
மார்க்கெட்ல இருக்குற கப் சாம் பிராணிகள், தூபங்கள்ல தீ பற்றுவதற்கு அதிக ரசாயனக் கலப்பு இருப்பதால எளிதில் பற்ற வெச்சுடலாம்.
``கொரோனா காலத்தில் எல்லாரும் வீட்டுல முடங்கினப்போ, டல்கோனா காபி யில இருந்து கேக் வரை புதுசா செஞ்சு பார்த்தாங்க. அந்த மாதிரி நான், மூலிகைப் பொருள்களைக் கொண்டு பூஜை பொருள்கள் செஞ்சு பார்த்தேன். இயல்பிலேயே ஆன்மிகத் தில் நாட்டம் கொண்ட எனக்கு, அந்த முயற்சி திருப்தியான ரிசல்ட் கொடுத்துச்சு. ஒருகட்டத்தில் அதையே தொழிலா எடுத்து செய்ய ஆரம்பிச்சேன். இப்போ இந்தியா மட்டுமில்லாம சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்பட எட்டு நாடுகளுக்கு போகுது என்னோட மூலிகை பூஜை பொருள்கள் தயாரிப்பு’’ - சுவாரஸ்ய அறிமுகம் தருகிறார், திண்டுக்கல்லை சேர்ந்த மீனாட்சி.
அடிப்படையில் ஓர் ஆசிரியரான மீனாட்சி, தொழில்முனைவோராக மாறிய பயணம் குறித்து விரிவாகப் பேசினார். ``எம்.ஏ., பி.எட்., எம்ஃபில்., பிஎச்.டி வரை படிச்சிருக்கேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி தெரியும். அதனால தமிழகம் மட்டுமில்லாம வடமாநிலங்கள்லயும் ஆசிரியர் வேலை பார்த்திருக்கேன். கொரோனா காலத்தில் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கல. அதனால, பூஜைக்கு பயன் படுத்தும் ஊதுபத்தி, சாம்பிராணியை தயாரிச்சுப் பார்க்கலாமேனு நினைச்சேன். முதல்ல சித்தர்கள் தொடர்பான புத்தகங்களைப் படிச்சேன். பின்னர் நாட்டுமாடுகள், மூலிகை தொடர்பான புத்தகங்களை வாசிச்சேன். நாட்டுமாடுகளின் சாணம், கோமியத்தின் பலன்கள் தெரியவந்தது.
கிருமி எதிர்ப்பு ஆற்றல் அதிகமா இருக் கும் ஒரு பொருள், நாட்டுமாடு சாணம். அதனாலதான் அது நம்ம சடங்குகள்ல இடம்பிடிச்சிருக்கு. அதை அடிப்படையாகக் கொண்டு, நானே தயாரிப்பு முறையை உருவாக்கி நாட்டுமாட்டின் சாணத்தை சேகரித்து அதில் மூலிகைப் பொருள்களை சேர்த்து உருளை கப் சாம்பிராணி, விளக்கு கப் சாம்பிராணி, பத்திகளை கைகளால தயாரிச்சேன். அதில் நம்பிக்கை கிடைத்த தைத் தொடர்ந்து, ஒரு மெஷின் வாங்கினேன். வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாட்டுமாடு வளர்ப் போரை அணுகி சாணம் சேகரிச்சு, அதை பொடியாக்கி வாங்கினேன்.
அடுத்ததா கொல்லிமலை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஆலமரப்பட்டை, அரசமரப்பட்டை, வெண்கடுகு, நாட்டு கடுகு, மருதாணி விதை, துளசி, சுக்கு, வெட்டிவேர், நொச்சி, மஞ்சள், குங்கிலியம் உள்ளிட்ட மருத்துவகுணம் கொண்ட 108 மூலிகைப் பொருள்களை சேகரிச்சேன். அதையெல்லாம் அரைச்சு பொடியாக்கி, தேவையான விகிதத்தில் கலந்து சாம்பிராணி, பத்தி, தூபம் ஆகியவற்றை தயாரிச்சேன். முதல்ல உறவினர்கள், நண்பர்களுக்கு இலவசமாக கொடுத்து கருத்துகளை கேட் டேன். அதுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்தேன். அப்புறம் `உ லாபம்’ போட்டு பிசினஸை ஆரம்பிச்சாச்சு’’ என்று சிரிப் பவர், ` ஹெர்போலைட் பஞ்சகவ்யா’ என்ற பெயரில் தன் தயாரிப்பு பொருள்களை விற்பனை செய்கிறார்.

``மார்க்கெட்ல இருக்குற கப் சாம் பிராணிகள், தூபங்கள்ல தீ பற்றுவதற்கு அதிக ரசாயனக் கலப்பு இருப்பதால எளிதில் பற்ற வெச்சுடலாம். ஆனா எங்க தயாரிப்புகள்ல மூலிகைப் பொருள்கள் அதிமாக கலந்திருப்பதால அந்தளவுக்கு வேகமா தீ பற்றாது. ஆனா, வாடிக்கை யாளர்கள் அதை பெருசா எடுத்துக்கல. காரணம், எங்க தயாரிப்பு அவங்களுக்குக் கொடுத்த அனுபவம். ‘உங்க பூஜை பொருள் கள்ல இருந்து வர்ற வாசனை, பூஜையறை யையும் வீட்டையும் கோயிலாவே மாற்றி விடுற அளவுக்கு மணமும் இதமும் தருது’னு சொல்லி, வாங்கின எல்லாரும் எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆகிட்டாங்க.
இப்போ கூடுதல் மெஷின்கள் வாங்கிப் போட்டிருக்கேன். ஏழு பெண்கள் என்கிட்ட வேலைபார்க்கிறாங்க. ஆன்லைனிலும் விற்கிறோம். மும்பை, டெல்லி, ஒரிசா, ராஜஸ்தான்னு வெளிமாநிலங்கள்ல இருந்து லண்டன், அமெரிக்கா, ஜெர்மன், மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்பட எட்டு வெளி நாடுகள் வரை எங்க பொருள்கள் போகுது. மாசம் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை உற்பத்தி செய்றோம். லட் சங்கள்ல லாபம் பார்க்கிறோம்’’ என்று ஆச்சர்யம் அளித்தவர், கப் சாம்பிராணி, தூபம், பத்தி, வாஸ்து பத்தி, திருஷ்டி சூடம், விபூதி என 17 வகையான பூஜைப் பொருள் களை 60 ரூபாயில் இருந்து 540 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்.
``தாய்மார்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திருஷ்டி சூடம் பத்தி சொல்லணும். நம்ம தாத்தா, பாட்டி திருஷ்டி போக்க மிளகாய் வத்தல், உப்பு, மிளகு போட்டு தலையைச் சுற்றி வீட்டு வாசல்ல தீ வைப்பாங்க. ஆனா இன்றைய தலைமுறை யினருக்கு அதை செய்றது சிரமம், எப்படி செய்றதுனும் தெரியுறதில்ல. அதனால, மிளகாய் வத்தல், உப்பு, வெட்டிவேர், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை கலந்து திருஷ்டி சூடம் தயாரிச்சோம். யங் மாம்ஸ் விரும்பி வாங்குறாங்க’’ என்று சொல்லி கட்டைவிரல் உயர்த்துகிறார் மீனாட்சி.