பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வங்கிக் கடன் முதல் ஜி.எஸ்.டி சிக்கல் வரை... கோரிக்கை வைத்த ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்!

நிதியமைச்சர் சந்திப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
நிதியமைச்சர் சந்திப்பு...

சந்திப்பு

விரைவில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் நிதியமைச்சர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில், தொழில் கூட்டமைப்புகள் சார்பாக பட்ஜெட் கோரிக்கைகளை யும், பரிந்துரைகளையும் முன்வைப்பது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தின் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பாக அதன் தலைவர் வ.நாகப்பன் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். நிதியமைச் சரிடம் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன, சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி அவரிடம் பேசினோம்.

“பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு பரபரப்புகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்த நிலை யிலும் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் கோரிக்கையை ஏற்று சந்திப் பதற்கான நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

பொருளாதார நடவடிக் கைகள், தொழில்துறை சந்திக்கும் சவால்கள், நேரடி வரி மற்றும் மறைமுக வரி எனப் பல்வேறு விவகாரங் களில் எங்களுடைய கோரிக்கைகள், பரிந்துரை களை விரிவாக அவரிடம் ஆவணமாகச் சமர்ப்பித் தோம். அவற்றில் முக்கியமான விஷயங்களை சந்திப்பின் போது அவரிடம் நேரில் விளக்கினோம். ஏற்கெனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் திட்ட மிட்டு செயல்படுத்தி வருகிறது. அவற்றைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

வங்கிக் கடன் முதல் ஜி.எஸ்.டி சிக்கல் வரை... கோரிக்கை வைத்த
ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்!

குறிப்பாக, வங்கிகளில் வாங்கிய கடன்களைச் செலுத்த முடியாமல் போகும் நிலையில், வங்கிகள் கடனை வசூலிப்பதற்காக கடன் வாங்கியவரிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்வது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் மூலமாக விற்பனை செய்து கடன்களை வங்கிகள் மீட்டுவருகின்றன.

இதில் சிக்கல் என்ன வெனில், சொத்துகளைப் பறிமுதல் செய்து விற்பனை செய்த பிறகு, அந்தச் சொத்து களின் மீதான நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான நோட்டீஸ் வருமான வரித் துறையிடமிருந்து கடன் வாங்கியவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே கடன் வாங்கி அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் இருந்ததால் சொத்துகளை விற்கும் நிலையில், மீண்டும் அவர் களுக்கு மூலதன ஆதாய வரி செலுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்பும்போது பெரும்பாலானவர்களால் அந்த வரியைச் செலுத்த முடியாமல்போகிறது. இதனால் அரசுக்கு வரி வருவாய் பாதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, கடனை மீட்க சொத்துகளைக் கைப்பற்றி விற்பனை செய்து காசாக்கிய வங்கிகளே மூலதன ஆதாய வரியையும் ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும். இதன்மூலம் அரசுக்கும் வரி வருவாய் சரியாக வந்துசேரும் என்று கூறினோம்.

பிறகு சமீபத்தில் அறக்கட்டளைகள் சார்பாக உச்ச நீதிமன்றம் புதிய ஆணை ஒன்று பிறப்பித்தது. அதாவது, அறக்கட்டளைகள், கூட்டமைப்புகள் போன்றவை தங்களின் பதிவுப் பத்திரத்தில் குறிப்பிட்ட செயல்களைத் தவிர, வேறு செயல்களில் ஈடுபட்டால் அவற்றின் வருவாய் மீது வரி விதிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கைதான் என்றாலும், இந்த உத்தரவால் சில நியாயமாகச் செயல்படும் அமைப்பு கள் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பிருக்கிறது. எனவே, இது தொடர்பான ஆணையை மேலும் தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும் என்பதையும் அவருடைய கவனத்துக்கு உட்படுத்தினோம்.

எல்லோரும் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி வரம்பு தொடர்பாகவும், ஜி.எஸ்.டி தொடர்பாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி தொடர்பாக இருக்கிற சிக்கல்களையும் கூறியிருக்கிறோம். இதுபோக வருமான வரி விவகாரங்களில், மேல்முறையீடு செய்வது, அபராதம் விதிப்பது போன்றவற்றிலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

நாம் சொன்ன அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார் நிதியமைச்சர். கோரிக்கைகள், பரிந்துரைகள் அனைத்தையும் பரிசீலனை செய்வ தாகவும், சம்பந்தப்பட்ட துறைகளோடு விவாதித்த பிறகே எந்த முடிவும் எடுக்க முடியும் என்றும் நிதியமைச்சர் கூறினார். வருகிற பட்ஜெட்டில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கேற்ப அறிவிப்புகள் வெளியாகும் என்று நம்புகிறோம்” என்றார்.

ஆவலோடு பட்ஜெட்டை எதிர்பார்ப்போம்!