லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கவனத்துக்கு... திட்டமிடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

சிறு, குறு தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறு, குறு தொழில்

அடிக்கடி சமூக வலைதளத்தில் உங்கள் பொருள் பற்றிப் பகிரலாம்.

ரோனாவால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பாதிப்படையாமல் இருக்க, இன்னும் 45 நாள்களுக்குள் உற்பத்திப் பொருள்களை இ-மார்கெட் மூலம் விற்பனை செய்ய வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தச் சூழலில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்குக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை விளக்குகிறார் `டை சென்னை' நிறுவனத்தின் செயல் இயக்குநர் அகிலா.

திட்டங்களை மாற்றுதல்...

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஏற்பவும் அதன் லாபத்தை அதிகரிக்கவும் சில திட்டங்கள் இருக்கும். அவற்றை இப்போது இருக்கும் சூழலுக்கு ஏற்ப சில மாதங்களுக்கு மாற்றி அமைப்பது நல்லது. உற்பத்தி மற்றும் விற்பனைக்காக நிறுவனம் வழக்கமாக நிர்ணயித்த செலவை குறைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க...

அடுத்த சில மாதங்களுக்கு நிறுவனத்தின் லாபத்தை விட வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதே முக்கியம் என்பதை நினைவில்கொண்டு செயல்பட வேண்டும். மக்களின் வாங்கும் மனநிலையைப் பொறுத்து விலை குறைத்தோ/விற்பனை முறையில் சில மாறுதல்களைச் செய்தோ பொருள்களை விற்கலாம். வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பொருள் பற்றிய சிந்தனை இருந்துகொண்டே இருக்க வேண்டும். இதுவரை ஆன்லைன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், அதைத் தொடங்கலாம். அடிக்கடி சமூக வலைதளத்தில் உங்கள் பொருள் பற்றிப் பகிரலாம். ஈஸி டு ரீச்சாக இருந்தால் அடுத்த சில மாதங்களில் உங்கள் பிசினஸ் இயல்பு நிலையை அடையும். கொரோனாவுக்குப் பிறகும் உங்கள் பொருள்கள் எவ்வளவு தூய்மையாகத் தயாரிக்கப்படுகிறது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறாதீர்கள்.

நஷ்டத்தைத் தவிர்க்க...

பொருள்கள் அதிக அளவில் விற்பனையானால் மட்டுமே நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என்பதில்லை. அதேநேரம் உற்பத்திச் செலவைக் குறைத்து சந்தைப்படுத்துதலுக்கான செலவைக் குறைத்தாலும் நஷ்டத்தைத் குறைக்கலாம்.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கவனத்துக்கு...
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கவனத்துக்கு...

தொழிலாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் கொடுத்தால் மின்சாரம், கட்டட வாடகை, பராமரிப்பு செலவு போன்றவற்றைக் குறைக்க முடியும்.

முதலீடு அவசியம்...

சூழல் இயல்புநிலைக்குத் திரும்பும்போது பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இயந்திரங்களைப் பழுது பார்ப்பது, உற்பத்திக்கான புதிய பொருள்களை வாங்குவது எனக் குறைந்த அளவு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இந்தச் சூழலில் சிறு குறு தொழிலுக்கென அரசு வழங்கும் சலுகைகள் என்ன என்பதை மாவட்ட தொழில் மையங்களை அணுகித் தெரிந்துகொள்ளலாம்.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கவனத்துக்கு... திட்டமிடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

கடன் கையாள...

உற்பத்தி செய்தவற்றையெல்லாம் முதலில் விற்று, அதில் கிடைக்கும் பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். இதற்கு வாய்ப்பில்லை எனில், முத்ரா திட்டம், NEEDS போன்று குறைந்த வட்டி விகிதத்தில் அரசு கொடுக்கும் கடனுதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாதத் தவணை செலுத்துபவர்கள் எனில், உங்களின் மற்ற முதலீடுகளையோ, சேமிப்பையோ பயன்படுத்தி மாதத் தவணைகளை கட்டிவிடுவது நல்லது. ஏற்கெனவே தொழிலுக்கான கடனில் இருப்பவர்கள் உங்களின் முதலீடுகள் அல்லது சேமிப்பை பயன்படுத்திச் சூழலை சமாளிக்கலாம்.

போட்டிகளைச் சமாளிக்க...

அடுத்த சில மாதங்களில் நிறைய நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்யக்கூடும். அதனால் அதிகமானோர் புதிய தொழில் முனைவோர் ஆக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்குக் கூடுதல் போட்டிகளும் சவால் களும் இருக்கும்.

இவற்றைச் சமாளிக்க உங்கள் பொருளின் தரத்தில் எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாதீர்கள்.சூழலுக்கேற்ப விற்பனை முறையை மாற்றி அமைத் தால், அடுத்த சில மாதங்களிலேயே பிசினஸை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம்.