லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

முதல் சம்பளம் வாங்கப் போறீங்களா..? - முதல்ல இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!

முதல் சம்பளம் வாங்கப் போறீங்களா..?
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் சம்பளம் வாங்கப் போறீங்களா..?

வங்கிக் கணக்கு ஆரம்பிக்க, ஃபிக்ஸட் டெபாசிட் போட, டீமேட் கணக்கு ஆரம்பிக்க, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆகியவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகும்.

பிரபா நேற்று வரை கல்லூரி மாணவி. இன்று ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பணியாளர். தனது முதல் சம்பள காசோலையைப் பெற்றபோது, அவரின் தந்தை அவரை சேமிக்க அறிவுறுத்தினார்; தங்கை தன்னை ஷாப்பிங் அழைத்துச் செல்லும்படி கேட்டார்; தோழிகள் நட்சத்திர ஹோட்டலில் விருந்து கேட்டனர்.

முதல் சம்பளத்தை என்ன செய்வது என்று பிரபா குழம்பிப் போனார். தன்னுடைய முன்னுரிமைகள் என்ன... தனக்கான முதல் நிதித் திட்டம் (Financial Plan) எப்படி இருக்க வேண்டும்... அதைச் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என பிரபாவுக்கு பல கேள்விகள்... பதில் காண்போமா?

முதல் சம்பளம் வாங்கப் போறீங்களா..? - முதல்ல இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!

பான் கார்டு!

வங்கிக் கணக்கு ஆரம்பிக்க, ஃபிக்ஸட் டெபாசிட் போட, டீமேட் கணக்கு ஆரம் பிக்க, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆகியவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகும். எனவே, இதுவரை பிரபாவுக்கு பான் கார்டு (PAN Card) இல்லை என்றால் அதனை உடனடி யாக விண்ணப்பித்துப் பெற வேண்டும். பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் ஓர் அடையாள அட்டை. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய இந்த அட்டை அவசியம்.

பான் கார்டு பெறுவதற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. பான் கார்டு வழங்குவதற்கு வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஏஜென்சிகளான யூ.டி.ஐ டெக்னாலஜீஸ் சர்வீசஸ், என்.எஸ்.டி.எல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட விபத்து மற்றும் ஊன பாதிப்பு காப்பீடு!

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சாலை விபத்து பற்றிய செய்தியை ஊடகங்களில் பார்க்கிறோம். அதில் சிக்கியவர்கள் நமக்குத் தெரிந்தவர்களாகக்கூட இருக்கலாம். விபத்துகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இந்த விபத்து ஏற்படுத்தும் பாதிப்பு குடும்பங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில விபத்துகள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஒருவரின் வேலையைப் பறிக்கக் கூடும். எனவே, நிதித் திட்டத்தின் முதல் படியாக, விபத்து மற்றும் அதன் விளைவான உறுப்பு இழப்பு, சேதம் போன்றவை ஏற்படுத்தும் நிதி இழப்புகளை ஈடு செய்யும் தனிநபர் விபத்து மற்றும் ஊன பாதிப்பு காப்பீட்டு பாலிசியை (Personal Accident and Disability insurance policy) எடுக்க வேண்டும். விபத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பின் அடிப்படையில் இந்த பாலிசியின் கவரேஜ் தொகையை பிரபா தீர்மானிக்க வேண்டும்.

விபத்து காரணமாக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அவர் வேலையை இழந்தால் எவ்வளவு நஷ்டம் அடைவார் என்பதைப் பொறுத்து கவரேஜ் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தேவைப்படும்பட்சத்தில் நிதி ஆலோசகரின் உதவியை நாடுவது நல்லது. இந்த பாலிசிகளில் ரூ.10 லட்சம் கவரேஜுக்கு ஆண்டு பிரீமியம் தோராயமாக ரூ.1,500 இருக்கும்.

முதல் சம்பளம் வாங்கப் போறீங்களா..? - முதல்ல இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!

மருத்துவக் காப்பீடு!

