
பென்ஷன்
மத்திய அரசுப் பணியில் வேலை பார்த்தவர்கள் திடீரென டிஸ்மிஸ் ஆகியிருந்தால், அவர்களுக்கு பென்ஷன் கிடைப்பது தொடர் பான கேள்வி ஒன்றைப் பலரும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கான பதிலைப் பார்ப்போம்.

குறைந்தபட்ச பணிக்காலம்...
பணிக்காலம் மற்றும் கடைசி சம்பளம் ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பென்ஷன் கணக்கிடப்படுவதால், வயது அதிகரித்த நிலையில் மத்திய அரசுப் பணியில் சேருபவர் குறைவான பென்ஷன் பெறுகிறார் என்ற குறைபாட்டை நீக்கத்தான், கடைசி சம்பளத்தின் அடிப்படையில் மட்டுமே பென்ஷன் கணக்கிடும் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தது.
இந்தப் புதிய விதியின் பலனாகப் பணிக் காலம் எதுவாக இருப்பினும், ஓய்வு பெற்றவரின் கடைசிச் சம்பளத்தில் 50% தொகை பென்ஷ னாகப் பெற வழி ஏற்பட்டுவிட்டது.
ஆனால், குறைந்தபட்சம் 10 வருடங்களாவது பணிபுரிந்தவருக்கே பென்ஷன் என்ற விதியில் மாற்றம் இல்லை. அதாவது, ஓர் ஊழியர் பத்து ஆண்டுக்குக் குறைவாக மட்டுமே பணிபுரிந்த நிலையில் ஓய்வுபெறும் வயது வந்துவிட்டால் அவருக்கு ‘பென்ஷன்’ கிடைக்காது. ஆனால், இரு வகையான பணிக்கொடை கிடைக்கும்.

இரண்டு வகை பணிக்கொடை...
ஓய்வுபெறும் அனைவருக்கும் ஓய்வுக்கால பணிக்கொடை (Retirement Gratuity) பொது வானது. இது நிறைவு செய்த ஒவ்வோர் ஆறு மாத பணிக்கும் கால் (1/4) மாத சம்பளமாக இருக்கும். சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்து கணக்கிடப்படும். அதிகபட்ச ஓய்வுக் கால பணிக்கொடை 16.5 மாத சம்பளமாக இருக்கும்.
10 வருடத்துக்கும் குறைவான பணிக் காலத் துடன் ஓய்வு பெற உள்ளவருக்கு மேற்கண்ட ஓய்வுக்கால பணிக்கொடையுடன், பணிக்கான பணிக்கொடை (Service Gratuity) யும் கிடைக்கும். பணிக்கால பணிக்கொடை என்பது ஓய்வுக் கால பணிக்கொடையைப்போல் இரு மடங்கு. அதாவது, நிறைவு செய்த ஒவ்வோர் ஆறுமாதப் பணிக்கும் அரைமாதச் சம்பளமாகக் கணக்கிடப் பட்டு வழங்கப்படும்.
இயலாமை பென்ஷன்...
குறைந்தபட்சம் 10 ஆண்டு பணிக்குத்தான் பென்ஷன் கிடைக்கும். இந்த விதிக்கு ‘இயலாமை பென்ஷன்’ (Invalid Pension) விதிவிலக்கு பெற்றது. அதாவது, பணியில் இருந்துவரும் ஊழியர் எவரும், தொடர்ந்து பணியைச் செய்ய முடியாதபடி உடல் செயல்பாடு குறைந்துவிட் டாலோ, மூளை செயல்பாடு குன்றிவிட்டலோ, அத்தகைய ஊழியர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு அனுப்பப்படுவார்.
இந்த ஊழியரால் இனி பணியைத் தொடர முடியாது என்று மருத்துவக் குழு சான்று அளித்தால், அந்த ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார். இதைத்தான் இயலாமை ஓய்வு என்கிறார்கள்.
இவ்வாறு இயலாமைக்கு உள்ளானவரின் பணிக்காலம் 10 ஆண்டுகளுக்குக் குறைவு என்றாலும் அவருக்கும் பென்ஷன் உண்டு. அத்தகைய பென்ஷன் என்பது அவர் பெற்றிருந்த கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதமாக இருக்கும்.
‘இயலாமை ஓய்வு’ பெற உள்ள ஒருவரது உடல் திறன் இலகுவான பணிகளைச் செய்யத் தகுதி யானது என மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தால், ‘தற்போதைய பணியைவிடக் குறைவான பளு உள்ள பணியைச் செய்ய விருப்பமா’ என்கிற இசைவு (Option) ஊழியரிடம் கேட்கப்படும்.
இதற்கு அந்த ஊழியர் ஒப்புதல் தெரிவித்தால், அந்தப் பணியை அந்த ஊழியர் தொடர்ந்து செய்யலாம். அந்த ஊழியர் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள இயலாத பட்சத் தில், அவருக்கு இயலாமை ஓய்வு தரப்படும். அதன்பின் அவர் பென்ஷன், பணிக்கொடை பெறலாம்.
கட்டாய ஓய்வு...
10 ஆண்டுகளுக்குக் குறைவு இல்லாமல் பணிக்காலத்தை நிறைவு செய்த ஒருவர், கட்டாய ஓய்வு பெறும் நிலைக்கு உள்ளாகலாம். அதாவது, இவரைப் பொறுத்தவரை இந்தக் கட்டாய ஓய்வு என்பது தண்டனை ஆகும்.
எனவே, இப்படி ஓய்வு பெறுபவர்களுக்கும் அவர்களது கடைசிச் சம்பளத்தில் 50% என்றே பென்ஷன் கணக்கிடப் படும். ஆனால், 50% கடைசிச் சம்பளம் எவ்வளவோ அதில் 3-ல் இரண்டு பங்கு (2/3) தொகையே பென்ஷனாக இருக்கும்.
அதே சமயம், கட்டாய ஓய்வு பெறுபவரின் பணிக்காலம் 10 ஆண்டுக்கும் குறைவு எனில், பென்ஷன் கிடைக்காது. பணிக் கொடை மற்றும் ஓய்வுக்கால பணிக்கொடை மட்டுமே கிடைக்கும்.
30 வருட பணி நிறைவு செய்தவர்...
30 வருட காலம் பணி நிறைவு செய்த ஊழியர் ஒருவரைப் பொது நன்மை கருதி ஓய்வுபெற அரசு நோட்டீஸ் அனுப்பக்கூடும். அதாவது, 30 வருட பணிக்கலாம் முடிவுற்ற பிறகு, எந்த ஒரு தேதி யிலும், அந்த ஊழியரை ஓய்வு பெற அறிவுறுத்தி, மூன்று மாதத்துக்கு முன்பே அரசு நோட்டீஸ் அனுப் பலாம். அல்லது மூன்று மாத சம்பளத்தைக் கொடுத்து ஓய்வு தரலாம். இவர்களுக்கும் 50% கடைசிச் சம்பளம் பென்ஷனாக இருக்கும். இது கட்டாய ஓய்வு அல்ல.

