பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உங்களை விரைவாக பணக்காரர் ஆக்கும் நிதி விகிதங்கள்..!

நிதித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதித் திட்டம்

நிதித் திட்டம்

ஏ.ஜி.வி ஶ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/

ஒருவர் நிதித் திட்ட மிடல் மேற்கொள்ளும் போது சில முக்கியமான நிதி விகிதங்களைப் (Financial Ratios) பின்பற்றுவது மூலம் நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றுவதுடன் விரை வாக செல்வமும் சேர்க்க முடியும்.

ஏ.ஜி.வி ஶ்ரீநாத் விஜய் 
இணை நிறுவனர், 
https://gbvmfservices.in/
ஏ.ஜி.வி ஶ்ரீநாத் விஜய் இணை நிறுவனர், https://gbvmfservices.in/

1. சேமிப்பு விகிதம்

ஒருவர் தனது சம்பாத் தியத்தில் மாதம் எவ்வளவு சதவிகிதம் சேமிக்கிறார் என்பதை இந்த விகிதம் (Savings Ratio) குறிக்கிறது. இதற்கான எளிய பார்முலா: சேமிப்பு விகிதம் = (மாத சேமிப்பு / மாதச் சம்பளம்) X 100. உதாரணம், சேமிப்பு = (8,000/40,000) X 100 = 20%.

பொதுவாக, இந்த விகிதம் 15 சதவிகிதத்துக்கு மேல் இருப்பது நல்லது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க இந்த விகிதம் அதிகமாக இருந்தால், விரைவாக நிதி இலக்குகள் நிறைவேறுவதுடன் செல்வ மும் சேரும்.

2. அடிப்படை பணப்புழக்க விகிதம்

ஒருவர் அனைத்து வருமான ஆதாரங்களையும் இழக்கும் சூழ்நிலையில், குடும்பத்தின் அனைத்து செலவுகளையும் சமாளிக்கக் கூடிய மாதங்களின் எண்ணிக் கையை அடிப்படை பணப் புழக்க விகிதம் (Basic Liquidity Ratio) குறிக்கிறது.

அடிப்படை பணப்புழக்க விகிதம் = எளிதில் பணமாக்கக் கூடிய சொத்துகள் / மாதச் செலவு. ஒருவர் வங்கிச் சேமிப்புக் கணக்கு, குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஷார்ட் டேர்ம் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.3 லட்சம் போட்டு வைத்திருக்கிறார். அவரின் குடும்ப மாதச் செலவு ரூ.50,000 என வைத்துக்கொள்வோம்.

இந்த நிலையில், அடிப் படைப் பணப்புழக்க விகிதம்= 3,00,000/50,000 = 6 மடங்கு ஆகும். இவர், ஆறு மாதக் குடும்பச் செலவுத் தொகையை இப்படி எளிதில் பணமாக்கக் கூடியதாகப் போட்டு வைத் திருக்க வேண்டும். குடும்பத் தில் சிறுபிள்ளைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் பட்சத்தில் இந்த விகிதத்தை 8 அல்லது 10 ஆக அதிகரித்துக் கொள்வது நல்லது. காரணம், இது போன்ற குடும்பங்களில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக் கிறது.

இப்படி எளிதில் பண மாக்கக்கூடிய சொத்துகளை மாதச் செலவுகளைப்போல் சுமார் 10 மடங்கு, வைத்திருந்தவர்கள் கொரோனா 19 பாதிப்பின்போது நிலை மையை சுலபமாகச் சமாளித் தார்கள். ஒருவர் அனைத்து வருமான ஆதாரங்களையும் இழக்கும்போது இந்த அடிப்படை பணப்புழக்க விகிதம் அதிகமாக இருந்தால், நிலையை சிக்கல் இல்லாமல் சுலபமாக சமாளிக்க முடியும்.

வருமான இழப்பு என்பது வேலை இழப்பு அல்லது பொது தொழில்முடக்கம் போன்றவற்றால் வருமானம் தடைப்படலாம். இந்த விகிதம் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு குடும்பத்தில் பணச் சிக்கல் மற்றும் பணப்பற்றாக்குறை வராது.

உங்களை விரைவாக பணக்காரர் ஆக்கும் நிதி விகிதங்கள்..!

3. வருமானத்துக்கும் கடன் தவணைக்குமான விகிதம்

வருமானம், சம்பாத்தியத்தில் கடன் தவணைக்கு (EMI) எவ்வளவு தொகையை செலவு செய்கிறோம் என்கிற விகிதம், வருமானத்துக்கும் கடன் தவணைக்கு மான விகிதம் (EMI to Income Ratio) எனப்படும்.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் எனவும் அவரின் வீட்டுக் கடன் தவணை ரூ.30,000, கார் கடன் தவணை ரூ.8,000 என வைத்துக்கொள்வோம். இவருக்கு மாத மொத்தக் கடன் தவணை ரூ.38,000 ஆகும். வருமானத்துக்கும் கடன் தவணைக்குமான விகிதம் = (மாத கடன் தவணைகள் / மாத வருமானம்) X 100 = (38,000 / 1,00,000) X 100 = 38%.

