
வீட்டுக் கடன்
ஏ.ஜி.வி.ஶ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/
மாதச் சம்பளக்காரர் களுக்கு மாதத்தின் ஆரம்பத்தில் இரண்டு குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) வருவது வழக்கம். முதல் எஸ்.எம்.எஸ், ‘உங்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப் பட்டுள்ளது’ என்பதாக இருக்கும். இரண்டாவது எஸ்.எம்.எஸ், ‘உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இ.எம்.ஐ பிடித்தம் செய்யப்பட்டுள்ளது’ என்பதாக இருக்கும். இந்த நிலையில், மீதமுள்ள சொற்ப சம்பளத்தைதான் இதர செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டிய கஷ்டமான நிலை.

இந்த நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கிறதா? கடன்களுக்கு பணம் செலுத்து வதுதான் மிக முக்கியமான வேலையாக இருக்கிறதா, உங்கள் சம்பளத்தில் பெரும் பகுதியைக் கடன் இ.எம்.ஐ-ஆகப் (EMI) போய்விடுகிறதா?
சம்பளம் என்பது கடன் தவணைக்கான நுழைவு வாயிலாக இருப்பதற்குப் பதிலாக நிதிச் சுதந்திரத்துக் கான நுழைவாயிலாக மாறத் தொடங்குவதற்கான வழியைப் பார்ப்போம்.
இந்த வேகமான நவீன உலகில், கனவு இல்லத்தை சொந்தமாக்குவது ஒருவரின் உணர்ச்சி மற்றும் சமூக பொருளாதார நிலையை வரையறுக்கும் நடவடிக்கை களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மிகவும் பிரபலமான அல்லது அதிகம் பயன்படுத்தப்பட்ட கடன்களில் ஒன்றாக வீட்டுக் கடன் இருக்கிறது. அதை வாங்கியிருப்பவர்கள், கடன் தவணை சுமையைக் குறைக்க சுலபமாகப் பின்பற்றக்கூடிய மூன்று நிதி சார்ந்த உத்தி களைப் பார்ப்போம்.