டிஸ்மிஸ் ஆனவருக்கு கருணைத் தொகை...
சில ஊழியர்கள் பணியிலிருந்து டிஸ்மிஸ் (Dismiss) செய்யப்படலாம். அல்லது பணி விலக்கல் (Removed from Service) செய்யப்படலாம். இவர்கள் பென்ஷன் பெறத் தகுதி யானவர்கள் அல்ல. என்றாலும், இவர்களைப் பணி விலக்கல் செய்ய அல்லது பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய அதிகாரம் பெற்ற அதிகாரி, சில தகுதியான நேர்வுகளில், மாதாந்தர தொகை வழங்கலாம். இந்த மாதாந்தர தொகை ‘பென்ஷன்’ அல்ல. ‘கருணைத் தொகை’ எனப்படும்.
இந்தக் கருணைத்தொகை என்பது டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர் வயது முதிர்வில் முறை யாக ஓய்வு பெற்றிருந்தால், எத்தனை ரூபாயை பென்ஷனாகப் பெறுவாரோ, அந்தத் தொகையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். கருணைத் தொகையுடன் பணிக் கொடையும் தரப்படலாம்.
டிஸ்மிஸ் செய்யப்பட ஊழியரும் கருணைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஊழியரின் விண்ணப்பமும் பரிசீலிக்கப்படலாம். இதன் அடிப்படையில் கருணைத் தொகை மற்றும் பணிக்கொடையானது அவருக்கு வழங்கப்படக்கூடும். இதற்கான முடிவு, டிஸ்மிஸ் அல்லது பணி விலக்கல் செய்யப்பட்டு மூன்று மாத காலத்துக்குள் எடுக்கப்பட்டுவிடும்.
பரிசீலனை...
மேற்கண்ட கருணைத்தொகை வழங்க,
பரிசீலனைக்கான ஊழியரின் தகுதி.
பணி விலக்கல் அல்லது டிஸ்மிஸ் செய்யப்பட காரணமாக இருந்த ஊழியரின் தவறு (Miscondact).
ஊழியரைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் ஆகிய அம்சங்கள் பரிசீலிக்கப்படும்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் குறைந்தபட்ச பென்ஷன் அல்லது கருணைத் தொகை 9,000 ரூபாயை விடக் குறைவாக இருக்காது. அதிகபட்ச பென்ஷன் 1,25,000 ரூபாய்க்கு மேற்படாது.
மத்திய அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் ஆனால், பென்ஷன் கிடைக்குமா என்கிற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும்.
ஏதோ ஒரு காரணத்துக்காக டிஸ்மிஸ் ஆவதைவிட, தொடர்ந்து பணியில் இருக்கிற ஒழுங்குடன் வேலை செய்வதே சிறந்தது. இந்த உண்மை மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தனியார் நிறுவன ஊழியர் களுக்கும் இது நிச்சயம் பொருந்தும்!
என்.பி.எஸ் ஊழியருக்கும் எல்லாம் உண்டு!
என்.பி.எஸ் ஊழியர் பணியில் உள்ளபோது இறந்துவிடும் நேர்வில் பழைய பென்ஷன் சார்ந்த ஊழியருக்கு உள்ளது போலவே, குடும்ப பென்ஷன் கிடைக்கும். இறப்பு பணிக்கொடையும் (Death Gratuity) கிடைக்கும். பணியிலிருந்து ஓய்வு பெறும் என்.பி.எஸ் ஊழியருக்கு பணிக்கொடை உண்டு. இதுவும் பழைய பென்ஷன் சார்ந்த ஊழியருக்கு இணையானதாகவே இருக்கும்.