பொதுவாக, இது 35 - 40 சதவிகிதத்துக்குள் இருப்பது நல்லது. அதைத் தாண்டி 50%, 60% எனப் போகும்போது குடும்பச் செலவுகளைச் செய்வதில் சிக்கல் ஏற்படும். மேலும், கடன் வாங்க வேண்டிவரும். இப்படி மேலும் மேலும் அதிக வட்டியில் (கிரெடிட் கார்டு, தனிநபர் கடன்) கடன்கள் வாங்கும்போது கடன் வலையில் மாட்டக்கூடும்.

எனவே, ஏதாவது புதிய பெரிய கடன் வாங்கப் போகிறீர்கள் எனில், வேறு ஏதாவது குறுகிய கால கடன் இருந்தால், அதை அடைத்துவிட்டு புதிய கடன் வாங்கவும். தேவைப்பட்டால் புதிய கடன் வாங்குவதைத் தள்ளிக்கூட போடலாம். இந்த விகிதம், எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அந்தளவுக்கு நல்லது.

உங்களை விரைவாக பணக்காரர் ஆக்கும் நிதி விகிதங்கள்..!

4. முதலீட்டுக்கும் கடனுக்குமான விகிதம்...

ஒருவரின் மொத்தக் கடனுக்கும் அவரின் மொத்த முதலீட்டு மதிப்புக்கும் இடையிலான விகிதம், முதலீட்டுக்கும் கடனுக்குமான விகிதம் (Liability to Investment Ratio) எனப்படும். ஒருவருக்கு ரூ.15 லட்சம் வீட்டுக் கடன், ரூ.5 லட்சம் கார் கடன் என மொத்தம் ரூ.20 லட்சம் கடன் இருக்கிறது.

அவருக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.5 லட்சம், ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.10 லட்சம், மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்டுகளில் ரூ.20 லட்சம், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் ரூ.50 லட்சம் என மொத்தம் முதலீட்டின் மதிப்பு ரூ.85 லட்சம் இருக்கிறது.

இவர் வசிப்பது சொந்த வீடு, அதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்றாலும், அதை அவரின் முதலீட்டு மதிப்பில் சேர்க்கவில்லை. காரணம், ஒருவருக்கு குடியிருக்க ஒரு வீடு என்பது மிகவும் அத்தியாவசிய மாகும். எனவே, அதை முதலீட்டில் சேர்க்கக் கூடாது.

இதற்கான பார்முலா: முதலீட்டுக்கும் கடனுக்கு மான விகிதம் = (மொத்தக் கடன்/ மொத்த முதலீடுகள்) X 100 = (20,00,000/85,00,000) X 100 = 23.53%. பொதுவாக, இந்த முதலீட்டுக்கும் கடனுக்குமான விகிதம் 35% - 40% என்கிற அளவில் இருப்பது நல்லது. எந்தளவுக்கு இந்த விகிதம் குறைவாக இருக்கிறதோ, அந்தளவுக்கு நிதிச் சிக்கல் குடும்பத்தில் இருக்காது.

5. ஆயுள் காப்பீடு கவரேஜ் விகிதம்

ஒருவரின் தற்போதைய சம்பளம், சம்பாத்தியத்தை போல் சுமார் 100 மடங்கு அளவுக்கு அவருக்கு ஆயுள் காப்பீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விகிதம், ஆயுள் காப்பீடு கவரேஜ் விகிதம் (Life insurance coverage ratio) எனப்படுகிறது.

ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.50,000 ஆகும். அவர் ரூ.50 லட்சத்துக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம்.இதற்கான பார்முலா: ஆயுள் காப்பீடு கவரேஜ் விகிதம் = 100 X மாதச் சம்பளம் = 100 X 50,000 = 50,00,000. இந்த உதாரணத்தில், ஆயுள் காப்பீடு பாலிசி கவரேஜ் சரியான அளவுக்கு எடுக்கப் பட்டிருக்கிறது எனலாம். மாதச் சம்பளத்தைப் போல் எந்த அளவுக்கு அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்கப்பட்டிருக் கிறதோ, அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களின் நிதி ரீதியான எதிர்காலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

இன்றைய நிச்சயமற்ற நிலை யில் தனிநபரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான முதலீடாக ஆயுள் காப்பீடு இருக்கிறது. எனவே, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள் அனைவரும் அவர்களின் பெயரில் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது அவசியமாகும்.

இந்த ஐந்து விகிதங்களில் நீங்கள் எப்படி என்பதை கணக்கு போட்டுப் பார்க்கிறீர்களா?