலைஞர்கள் தங்களின் பெச்சான் (pehchan) கார்டு எண் உதவியுடன் இணையதளத்தில் உள்நுழைந்து, அதைத் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் உள்நாட்டு சந்தைப்படுத்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்கலாம்.

Published:Updated:

கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு மத்திய அரசின் புதிய வசதி!

கைவினைக் கலைஞர்கள் தங்களின் பெச்சான் (pehchan) கார்டு எண் உதவியுடன் இணையதளத்தில் உள்நுழைந்து, அதைத் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் உள்நாட்டு சந்தைப்படுத்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்கலாம்.

கைவினைப் பொருள்கள்
News
கைவினைப் பொருள்கள்

கைவினைப் பொருள்கள் செய்பவர்கள் தங்களின் தயாரிப்புகளைச் சந்தைப் படுத்துவதற்கான புதிய வசதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுமார் 200-க்கும் மேலான உள்நாட்டு சந்தைப்படுத்துதல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Representational Image
Representational Image

இந்தச் சந்தைப்படுத்துதல் நிகழ்வுகளில் பங்கேற்று தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக இதுவரை பேப்பர் வடிவிலான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் யாருடைய நேரடி குறுக்கீடுகளும் இல்லாமல் விண்ணப்பிப்பது முதல் தேர்வு செய்வது வரையிலான நடைமுறைகள் முழுவதையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, சந்தைப்படுத்துதல் நிகழ்வுகளில் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்து பொருள்களை விற்பனை செய்ய இனி (http://indian.handicrafts.gov.in) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நடைமுறையின் மூலம் கைவினைக் கலைஞர்கள் எளிதாகவும் விரைவாகவும் விண்ணப்பித்து தங்களுக்கான விற்பனை வாய்ப்பைப் பெற முடியும். மேலும் அனைவருக்கும் சமமான, நியாயமான மற்றும் வெளிப்படையான விற்பனை வாய்ப்பும் இதன்மூலம் சாத்தியமாகும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இணையதளம்
இணையதளம்

கைவினைக் கலைஞர்கள் தங்களின் பெச்சான் (pehchan) கார்டு எண் உதவியுடன் இணையதளத்தில் உள்நுழைந்து, அதைத் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் உள்நாட்டு சந்தைப்படுத்துதல் நிகழ்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்கலாம்.