பெரும்பாலானவர்கள் மருத்துவக் காப்பீடு (Health Insurance) பற்றி யோசிப்பதில்லை. ஆனால், தனக்கோ, தன் குடும்ப உறுப் பினருக்கோ நோய் பாதித்தால் மருத்துவக் காப்பீடு கைகொடுக்கும். காப்பீடு செய்யப் பட்டவர் நோய்வாய்ப்பட்டு அல்லது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனம், மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துகிறது. மருத்துவக் காப்பீடு, விபத்து பாதிப்பு மற்றும் கடுமையான நோய்களின் பாதிப்பின்போது குடும்பம் சந்திக்கும் நிதிச் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. எனவே, நிதித் திட்டமிடலின் ஒரு பகுதியாக இருக்கும் மருத்துவக் காப்பீட்டை பிரபா கட்டாயம் எடுக்க வேண்டும். பெற்றோர் அவர்களின் பாலிசியில் சேர்த் திருந்தால், கவரேஜ் எவ்வளவு இருக்கிறது என்பதை கவனித்து தேவைப்பட்டால் குறை வான கவரேஜுக்கு தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.

அலுவலகத்தில் இலவசமாக அல்லது குறைவான செலவில் மருத்துவக் காப்பீடு வழங்குகிறார்கள் என் றால் ஏற்கெனவே பெற் றோரின் பாலிசியில் ஒருவர் இடம் பெற் றிருந்தாலும் தன் அலுவலக பாலிசியில் சேர்ந்து கொள்ளலாம். அதிக மருத்துவச் செலவு ஏற்பட்டால் இரு பாலிசிகளிலும் பிரித்து க்ளெய்ம் செய்ய வசதி இருக்கிறது.

வங்கிக் கணக்கு மூலமான மருத்துவக் காப்பீட்டில் கவரேஜ் ரூ.2 லட்சம் ஆகும். எனவே, சுமார் ரூ.3 லட்சத்துக்கு தனியே பாலிசி எடுத்துகொள்வது நல்லது. அரசு இலவச காப்பீட்டுக்கு ஆண்டு சம்பள வரம்பு ரூ.75,000 என்பதாக இருப்பதால், இதில் பலருக்கும் பலன் கிடைக்காது. எனவே, தனி பாலிசி எடுப்பது நல்லது. வேலை பார்க்கும் நிறுவனம், மருத்துவக் காப்பீட்டை வழங்கி னால், அது பெரும்பாலும் அதிக கவரேஜ் உடன் இருக்காது. மேலும், அதில் குடும்ப உறுப்பினர்களுக்கு கவரேஜ் இல்லாமல் இருக்கலாம். ஒருவர் வேலையில் இல்லை என்றால் அதனை பயன்படுத்த முடியாது. பணி ஓய்வு பெற்றவுடன் நிறுவனத்தின் பாலிசி மூலம் கவரேஜ் கிடைக்காது.

நிறுவனம் வழங்கிய பாலிசியை பணி ஓய்வுக்கு முன்பே தனிப்பட்ட பாலிசியாக மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. அப்படி செய்யும போது பணி ஓய்வுக் காலத்திலும் தொடர்ந்து மருத்துவக் காப்பீடு இருக்கும். மேலும், புதிதாக காத்திருப்பு காலம் வராது என்பதால் இப்படி மாற்றிக் கொள்வது லாபகரமாக இருக்கும். அலுவலக பாலிசியில் யாருக்கு எல்லாம் கவரேஜ் இருந்ததோ, அவர்களுக்கு எல்லாம் தனிப்பட்ட பாலிசி யிலும் கவரேஜ் தொடரும். அலுவலக காப்பீடு, குழு காப்பீடு என்பதால் பிரீமியம் குறைவாக இருக்கும். தனிப்பட்ட பாலிசியில் பிரீமியம் அதிகமாக இருக்கும்.

ஓய்வுக்குப் பிறகு வய தான காலத்தில்தான் ஒருவருக்கு அவசியம் மருத்துவக் காப்பீடு தேவைப்படும். எனவே, தனியே ஒரு மருத்துவக் காப்பீட்டை எப்போதும் வைத்திருப்பது நல்லது. பணி ஓய்வுக்குப் பிறகு ஒருவர் புதிய பாலிசி எடுக்கத் திட்டமிட்டால், அந்த நேரத்தில் ஏற் கெனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சை செலவு உடனடி யாக கிடைக்காது. காத்திருப்பு காலம் இருக்கும். மேலும், வயதான காலத்தில் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் பிரீமியம் மிக அதிகமாக இருக்கும்; பல நேரங்களில் பாலிசி மறுக்கப்படும். நிறுவனம், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை வழங்கினா லும், குறைந்தபட்சம் சிறிய அளவிலான கவ ரேஜுடன் தனியாக ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.

மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் கவரேஜ் தொகையானது ஒருவரின் உடல்நலம், குடும்ப மருத்துவ வரலாறு மற்றும் சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனையின் வகை, வசிக்கும் நகரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். நகரங்களில் வசிப்பவர்கள் ரூ,5 லட்சம், ரூ.8 லட்சம், ரூ.10 லட்சம் என்கிற அளவுக்கு பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு நிதி ஆண்டில் ரூ.25,000 வரைக்கும் 80டி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை இருக்கிறது.

முதல் சம்பளம் வாங்கப் போறீங்களா..? - முதல்ல இதையெல்லாம் முக்கியமா கவனிங்க!

டேர்ம் இன்ஷுரன்ஸ்!

பிரபாவை பொருளாதார ரீதியாக அவரின் பெற்றோர் சார்ந்திருக்கிறார்கள் என்றால் வேலைக்குச் சேர்ந்தவுடன் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் வழங்கும் டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. திருமணமாகி பிள்ளைகள் பிறந்ததும் கவரேஜ் தொகையை ஆண்டு சம்பளத்தைப் போல் சுமார் 10 முதல் 15 மடங்குக்கு அதிகரித்துக் கொள்வது நல்லது. இப்படிச் செய்யும்போது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும் குடும்ப உறுப்பினர்கள் பண விஷயத்தில் அதிகம் கஷ்டப்பட வேண்டி இருக்காது. 25 வயதுள்ள ஒருவர், ரூ.10 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுக்க ஆண்டுக்கு சுமார் 2,500 ரூபாய் அதாவது மாதத்துக்கு சுமார் ரூ.210 தான் செலவாகும். எனவே, தன் சம்பாத் தியம் தடைப்பட்டாலும் தன் குடும்பம் பணப் பிரச்னையை சந்திக்கக்கூடாது என்பதற்காக பிரபா அவரின் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். இந்த பாலிசிக்கு கட்டும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை உண்டு.

அவசர கால நிதி!

விபத்து, மார டைப்பு போன்ற ஏதா வது அவசர செலவு வந்து விட்டால், சமா ளிக்க தனியே அவசர கால நிதியைச் சேமித்து வைப்பது அவசிய மாகும். இதுவும் நிதித் திட்டமிடலின் ஒரு பகுதி தான். இந்தத் தொகை மாதக் குடும்பச் செலவை போல் 3 முதல் 6 மடங்கு இருப்பது நல்லது.

மருத்துவச் செலவு மற்றும் தற்காலிக சம்பள இழப்பு ஆகியவற்றை ஈடுகட்ட இந்த அவசர கால நிதி உதவும். மேலும், அவசர தேவைக்கான ஃபிக்ஸட் டெபாசிட் முத லீட்டை அபராதம் கட்டி உடைக்கவோ, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் இழப்போடு வெளியேறவோ தேவையில்லை. எனவே, பிரபா அவரின் மாதச் சம்பளத்தைப் போல் 3 முதல் 6 மடங்கு தொகையை அவசர கால நிதியாகச் சேர்த்து வைக்க வேண்டும்.

வருமான வரி சேமிப்பு!

நிதித் திட்டமிடலின் ஒரு பகுதி வருமான வரித் திட்டமிடல் (Income Tax Planning). நிதி ஆண்டில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை செய்யும் முதலீட்டுக்கு வருமான வரி சேமிப்பு இருக்கிறது. பி.எஃப், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் செய்யப் படும் முதலீட்டுக்கு இவ்விதம் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இப்படிச் செய்வதன் மூலம் வருமான வரிச் சேமிப்பு, முதலீடு மற்றும் நிதி இலக்குகளுக்கான பணம் என மூன்று தேவைகள் நிறைவேறுகின்றன.

இதர நிதி இலக்குகள்!

பிள்ளைகளின் உயர் கல்வி, கல்யாணம், சுற்றுலா, லேப்டாப் வாங்குவது போன்ற வற்றுக்கு அவற்றின் முதலீட்டுக் காலத் தைப் பொறுத்து சரியான திட்டங் களில் முதலீடு செய்து வர வேண்டும். சுமார் மூன் றாண்டுகள் கழித்து தேவைப் படும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு மேலான தொகையை பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட முறையில் நிதித் திட்ட மிடல் மேற்கொள்ளும்பட்சத்தில் பணப் பற்றாக்குறை என்பது இருக்காது.

வேலை பார்க்கும் பெண்கள் இந்த நிதித் திட்டத்தை உருவாக்கிக்கொள்ளும் அதே நேரத்தில், குடும்பத் தலைவிகள் தங்கள் கணவர் இந்த விஷயங்களைச் செய்திருக் கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.