உத்தி 1: கடன் தவணையின் 15%...
வீட்டுக் கடன் தவணையை 15% அதிகரியுங்கள். அந்தப் பணத்தை வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனத்தில் கட்டுவதற்குப் பதில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவாருங்கள்.
ரூ.50 லட்சம் வீட்டுக் கடன், ஆண்டுக்கு 9.50% வட்டியில் வாங்கப்பட்டிருப் பதாக வைத்துக்கொள்வோம். கடனை 20, 25, 30 ஆண்டுகளில் திரும்பக் கட்டும்போது மாதத் தவணை, மொத்தம் திரும்பக் கட்டும் தொகை, வட்டிக்குச் செல்லும் தொகை ஆகியவை அட்டவணை 1–ல் விரிவாகத் தரப்பட்டுள்ளது.
கடனை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவது எனில், வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.61 லட்சமாகும். அட்டவணை 1 -ல் குறிப்பிடப் பட்டுள்ள சூழ்நிலைப்படி, வீட்டுக் கடன்: ரூ. 50 லட்சம் கடனைத் திரும்பக் கட்டும் காலம்: 20 ஆண்டுகள் வட்டி விகிதம்: 9.5% மாதத் தவணை ரூ.46,607.
இப்போது மாதத் தவணையில் 15% அதாவது, ரூ.6,990–ஐ எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக (கூடுதல் விவரங்களுக்கு அட்டவணை 2-ஐ பார்க்கவும்) வைத்துக்கொள்வோம்.
மாதம் ரூ.6,990 வீதம் 20 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம். மொத்தம் செய்த முதலீடு ரூ.16,77,600 ஆகும். ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் அது ரூ.64,29,803 ஆக அதிகரித்திருக்கும்.
கடனுக்கு கட்டியத் தவணை தொகை ரூ.61,85,574 ஆகும். இப்போது கடன் தவணையாகக் கட்டிய தொகை முழுக்க எஸ்.ஐ.பி முதலீடு மூலம் திரும்பக் கிடைத்திருப்பதோடு் கூடுதலாக ரூ.2,44,229 கிடைத் திருக்கிறது.
உத்தி 2: கடன் காலத்தை அதிகரிப்பது மற்றும் கூட்டு வளர்ச்சியின் சக்தியை சாதகமாகப் பயன்படுத்துதல்.
தற்போதுள்ள கடன் காலத்தை அதிகரிப்பது மூலம் கடன் தவணை தொகை குறையும். வித்தியாச தொகையை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருவது மூலம் வட்டிக்குச் செல்லும் தொகையைக் கணிசமாகக் குறைக்கலாம்.
உதாரணமாக, ரூ.50 லட்சம் கடனை, 9.5% வட்டியில் 20 ஆண்டுகளில் அடைப்பதாகத் திட்டமிட்டிருந்தால் மாதத் தவணை ரூ.46,607 ஆகும். இதுவே கடனைத் திரும்பக் கட்டும் காலத்தை 30 ஆண்டுகளாக அதிகரிக்கும்பட்சத்தில், மாதத் தவணை ரூ.42,043 ஆக குறையும்.
வித்தியாசப்படும் தொகை ரூ.4,564 ஆகும். (பார்க்க அட்டவணை 3). இந்தத் தொகையை ஈக்விட்டி மியூச்சுவல் திட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவருவதாக வைத்துக்கொள்வோம். இதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். வழக்கமாக பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகள் என மிக நீண்ட காலத்தில் 15%, 20% வருமானம் கிடைக்கும் என்றாலும் நாம் குறைந்தபட்சம் 12%தான் எடுத்துக்கொண்டிருக்க்கிறோம்.
வீட்டுக் கடனைக் கட்டத் தொடங்கி இருபது ஆண்டுகள் கழித்த நிலையில், வீட்டுக் கடன் பாக்கித் தொகை ரூ.32,32,791-ஆக இருக்கும். எஸ்.ஐ.பி முதலீட்டின் மதிப்பு ரூ.43,45,857-ஆக இருக்கும். இப்போது முதலீட்டு மூலமான தொகையைக் கொண்டு கடனை முழுமையாக அடைத்த பிறகு ரூ.11,13,066 மிச்சமிருக்கும்.
இப்படி செய்வதற்குப் பதில் எஸ்.ஐ.பி முதலீடு மூலம் கிடைக்கும் தொகையை கடனுக்குக் கட்டினால் அப்போதே கடன் முடிந்துவிடும். அதாவது 18-வது ஆண்டிலேயே கடனை முழுவதும் அடைத்துவிடலாம். கடனை முன் கூட்டியே அடைத்துவிடலாம்.


உத்தி 3: கூடுதல் தொகையைச் செலுத்துதல்...
வீட்டுக் கடனை விரைந்து முடிக்க, வழக்கமான கடன் தவணையைத் தவிர கூடுதல் தொகையைக் கட்டி வாருங்கள். கடன் வாங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 5% முதல் 10% தொகையைக் கட்டுவது வீட்டுக் கடனை விரைவாக முடிக்க உதவும். இந்த விஷயத் தில் தேவைப்படும் பட்சத்தில் நிதி ஆலோசகர் ஒருவரின் உதவியைப் பெறுவது நல்ல தாகும்.
இங்கே இ.எம்.ஐ என்பது வழக்கமான சாப்பாடு எனில், இ.எம்.ஐ + எஸ்.ஐ.பி = வழக்க மான சாப்பாடு + சுவையான இனிப்புகளின் கலவையாக இருக்கிறது.
சாப்பாட்டுக்குப் பிறகு சுவையான இனிப்புகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, ஏன் வெறும் சாப் பாட்டுடன் நிறுத்த வேண்டும்.
நீண்ட கால வீட்டுக் கடனை விரைந்து அடைக்கும் மூன்று விதமான உத்திகளை விளக்கி இருக்கிறோம். இவற்றை பயன்படுத்தி லாபம் அடைய வாழ்த்துகள்.