
பி.எஃப்
கொரோனா சமயத்தில் எல்லோருமே நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். பெரும்பாலானோர் பிஎஃப் தொகையை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பலருக்கும் அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.
காரணம், பி.எஃப் கணக்கில் வங்கிக் கணக்கு சேர்க்காதது, ஆதார் இணைக்காதது, ஆதாருக்கும், பி.எஃப்பில் உள்ள தகவல்களுக்கும் முரண்பாடு, ஆதாரில் மொபைல் எண் இணைக்காதது, பெயர் குழப்பம் எனப் பல பிரச்னைகள். இதனால் கொரோனா கால கட்டத்தில் பலரும் பி.எஃப் தொகையையோ, பென்ஷனையோ, இறப்புக்குப் பிறகான க்ளெய்மோ பெற முடியாமல் கஷ்டப்பட்டனர்.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், பி.எஃப் அலுவலகத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நேரடியாக விசிட் செய்தோம். பி.எஃப் தொடர்பான மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பேசினோம். அவர் கூறியதாவது...

‘‘கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த சமயத்தில் மக்கள் பெருமளவில் வந்ததால், அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடிய வில்லை. அலுவலகத்தில் ஊழியர்கள் குறைவான அளவிலேயே இருந்தனர். ஆனால், தற்போது பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்திய பிறகு, எப்போதும் போல பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முழு அளவில் பணியாற்றுகின்றனர். பி.எஃப் சார்ந்து பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலமாகவே பெறும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பி.எஃப் தொடர்பான பல பிரச்னை களைத் தீர்த்துக்கொள்ள மக்கள் பி.எஃப் அலுவலகம் வர வேண்டியதில்லை.
ஆன்லைன் க்ளெய்ம் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ஆன்லைனில் அதற்கான முயற்சி தோல்வி அடைந்ததற்கான காரணம், உடனே உங்களுக்கு கம்ப்யூட்டர் ஸ்கீரினில் தெரிவிக்கப்படும். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வந்தால், அதற்கான தீர்வுகளை பி.எஃப் அலுவலகத்தில் ஊழியர்கள் வழங்குவார்கள்.
பெரும்பாலானோர் தங்களுக்கு என்ன சேவை தேவையோ, அதற்குத் தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வருவதில்லை. அடையாள அட்டை, ஆதார் கார்டு, உறுப்பினர் விவரங்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங் களை உடன் வைத்துக்கொள்வது சேவையை உடனடியாகப் பெற உதவும். ஒவ்வொன்றுக்கும் அலைய வேண்டியதில்லை.
மற்றபடி பி.எஃப் கணக்கில் வங்கிக் கணக்கு சேர்க்க, ஆதார் இணைக்க, ஆதாரில் மொபைல் எண் இணைக்க இங்கு வர வேண்டியதில்லை. ஆன்லைனில் உறுப்பினர்களே அவற்றை உள்ளீடு செய்து, பின்னர் அந்தந்த நிறுவனத் தாரின் ஃபைனான்ஸ் பிரிவினரிடம் தெரிவித் தால், அவர்களே அதை அப்ரூவ் செய்துவிடு வார்கள். மேலும், பி.எஃப் உறுப்பினர் வேறு வேலைக்கு மாறும்போது முந்தைய நிறுவனத் தில் பயன்படுத்தி வந்த யு.ஏ.என் நம்பரைப் புதிய நிறுவனத்தில் வழங்க வேண்டும்.
அதேபோல, நிறுவனத்தார் பி.எஃப்பில் உறுப்பினரைச் சேர்க்கும்போது பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். பெரும் பாலானோருக்கு பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட வற்றில்தான் பிரச்னை வருகிறது.
க்ளெய்ம் பெற விரும்புபவர்கள் க்ளெய்ம் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். க்ளெய்ம் பெற உள்ள தகுதிகள், அதில் உள்ள கோரிக்கை வாய்ப்புகள், க்ளெய்ம் தொகை வரம்பு உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொண்டு, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். நாமினி விவரங்களை இ-நாமினேஷன் வசதி மூலம் ஆன்லைனிலேயே பதிவேற்றலாம்.
இதுவரை பி.எஃப் உறுப்பினர்கள் சேவை களுக்கான இணையதளத்துக்கு ஒரு முறைகூட சென்று பார்க்காதவர்கள் முதலில் பி.எஃப் தளத்துக்குச் சென்று தங்களது யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆக்டிவேட் செய்து லாக்இன் செய்ததும் அதில் தனிப்பட்ட விவரங்கள், அதுவரை வேலை செய்த சர்வீஸ் ஹிஸ்டரி போன்ற விவரங்கள் இருக்கும். அதில் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு இருக்காவிட்டால் அவற்றை இணைக்க வேண்டும்.
பின்னர் நாமினி விவரங்களை இணைக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உள்ள முந்தைய பி.எஃப் கணக்குகளைப் புதிய கணக்கோடு பரிமாற்றம் செய்துகொள்வதும் அவசியம்’’ என்று தெளிவாகச் சொன்னார்.
இவற்றைப் பின்பற்றினால் பலருக்கும் பி.எஃப் பிரச்னை தீரும்!